30 July 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர்?? (எனக்கே சரியாத் தெரியலைங்க :)) )

இப்பிடியொரு அழைப்ப விடுத்து என்ன இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்குன வசந்த்க்கு நன்றி.. இது தான் நான் எழுதற முதல் தொடர்பதிவு அப்படின்னு கொஞ்சம் புல்லரிக்கவும் செய்யுது.. :))


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


இங்க என்னை சந்தனா அப்பிடின்னு கூப்பிடறாங்க.. செல்லமா சந்தூ.. அலறும் போது சந்தூஊஊ... ப்ரொஃபைல் ல எல்போர்ட்.. (அது ப்ளாக் ஆரம்பிக்கறப்ப பேருன்னு ஏதாச்சும் வைக்கனுமேன்னு வச்சது.. அப்பிடியே தொடருது..) 


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


இல்ல.. என்னோட இயற்பெயரைச் சொல்ல உண்மைல எனக்கு பயம்.. ப்ரைவசி காரணங்கள்.. சரி, ஏன் இந்தப் பெயர்ன்னு கேட்டா - அதிரா.. அவங்க தான் அறுசுவைக்குள்ள நுழைஞ்ச புதுசுல எனக்குன்னு ஏதாவது பேரு வச்சுக்கச் சொன்னாங்க.. திட்டறதுக்கு வசதியா இருக்கும்ன்னுட்டு.. :))அப்ப யோஓஓஓசிச்சு வச்சது தான் இது.. இதுக்கு மேல யாரும் கேக்கப்படாது.. :))


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


எப்பிடி இது ஆரம்பிச்சதுன்னு கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கு.. சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னாடி யூத்ஃபுல் விகடன் இணையத்துல படிக்க ஆரம்பிச்சேன்.. (இதுக்கும் மேல ஆதி மூலம்ன்னா, தெரியல... ) அப்ப அங்கயிருக்கற குட் ப்ளாக்ஸ் பார்த்து, படிச்சு.. ஆரம்பத்துல வெறும் பின்னூட்டம் மட்டுந்தான் போட்டுகிட்டு இருந்தேன்.. அதுக்கப்புறம் என்னோட அறுசுவை நண்பர்கள் ஆளாளுக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிக்க, நானும் அவங்க கூட பேசறதுக்காக ஆரம்பிச்சது தான் இது.. 


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?


எதுவும் செய்யல.. நாம எழுதறத நிறைய பேர் படிச்சு பின்னூட்டம் போட்டா, விவாதிச்சா, சந்தோஷமாத் தான் இருக்கும்.. நமக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைக்குது, நண்பர்கள் கிடைக்கறாங்கன்னு.. ஆனா, பிரபலம் ஆகி என்ன பண்ண போறோம்ன்னும் ஒரு கேள்வி இருக்கு.. மேடைக்கு கீழ இருக்கும் போது என்ன ரகளை வேனும்ன்னாலும் பண்ணலாம்.. சுதந்திரமா விவாதம் செய்யலாம்.. மேடை மேல ஏறி, வெளிச்சம் பட ஆரம்பிச்சதுன்னா, ரொம்ப conscious (கவனமா இருக்கறது) ஆயிடுவோம்ன்னு தோனுது.. பிற்காலத்துல நேரம் கிடைக்கும் போது (நம்ம பொழப்பையும் பார்க்கனும்ல), இன்னும் நல்லா எழுத முடியும்ன்னு நினைக்கும் போது வேனும்னா திரட்டிகள்ல இணைக்கலாம்ன்னு இருக்கேன்..


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


ஆஹா.. என்னோட முதல் பதிவே சொந்த விஷயந்தான்.. :)) (ரொம்ப ஆவலா போயி படிச்சுப்போட்டு கடியாகிடாதீங்க... இப்போவே சொல்லிட்டேன்..) என்னப் பத்தி எழுதினதில்ல.. ஆனா ”என்னோட” பார்வைகள், அனுபவங்கள், சந்திச்ச மனிதர்கள்.. இப்பிடி எழுதியிருக்கேன்.. ஏதாச்சும் விளைஞ்சுதா இல்லியான்னு நீங்க தான் சொல்லனும்.. :)


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


பொழுதுபோக்குக்காகவும், நண்பர்களோட பேசிக் கொள்ளவும், அவங்க கொடுக்கற ஊக்கத்தப் பெற்று இன்னமும் எழுதவும் தான்.. சும்மா சொல்லக் கூடாது.. எல்லாரும் நல்லாவே ஊக்கம் கொடுக்கறீங்க.. இது வரைக்கும் எதிர்மறையாக் கூட யாரும் சொன்னதில்ல.. நன்றி மக்கள்ஸ்..


