முதல் பகுதி
ஒரு வாரத்துக்கு முன்பு, இதே போன்ற ஒரு விடுமுறை நாள்.. நான் மதியம் வீட்டில் படித்துக் கொண்டு இருந்தேன்.. இம்முறையும் தனியே.. தனித்திருக்கும் போது நடக்கும் சம்பவங்கள் மனதில் பதிந்துவிடுகின்றன போலும்..
திடீரென்று கதவுடைபடும் அளவுக்கு ஒரு சத்தம் கேட்டது..
நான் வழக்கம் போலவே பயந்து போனேன்.. யாரேனும் திருடர்கள் வந்துவிட்டனரோ என்று.. இருக்கையிலிருந்து எழவே மனமில்லை.. என்னுடைய செல்போனைக் கையிலெடுத்து வைத்துக் கொண்டு மேலும் சில வினாடிகள் கதவைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தேன்..
மேற்க்கொண்டு எந்தச் சத்தமும் எழவில்லை.. சற்று நடுக்கத்துடன் கதவின் லென்ஸ் வழியே எட்டிப் பார்த்தேன்..
அங்கே ஒரு சிறுவன் ஸ்கேட்டிங் போர்டுடன் விழுந்து கிடந்தான்..
கதவைத் திறப்பதா வேண்டாமா என்று ஒரே யோசனை.. ஜன்னல் வழியே வெளியே நோக்கினால் வேறு யாரும் தென்படவில்லை..
லென்ஸ் வழியே மறுபடியும் பார்த்தேன்.. சிறுவனிடத்தில் எந்த அசைவும் இல்லை..
பின் ஒரு வழியாக மனதை திடப்படுத்திக்கொண்டு, கதவினை பாதி திறந்து வைத்து, அவனிடம் பேசினேன்.. ஆங்கில உரையாடல்.. தமிழில்..
என்னப்பா, என்னாயிற்று உனக்கு..
ஒன்றும்மில்லை..
இப்படி விழுந்து கிடக்கிறாயே..
மன்னித்துக் கொள்ளுங்கள்.. உங்கள் கதவின் மீது மோதி சப்தம் எழுப்பி விட்டேன்..
எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது..கதவை இன்னும் சற்று திறந்து அவனை நோக்கினேன்..
பதின் வயதுக்காரன்.. காலில் ஸ்கேட்டிங் போர்ட் அணிந்திருந்தான்.. தலையில் ஹெல்மெட்.. கை, கால் இரண்டுக்கும் போதிய அளவு பேட் வைத்துக் கட்டியிருந்தான்.. இப்பொழுது தான் என்னால் அவனைப் பார்த்து புன்னகைக்க முடிந்தது.. ஹைஸ்கூல் சிறுவனென்றாலும், என்னுடைய அச்சம் முழுதும் அகலவில்லை..
இப்போ எப்படியிருக்கிறது?
பரவாயில்லை..
நான் உன்னைத் தூக்கி விடட்டுமா?
இல்லயில்லை.. நானே எழுந்து கொள்வேன்..
எங்கிருக்கிறது உன் வீடு?
இதே காம்ப்ளக்சில் தான்..
பேசியவாறே கைகளைக் கீழே ஊன்றி மெல்ல எழுந்து நின்றான்.. அவனருகில் வந்தேன்..
உன்னால் கை கால்களை நன்றாக அசைக்க முடிகிறதா? எங்கேனும் வலியிருந்தால் சொல்..
எனக்கொன்றுமில்லை.. நன்றாகத் தான் இருக்கிறேன்.. (இந்த வயதுக் குழந்தைகள் பயமறியாக் கன்றுகள்..)
நடந்து பார்த்துச் சொல்.. (ஏதேனும் ஃப்ராக்சர் ஆகியிருக்குமோ என்ற கவலை எனக்கு..
ஒன்றுமில்லை..
நடக்க முடியுந்தானே?
ம்ம்..
வீடு வரை உடன் வரவா?
வேண்டாம்.. நானே சென்று விடுவேன்..
மெல்ல நடக்க ஆரம்பித்தான்..
உன் அப்பா அம்மாவிடம் மறக்காமல் நடந்ததைச் சொல்லிவிடு.. வலியேதுமிருந்தால், மருத்துவரிடம் சென்று வாருங்கள்..
நன்றி..
அவன் சென்று விட்டிருந்தான்..
நான் வீட்டுக்குள் வந்து கதவை தாழிட்டேன்.. எனக்குள் சிறு குற்ற உணர்வு எழும்பி மறைந்த வண்ணமிருந்தது..
(தொடரும்..)
இந்தச் சம்பவம் தான் இத்தனை நாள் கழித்து கதை நினைவில் வரக் காரணம்.. அதான்.. சொல்லிவிட்டேன்..
