முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
ஆம்.. நீங்கள் எதிர்பார்த்ததே தான் அப்போது நடந்தது..
அந்த வழிப்போக்கன் அவரைக் கீழே உதறித் தள்ளிவிட்டு குதிரையை விரட்டிச் சென்றான்.. சாது நிகழ்வதறியாது குழம்பி நின்றார்.. குதிரை சிறிது தொலைவு சென்றதும், திரும்பி அவரைப் பார்த்து புன்னகைத்தான்..
உங்கள் குதிரையைக் களவாடுவதே என் நோக்கம்.. நிறைவேற்றிவிட்டேன்.. வருகிறேன்..
சாதுவிற்க்கு இப்போது நடந்ததனைத்தும் விளங்கியது..
குதிரையில் கிளம்ப ஆரம்பித்தவனை நோக்கி கத்தினார்..
நில்.. நான் சொல்வதை ஒரு நிமிடம் கேட்டு விட்டுச் செல்.. இதில் ஏதும் உள்நோக்கமில்லை..
ம்ம்ம்.. சீக்கிரம்..
என் குதிரையை நீயே வைத்துக் கொள்.. ஆனால், ஒரே ஒரு கோரிக்கை.. நிறைவேற்றுவாயா?
என்ன.. சொல்லுங்கள்..
வேறொன்றுமில்லை.. இனி ஒருவரைக் களவாடுவதாகயிருந்தால், நேரடியாக அவரிடத்தில் சென்று திருடிவிடு.. இது போல் நாடகம் நடத்தாதே..
????!!!!!!!
நடந்த இந்தச் சம்பவம் என் மனதை விட்டு மறையாது.. இனி எவன் என்னிடம் உதவி கேட்டாலும், அவனை சந்தேகக் கண் கொண்டு தான் பார்ப்பேன்.. என்னால் எந்த வழிப்போக்கனுக்கும், ஊனமுற்றவனுக்கும் உதவ முடியாதபடி செய்துவிட்டாய்.. உண்மையாலுமே யாருக்காவது உதவி தேவைப்பட்டாலும், என்னால் உதவ முடியாது.. இது என்னோடே போகட்டும்... இன்னுமொரு மனிதனின் மனத்தில் இது போன்ற வலியையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிடாதே..
சொல்லி முடித்துவிட்டீர்களா?
ம்ம்..
நன்றி.. நான் செல்கிறேன்..
திருடன் தன் இருப்பிடத்தை நோக்கி குதிரையைச் செலுத்தினான்..
சாது மெல்ல தன் வீட்டிற்க்கு நடந்து வந்து சேர்ந்தார்.. குதிரை கட்டுமிடத்தைப் பார்த்ததும் மீண்டும் வலி ஏற்ப்பட்டது.. உறங்கிப் போனார்..
நடுநிசியில் குதிரை கனைக்கும் சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்து வந்து பார்த்தார்.. அவருடைய குதிரை அங்கு நின்று கொண்டிருந்தது.. கூடவே ஒரு ஓலையில் திருடரின் வாசகமும்..
என்னிடம் குதிரையை இழந்து நீங்கள் தோற்றதின் விளைவு பன்மடங்காகப் பெருகி அப்பாவிகளை பாதிக்கக் கூடும் என்று உணர்வதால்..
இம்முறை நான் தோற்க்கிறேன்.. நீங்கள் வெல்கிறீர்கள்..

கதை இத்துடன் முடிந்தது..
கதைக்கும் ஸ்கேட்டிங் சிறுவனுக்குமான தொடர்பை என் பார்வையில் அடுத்து சொல்லுகிறேன்..
கங்க்ராட்ஸ் எல்போர்ட். குதிரை கதை சொல்லி முடித்ததற்கு. :)
ReplyDeleteநன்றி இமா.. பொறுமையா :) கதை கேட்டு முடித்ததற்கு :)
ReplyDeleteகதை நல்லா இருக்கு.. இனிமே நானும் அடுத்தவங்ககிட்ட திருடும்போது பொய் சொல்லாம திருட மட்டும் செய்றேன்.. (மனச சொன்னேங்க)
ReplyDeleteஒரு திருடர் திருந்திவிட்டார்.. என்னவொரு வெற்றி :))
ReplyDelete