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


இப்போதைக்கு இது ஒன்னு மட்டும்.. அப்புறம், பேக் அப்புக்காக, இதுலயே இன்னொன்னு.. 


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


கோபம் இல்ல.. ஆனா, ஏதாச்சும் ரொம்பவே தப்பா சொல்லியிருந்தாங்கன்னா எரிச்சல் ஏற்பட்டிருக்கு.. என்ன வேனும்னாலும் எழுதறாங்களேன்னு.. பொறாமை ஏதும் இல்ல.. ஆனா, நிறைய பேரோட பதிவுகள ரசிச்சதுண்டு, எப்பிடி இப்பிடியெல்லாம் யோசிக்கறாங்க, எழுதறாங்கன்னு வியந்தது உண்டு..


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


மறுபடியும் எட்டிப்பாத்துச் சொல்றேன்.. :) வேற யாரு.. எங்கட செல்ல இமா ரீச்சர்.. :) ஆசிரியர்.. அழகான தமிழ்ல எழுதுவாங்க.. கைவினைப் பொருட்கள் அழகா செய்வாங்க.. கத்தும் தருவாங்க.. அன்பானவங்க.. ஈரமான மனசு.. நீங்களே அவங்க உலகத்துக்குள்ள எட்டிப் பாத்து தெரிஞ்சுக்கோங்க.. :) அனுமதி உண்டு தானே இமா? 


எங்க பாராட்டுனாங்க? முறைச்சிட்டு இல்ல போனாங்க.. பப்பீ கள திட்டிட்டேனாம்..  :))))


10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...


என்னயப் பத்தி சொல்றதில்லன்னு தான் முடிவு பண்ணியாச்சே.. இருந்தாலும், நீங்க கேக்கறதுக்காக.. சராசரித் தமிழ்ப் பெண்.. விரியும் பார்வைகளோடவும், ரசனையுள்ள மனதோடவும், கொஞ்சம் பயத்தோடவும் (ஒளிஞ்சு சுத்திகிட்டு இருக்கறதப் பாத்தாலே தெரியல??), ஏகப்பட்ட சோம்பேறித்தனத்தோடவும்.. கூடவே, இத்துனூண்டு கனவுகளோடவும்...


இதப் படிக்கறங்க எல்லாரையும் அழைக்கறேன்.. விருப்பமுள்ளவங்க தொடருங்க.. (ஐடியா உதவி - ஜெய்லானி)


நன்றி...............















32 comments:

  1. கூடிய மட்டும் ப்ரைவஸியாவே இருங்க... அதுதான் safe...

    இமா மேடம் அறிமுகம் நன்றி நான் அவங்கள ஃபால்லோ பண்ண ஆரம்பிச்சுட்டேன்...

    பாவம் அவங்க :))

    ReplyDelete
  2. கொமெண்ட் எதனையும் காணவில்லை, ஆருக்கு வடை என்றும் தெரியவில்லை:((, எனக்குத்தான் வடை எனச் சொல்லி கிடைக்காட்டில் ..... என்ற பயத்தில.... இப்ப வடைக்கதை வாணாம்:))))).

    கேள்விகளும் அழகு, பதிலும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீங்க.

    எப்பிடி இது ஆரம்பிச்சதுன்னு கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கு.. /// இதில என்ன யோசிக்க இருக்கு??:)) இதுவும் அதிராவின் புளொக் பார்த்ததாலதான் என பக்கெனச் சொல்லிட வேண்டியதுதானே..... ஓக்கை முறைக்க வாணாம்.. பெரிய மனசு பண்ணி விட்டுடுங்கோ:))).

    ReplyDelete
  3. மறுபடியும் எட்டிப்பாத்துச் சொல்றேன்.. :) வேற யாரு.. எங்கட செல்ல இமா ரீச்சர்.. :) ஆசிரியர்.. அழகான தமிழ்ல எழுதுவாங்க.. கைவினைப் பொருட்கள் அழகா செய்வாங்க.. கத்தும் தருவாங்க.. அன்பானவங்க.. ஈரமான மனசு.. ////

    சந்தூஊஊஊஊஊ சந்தூஊஊஊஊஊஊ ஆரைப்பற்றிக் கதைக்கிறீங்க?:))))))). கடவுளே என்னைக் காப்பாற்றப்பா....:))).

    ReplyDelete
  4. என்னது நா ஐடியா உதவியா அடக்கடவுளே...இது என்ன சோதனை ..என்னை காப்பாத்த யாருமே இலையாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...