//இந்தச் சம்பவம் தான் இத்தனை நாள் கழித்து கதை நினைவில் வரக் காரணம்.. அதான்.. சொல்லிவிட்டேன்.. // அப்போ, கதை நாளை தொடருமா? நல்லாவே குயப்பரீங்கோ:D எல்போர்டு!
ReplyDeleteஇதுலே // கங்ராட்ஸ்.. படிச்சு முடிச்சும் நல்ல நிலமையில தான் இருக்கீங்க..// ம்ம், 'நல்...ல்...ல்..ல' நிலைமைல தான் இருக்கோம்!:)
கூடிய மட்டும் கதைகளை ஒரே இடுகைல முடிச்சிடுங்க. அடுத்த பகுதிய வாசிக்க, எங்களுக்கு முடியாம்ம போக வாய்ப்பு இருக்கு. வாங்க என் தளத்திற்கு. நானும் கதைகள் எழுதுறேன். படிச்சு பாருங்க.
ReplyDeleteஆமா ஜீனோ.. உங்களை குயப்பறதுக்கு தான் எயுதறதே :) இப்போத் தான் சந்தோஷமா இருக்கு..
ReplyDeleteநன்றி தமிழுதயம்.. அதான் எல் போர்ட் போட்டிருக்கேன்ல :) நீங்களெல்லாந்தான் பழக்கி விடனும்.. எப்படி கொண்டு போகன்னு.. இனிமே மாத்திக்கறேன்..
எல்ஸ்...
ReplyDeleteஅது சரீ... குதிரைக்கு என்ன ஆச்சு? கொள்ளும் தண்ணியும் தின்னப் போச்சா!!
தலையும் புரியலை.. வாலும் புரியலைய்ய்.
இமா.. கதைய முழுசா எழுதிப் போட்டப்புறமும் முழுசா படிக்காம.. என்ன நக்கலா? :))
ReplyDeleteநான் ஒரொரு அதிகாரமா.. இல்லையில்ல அத்தியாயமா வாசிச்சுப் பார்த்துப் பின்னூட்டம் போட்டுப் போட்டுப் போனன். :)
ReplyDeleteஅதிகாரமா வாசிச்சு பாத்தீங்களா இமா? ஹி ஹி.. அடுத்த வாட்டி அடக்கமா வாசிச்சுப் பாருங்க.. :)))
ReplyDeleteஸ்டூடன்ட் சொல்லி டீச்சர் கேட்கிற காலமாப் போச்சு. ஹும்.
ReplyDelete:)))))))))))
ReplyDelete? :)
ReplyDeleteநம்ம கதையில யாரு ஸ்டூடண்ட் யாரு டீச்சர் இமா? :)
ReplyDeleteவர வர எல்லாம் மறந்து போகுது!! :)
ReplyDeleteவயசானா அப்படித் தான் இமா.. ரொம்ப ஃபீல் பண்ணக் கூடாது.. விட்டுத் தள்ளுங்க :)
ReplyDeleteஉங்களோட கா ;(
ReplyDeleteசாரி இமா.. அது வேறு யாருக்கோ போட்ட பதில்.. தெரியாம இங்க வந்துடுச்சி.. :))))உங்களப் போய் அப்படிச் சொல்வேனா? :))
ReplyDeleteசும்மா சமாளிஃபிகேஷன்ஸ் விடாதீங்க. :D
ReplyDeleteநானும் இங்க வந்து பார்த்து படிக்க தொடங்கியுள்ளேன். படித்ததும் மீதி வந்து கமெண்ட்ஸ் குடுக்கிறேன். அதுவரைக்கும் விஜி. அப்படியே நம்ம இடத்துக்கும் வந்து உங்க கருத்தை சொல்லிப்டுங்கோ.
ReplyDeleteஇமா.. புரிஞ்சா சரிதான் :)
ReplyDeleteநன்றி விஜி.. இதோ வந்துட்டே இருக்கேன்..
அய் பின்நவீனத்துவக் கதையா?? சூப்பரு..
ReplyDeleteஆமா இந்த தமிழ்மணம் தமிழிஷ்லயெல்லாம் சேத்தா நாங்க ஓட்டுப் போடுவோம்ல. (இந்த ஊர் எலக்சன்ல தான் ஓட்டு போட முடியலை.. இங்கயாச்சும்.. )
நானே மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட ரேஞ்சுல எதயோ எழுதிருக்க.. அதப் போயி..
ReplyDeleteஇதப் படிக்கிற கஷ்டம் போக, எதுக்கு உங்களுக்கு இன்னொரு கஷ்டமெல்லாம்ன்ற நல்ல எண்ணந்தான்.. அங்கயெல்லாம் சேத்துட்டு அப்புறம் ஒரு ஓட்டு கூட விழலைன்னா.. அந்த பயமும் இருக்கு.. அதெல்லாம் உங்க மாதிரி பெரியாளுங்க போற எடம். இது சும்மாவானும்.. அதான்..