28 January 2010

ரங்கோலி

இங்க எழுதறவங்க நிறைய பேர் தனக்குன்னு ஒரு genre வச்சிருக்காங்க.. தனக்கு என்ன நல்லா வருதோ அதை களமா தேர்ந்தெடுக்கறாங்க.. சிலர் மொக்கை, சிலர் கதை கவிதை கட்டுரை, சிலர் அரசியல், சிலர் தன்னோட ரசனைகள் பார்வைகள், சிலர் சீரியசா ஏதாவது பிரச்சனையப் பத்தி, பெண்கள் நிறைய பேர் சமையல், குடும்பம் அப்படின்னு.. இன்னும் கொஞ்சம் பேர் தனக்கு தெரிஞ்சத சொல்லித் தராங்க.. இதுல நான் ஏதாவது ஒரு வகைல ஃபிட் ஆவேன்னு தோணல.. பல மரமும் கண்ட தச்சான் ஒரு மரமும் வெட்டான் மாதிரி :) இன்னைக்கு இன்னொரு புது அட்டெம்ப்ட்..
 ~~~~~*****~~~~~

டொயோடா வச்சிருக்கீங்களா?

கோயிலுக்கு ஒருக்கா போயிருந்தப்போ கொஞ்சம் நண்பர்கள் அங்க வரிசையா பார்க் பண்ணியிருந்த காரையெல்லாம் பாத்துட்டு சிரிச்சாங்க.. டொஹோ.. டொஹோஹோ... டொஹோடொடொஹோ ன்னு :)) டொயோடா ஹோண்டா இந்த ரெண்டும் தான் இங்க  நம்மாளுங்களோட விருப்ப ப்ராண்ட்ஸ்.. இந்த ரெண்டையும் தவிர மத்த வண்டிகள் குறைவு தான்.. காரணம் - ரீ சேல் வேல்யூ இந்த ரெண்டுக்கும் அதிகம்ன்னு சொன்னாங்க.. அப்படி இந்த ரெண்டு கம்பெனிக்கும் நிரந்தர விசுவாசிகளா இருந்தவங்களுக்கு இப்போ ஆப்பு கொடுத்துட்டாங்க. ஹோண்டா வச்சிருக்கறவங்க இப்போதைக்கு அதிர்ஷ்டசாலிகள்.. டொயோடாக்காரங்க? :(ஒரு வருஷமிருக்கும்.. நாங்க நண்பர்களோட சுற்றுலா போயிருந்தப்போ ஒரு புது டொயொடா கேம்ரி விபத்துக்குள்ளாச்சு.. அவங்களும் அதிலிருந்து மீண்டு மறந்து இப்போ இன்னோரு டொயொடா வாங்கியாச்சு.. மறுபடியும் டொயொடா? தன்னுயிர் நீத்து அவங்க உயிரை காப்பாத்திடுச்சாம் அந்த வண்டி.. அந்த நன்றிக்கடன்.. இன்னைக்கு நொந்து நூடுல்ஸாயிருக்காங்க..

செய்திகள்ல படிச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்.. தன்னோட பல ரக வாகனங்களோட சேல்ஸை டொயோடா நிறுத்தி வச்சிருக்கு.. காரணம் என்னன்னு அவங்களே சொல்லியிருக்காங்க - சில சமயம் அக்ஸலரேட்டர் பெடல (கேஸ் பெடல்) அமுக்கிட்டு ரிலீஸ் பண்ணினா அது உடனே பழைய நிலைக்கு திரும்பறதில்லயாம்.. ஏற்கனவே தெரிய வந்தது தான்.. முதல்ல ஃப்ளோர் மேட்ஸ் மேல காரணம் சொல்லியிருந்தாங்க.. இப்போ (என் மண்டைக்கு புரிஞ்ச வரைக்கும்) அந்த பெடலோட லீவர்ல உராய்வு பிரச்சனைனு கண்டுபிடிச்சிருக்காங்க..  எப்ப இந்த மாதிரி ஆகும்ன்னு சொல்ல முடியாதாம்... ஆன பின்னாடி தான் தெரிய வருமாம் :) .. வெயில்ல ஏசி போட்டாலும் ஆகுமாம்.. குளிர்ல ஹீட்டர் போட்டாலும் ஆகுமாம்.. என்னத்தச் சொல்ல? சேல்ஸை நிறுத்தினது சரி.. அப்ப, ஏற்கனவே ஓட்டிட்டு இருக்கறவங்க, இப்ப புதுசா வாங்கியிருக்கறவங்களோட நிலைமை???!!!  இவங்களுக்கும் மாத்தி தருவாங்களான்னு இப்போதைக்கு தெரியல.. ஹைவே ல மணிக்கு அறுவத்தஞ்சு எழுவது மைல்ஸ் ன்னு போயிட்டு இருக்கும் போது இப்படியாச்சுன்னா என்ன செய்ய முடியும்?

நம்ம நண்பர் இதையெல்லாம் படிச்சுட்டு ரொம்ப நேரம் யோசன பண்ணினார்.. சிலருக்கு சம்பவ இடத்துல நடந்ததெல்லாம் மறந்துடும்.. நல்லவேளையா இவருக்கு நினைவிருக்கு.. தன்னோட விபத்துக்கும் இந்தப் பிரச்சனை தான் காரணமோன்னு இப்போ ஆராய ஆரம்பிச்சிருக்கார்.. பகீர்ன்னு இருக்கு.

மித வேகம் எப்பவுமே மிக நன்று.. இப்போதைக்கு மிக மிக நன்று.. 