    ReplyDelete
  5. எல் போர்ட கழட்டுவீங்கன்னு பார்தால் டிக்கிலவேற ஒன்ன புதுசா வைக்கிறீங்க ..ஹா..ஹா..
    இமா மாமி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..வரவும்..!!
    :-)))))

    ReplyDelete
  6. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
    ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
    நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
    ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
    :)

    ReplyDelete
  7. நான் முக்கியமா பயப்படறது ஊர்க்காரங்க, உறவுக்காரங்களுக்குத் தான்.. இவங்க தப்பா நினைச்சுப்பாங்களோன்னு தான்.. நன்றி வசந்த்...

    தொடருங்க தொடருங்க.. :))

    ReplyDelete
  8. ஓக்கை.. ஓக்கை.. குளிருங்கோ.. (கூல் டவுன்).. குளிருங்கோ அதிரா..

    இப்பிடி நம்பிக்கையேயில்லாம பின்னூட்டம் போட்டா எப்பிடி வட கிடைக்கும்?

    அதூ.. பாதித் தூக்கத்துல எழுதினதால, நிறைய உண்மை பேசிட்டன் போல :))

    கண்டிப்பா.. யாராச்சும் எதுக்காச்சும் கம்பெடுத்த்துகிட்டு துரத்துனா.. அதிரா தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு கை காட்டி விட்டுடறேன்.. :))

    ReplyDelete
  9. கண்டிப்பா ந்யூ ஆன்ரியைப் பற்றி கதைக்கவில்லை அதிரா :)))))))

    ReplyDelete
  10. இமா... ஜெய்லானிக்கு ஒரு டப்பா டிஷ்யூ அனுப்பி விடுங்களேன்..

    ReplyDelete
  11. டிக்கியில இருக்கறத வெளிய எடுக்கற மாதிரி எண்ணமெல்லாம் இல்ல.. அதனால, நீங்க நிம்மதியா நித்திரை கொள்ளுங்கோ ஜெய்லானி..

    ”சந்து த க்ரேட்” டின் வலைப்பூவுக்குள் முதன் முதலாக (ஆக்சுவல்லி.. ரெண்டாவதாக) காலடி எடுத்து வைத்து, சரித்திரத்தின் முதல் வடைப் போட்டியில், முதல் வடைப் பரிசைப் பெற்ற இமா அவர்களே.. எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. பேரறிஞர் ஜெய்லானி கையால் விருது வழங்கப்படும் என்பதை அறிவித்துக் கொ”ல்”கிறோம்.. :)))

    ReplyDelete
  12. நன்றிங் ஸ்வேதா.. இப்பிடியொரு விஷயம் இருக்கறதச் சொல்லிட்டுப் போனதுக்கு.. அதுல என்னிக்காவது சேரும் போது, கண்டிப்பா உங்க பேரப் போட்டு, புண்ணியத்த தேடிக்கறேன்..

    ReplyDelete
  13. ஜெய்லானி said...
    என்னது நா ஐடியா உதவியா அடக்கடவுளே...இது என்ன சோதனை ..என்னை காப்பாத்த யாருமே இலையாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...
    //// ஜெய்..லானி, நானும் தேம்ஸும் இருக்கும்வரை ஆரும் அழப்பூடாது. கண்ணைத்துடையுங்க..... வாங்க வாங்க தேம்ஸ் கதவு எப்பவுமே திறந்துதான் இருக்கும்... வந்தோரை வாஆஆஆஆஆஅழ:) வைக்கும்.... நம்பி வாங்கோ.

    ///கண்டிப்பா.. யாராச்சும் எதுக்காச்சும் கம்பெடுத்த்துகிட்டு துரத்துனா.. அதிரா தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு கை காட்டி விட்டுடறேன்.. :))
    /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பிச்சை வாணாம் நாயைப் பிடியுங்கோ:)..

    ReplyDelete
  14. //வந்தோரை வாஆஆஆஆஆஅழ:) வைக்கும்.... //

    வாஆஆஆஆஆ"அழ" வைக்குமாம்.. எதுக்கும் பூஸ் கிட்ட உஷாராயிருந்துக்கோங்கோ ஜெய்லானி..

    ReplyDelete
  15. //எங்கட செல்ல இமா ரீச்சர்.. // :)) நன்றி சந்தூஸ்.

    நானும் இந்தக் கருப்பு T-ஷர்ட்டை இத்தனை நாளாகப் பார்க்கிறேன். இப்படி ஒரு வரியில் நானும் இருப்பேன் என்று தோன்றவில்லை. இன்று காற்றுவாக்கில் காதில் விழுந்தது. மற்ற வேலைகள் எல்லாம் விட்டு விட்டு வந்தேன்.