~~~~~*****~~~~~
 
கற்கும் முறைகள்

சர்வே குரங்கார் தமது பணியான சர்வே ஒன்றிற்காக எனக்கு ஒரு கேள்வித்தாள் அனுப்பியிருந்தார். அதில், கீழுள்ளவற்றில் எவற்றை மிகச் சிறந்த கற்கும் முறைகள் என்று எண்ணுகிறீர்கள் என்று ஒரு கேள்வி.. சாய்ஸ்கள் -

 • ஆசிரியர் தரும் லெக்சர்கள்
 • செய்த வேலையை ஆசிரியருடன் விவாதித்தல்
 • கணிணியில் வரும் பாடங்கள்
 • புத்தகங்கள்
 • ஜர்னல்கள்

எனக்கென்னமோ ஆசிரியரிடம் நேராக நின்றோ அமர்ந்தோ கற்றுக் கொள்வது போன்று மற்றவை வராதென்று தோன்றுகிறது. சிறிது நாட்களுக்கு முன்பு படித்த, குழந்தைகளுக்கான மன ஆய்வாளர் ஒருவரின், கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது.. அதில் அவர், வீடியோ ஒன்றினை போட்டுவிட்டு தம் குழந்தைகளுக்கு ஏ பி சி டி  கற்றுத் தரும் தாய்மார்களின் முறையை சாடியிருந்தார். நேரில் நீங்கள் உங்கள் முக அசைவுகளுடன் ஆப்பிளையோ அதன் உருவத்தையோ காட்டி சொல்லித் தருவது தான் குழந்தைகளின் மனதில் அழுத்தமாக பதியும்.. வீடியோவை விளையாட்டாக போட்டுக் காண்பித்தால் பரவாயில்லை.. ஆனால் அதையே உங்கள் முறையாகக் கொள்வது தவறு என்று கூறியிருந்தார். எனக்கும் அதுவே சரியென்று பட்டது.

ஆசிரியரொருவர், நேரில் தன் பயமுகங்காட்டி, தூங்கும்போது தட்டியெழுப்பி, கேள்விகள் பல கேட்டு, பதில் தெரியாமல் திணறுகையில் திட்டி, அரிதாக பாராட்டி, கரணம் அடித்தோ இல்லை பிற சேஷ்டைகள் செய்தோ, தன்னுடைய அனுபவங்களையும் பாடங்களையும் சொல்லித் தருவது போன்று வீடியோ ஆசிரியரால் முடியாது (யார் கண்டது, சில ஆண்டுகளில் இதுவும் நடந்தாலும் நடக்கலாம்). நான் சொல்வது - நன்றாக கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களைப் பற்றி மட்டுந்தான்.. ஏனோதானோவென்று வகுப்பிற்கு வந்தோடுபவர்களுக்கு பொருந்தாது.  கரும்பலகை சாக்பீஸிலிருந்து ஸ்லைட் ஷோக்கு மாறியது ஓகே. ஆனால் மனிதர் என்பவரே இல்லாமல் கணினியாரே முழுமுதற் ஆசிரியராக உருவெடுக்கும்  நிலை வந்துவிடுமோ என்ற கவலை வந்து விட்டது திடீரென்று.


 என்னுடைய சாய்ஸ்.. மேற்ச்சொன்ன எல்லாமே கற்றுத் தருவன தான்.. அதில் மிகச் சிறந்ததாக கேட்டிருப்பதால் முதலிரண்டை சொல்லிவிட்டேன்.. உங்கள் சாய்ஸ் என்ன?

*****~~~~~ ‘ ^  ’ ~~~~~*****

16 comments:

 1. சந்தனா, எனக்கும் இந்த வீடியோ, டி.வி. பார்த்து பிள்ளைகள் பழகுவதில் உடன்பாடில்லை. சில மாதங்களின் முன்பு சில பெற்றோர்கள் Little Einstein என்ற கம்பெனியின் மீது வழக்கு தொடர்ந்தார்கள். காரணம், அவர்களின் டி.வி.டி பார்த்து குழந்தைகள் (அவர்களின் விளம்பரங்களில் சொன்னது போல) எதையும் கற்றுக்கொள்ளவில்லையாம்.அடப்பாவிகளா!! டி.வி யை போட்டு விட்டு பெற்றோர் போனில் அரட்டை, கம்யூட்டர் என்று இருந்தால் குழந்தை எப்படி அறிவை வளர்த்துக் கொள்ளும். இது கூட தெரியாமல் என்ன ஒரு அறிவீனம்.

  ReplyDelete
 2. ஹாய் ! எங்க குடும்பமே ஹோண்டா குடும்பம்... கேக்காதீங்க.. இவர் பிரெண்ஸ் எல்லாருமே ( ஒரே வகுப்பு தோழர்கள்) எல்லாம் முதல் காராவது ஹோண்டா... இப்போ எனக்கு ஹோண்டா என்றாலே வேண்டா வெறுப்பு... அக்கார்ட் வாங்கி நான் ஓட்ட 2 வருஷம் ஆச்சு.. வெறுப்பு தான் ..

  படிக்கறதில எனக்கு பிடிச்சது ஒரு கிளாஸ்ல உக்காந்து கொஞ்சமாவது பெஞ்சி தேச்சு.. அப்புறம் முதல் பெஞ்சா இருந்தா ஒரு ஷவர் ... கி..கி...கி..கி..

  ReplyDelete
 3. நன்றி வானதி.. கரெக்டா பாயிண்ட பிடிச்சுட்டீங்க.. நீங்க சொன்ன அதே வழக்கைத் தொடர்ந்து வெளி வந்த அலசல் கட்டுரை தான் நான் படிச்சது. வீடியோ போட்டு விட்டு உட்காந்துட்டா குழந்தை ஐன்ஸ்டீன் ஆயிடுமா? :))

  ReplyDelete
 4. நன்றி இலா.. இங்க எல்லாரும் அலசறதே இந்த ரெண்டு மட்டுந்தான்.. பாதிப் பேர் இது மீதிப் பேர் அது..

  க்ளாஸ் போரடிச்ச காலமுண்டு.. அப்ப நிறைய பேர் இருந்தாங்க.. இப்பவெல்லாம் ஒரெ வரிசை தான்.. நல்லாதானிருக்கு

  ReplyDelete
 5. நல்ல பதிவு.. சுவாரஸ்யமாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 6. ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ

  எதுக்கு சிரிக்கிறேன்னு இன்னுமா தெரியல?

  கற்கும் முறைகள்ல எனக்கு எதுவுமே பிடிக்கலை..

  ReplyDelete
 7. அப்டேட் -

  டொயோட்டா ரீ-கால் குடுத்துருக்கான். வச்சிருக்கிறவங்க எல்லாம் ஓடிப்போய் ஃபிக்ஸ் பண்ணிட்டு வாங்கோ..

  ReplyDelete
 8. முதல்ல சொன்ன கமெண்ட்ட பேக் வாங்கிக்கிறேன்.

  இன்னும் என்ன தீர்வுன்னு யோசிச்சிட்டுத்தான் இருக்காங்களாம்.

  ReplyDelete
 9. நன்றி அண்ணாமலையான்..

  ReplyDelete
 10. ஹி ஹி.. கற்பதே எனக்கு பிடிக்காது.. :))
  அவங்க கொடுத்த சாய்ஸ்சஸ் தான் இது.. இதெல்லாம் பிடிக்கலன்னா உங்களுக்கு வேற எப்படி பிடிக்கும்ன்னு சொல்லிட்டு போங்க :)
  நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும்..

  ReplyDelete
 11. நானும் ஏதோ பார்த்துக் கோலம் போடக் கத்துக்கலாம்னு வந்தேன். இங்க எல் போர்ட் டொயோட்டா, ஹோண்டாலாம் ஓட்டுது.

  பகுதி இரண்டுக்கு ஒவ்வொருத்தர் என்னென்ன கருத்துச் சொல்றாங்க என்று அப்பப்ப வந்து பார்த்துட்டுப் போறேன். :)

  ReplyDelete
 12. சொல்றவங்க எல்லாம் சொல்லியாச்சு இமா.. நீங்க தான் சொல்லனும் இனிமே.. :))

  எல்போர்டும் ஒரு நாள் ரோட்டுல இறங்கித்தான் ஆகனும் இமா :)

  ReplyDelete
 13. ஹி,ஹி....நாங்க ரொம்பவே உஷாரு..முதல்ல இருந்தது நிஸான் அல்டிமா..இப்ப ஹோண்டா Coupe.

  டொயோடா கம்பெனி-ல ஒரு ப்ராஜக்ட் பண்ணின எபெக்ட்-ல :) கார் வாங்கும்போது அந்தப்பக்கம் பாக்கவே இல்லை எங்க ஐயா!:D

  கற்பிக்கும் முறைகள்..என் வோட்டு கிளாஸ் ரூம் டீச்சிங்-குத்தான்! :)

  ReplyDelete
 14. அண்ணாத்த நல்ல வெவரந்தான் (என்ன மாதிரியே) :) இங்கிட்டு தான் இப்படி :)

  வோட்டுக்கு நன்றி.. உங்க வீட்டுக்கு ஒரு பார்சல் பிரியானியும் அம்பது ரூபாயும் அனுப்பியிருக்கோம்.. பெற்றுக்கொள்ளவும்..

  ReplyDelete
 15. என்னது இப்படி புளியக் கரைக்கீறீங்க வயத்துல!! நாங்க இப்ப வச்சிருக்கதும் டொயொட்டாதான்!! :-(

  க்ளாஸ் ரூம்ல போர்ட்ல எழுதிகிட்டே, ஒவ்வொரு ஸ்டெப்பா derive பண்ணிட்டே சொல்லிக் கொடுக்கிற மாதிரி எதுவும் வராது!! ரெகார்டட் டீச்சிங்குக்கு, செல்ஃப் டீச்சிங்கே பெட்டர்!!

  ReplyDelete
 16. அடடா.. எனக்காக ஒரே ஒரு அனுதாபி அபுதாபி லயிருந்து :)) ந்யூஸ் பாருங்க.. தெரிய வரும்..

  ஆமா.. ரெகார்டட் டீச்சிங் சில விஷயத்துக்கு ஓகே.. ஆனா அதுவே மெயின் டீச்சிங் ஆயிடக்கூடாது..

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)