    //அனுமதி உண்டு தானே இமா?// க்ர்ர். திறந்த உலகம் அது. யாரும் வரலாம்.

    //எங்க பாராட்டுனாங்க? முறைச்சிட்டு இல்ல போனாங்க..// சாரி. பப்பீ என் செல்ல மருமகன் இல்லையா! அதுதான். :) மேலும் உங்களோடு பேசியது அதுதான் முதல் முறை என்பதுவும் இல்லையே. ஆனால்.... நினைவு இருக்கு... எல்போர்ட் முதல் இடுகை பார்த்ததும் சந்தோஷம் வந்தது, ஒரு கை கூடி இருக்கே என்று. ;))

    ReplyDelete
  16. //சந்தூஊஊஊஊஊஊ ஆரைப்பற்றிக் கதைக்கிறீங்க?// அதீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர் ;)

    //இமா மேடம் அறிமுகம் நன்றி நான் அவங்கள ஃபால்லோ பண்ண ஆரம்பிச்சுட்டேன்...
    பாவம் அவங்க :))// பாவம்தான். ஆமையை யாராவது குதிரையில ஃபாலோ பண்ணுவாங்களா!!
    பார்த்து ஃபொலோ பண்ணுங்கோ வசந்த் சார். களைக்கு மருந்து அடிக்கிற வண்டி, குப்பை சேர்க்கிற வண்டிகள் போல திடீர் திடீரென்று முன்னறிவிப்பு இல்லாமல் நின்று விடுவேன். வந்து முட்டிக் கொள்ளாதீங்கோ, பார்த்து. ;))

    ReplyDelete
  17. வர வர பூஸ் ரொம்ப நாட்டியாயிடுச்சு :)))

    சந்தனா அழகா சொல்லிட்டீங்க. நாந்தான் இன்னும் முழிச்சுக்கிட்டு இருக்கேன் :(

    ReplyDelete
  18. ஜெய்லானி ஐடியால்லாம் கொடுக்கறாரா? எப்பவும் சந்தேகம்தானே அவருக்கு வரும் :)

    ReplyDelete
  19. //இமா மாமி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..வரவும்..!!
    :-)))))// வந்தேன் மருமகனே.

    //பேரறிஞர் ஜெய்லானி கையால் விருது வழங்கப்படும் என்பதை அறிவித்துக் கொ”ல்”கிறோம்.. :))) //

    எங்கே விருது!! வடையோடு தூக்கிப் போய்ட்டாங்களோ!!

    ReplyDelete
  20. சந்தூஊஊஊ, உங்களை திட்டலை அன்பா கூப்பிட்டேன். விறுவிறுப்பான திருப்பங்கள் (!?)இல்லாவிட்டாலும் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.
    அதீஸ், ஏன் எங்கட இமா டீச்சரை வம்பு சண்டைக்கு இழுக்கிறீங்க??

    ReplyDelete
  21. இதுக்கு முன்னால வந்து எல்லோரும் எமோஷ்னலா ஆகிவிட்டதால் கண்ணீர் பட்டு எல்லாம் கலங்கி போச்சு எனக்கும்//சரியா தெரியலைங்க?// :)))

    பி.கு:இமா ரீச்சர் என்ன பண்ணூராங்க எல்லோருக்கும் கதியா ஒரு பொக்கெட் அனுப்புங்கோ இல்லைனா பூஸுக்கிட்ட அனுப்புங்கோ ஏதோ கதவு திறந்து இருக்காம் அங்கு:)

    ReplyDelete
  22. காற்றுவாக்கில் சேதி சொன்ன அந்த சின்னக் குயில் யாரோ?? நன்றி இமா... எனக்கும் சந்தோஷமாத் தான் இருந்தது..

    ஒன்னுக்கு மூணு ஸ்மைலி போட்டேனே :) அப்புறம் என்ன சீரியஸ் பதில்??

    அதென்ன வசந்த் சார்? அவரும் எங்கள மாதிரி சின்னப் பையன் தான் //ஆமையை யாராவது குதிரையில ஃபாலோ பண்ணுவாங்களா!!// ஹாஹ்ஹா.. சிரிச்சு முடியல இதப் பாத்து..

    ReplyDelete
  23. வர வரத் தானா.. அது ஆரம்பம் முதல்லே அப்பிடித் தான் கவி.. ஜூஸ் பாட்டில்ல டயேரியா குளிசை கலந்து கொடுத்ததெல்லாம் ஞாபகம் இருக்கோ?

    சந்தேகங்களுக்கு நடுவில இடைவெளி ஏதாச்சும் வேனும்ல்ல.. அப்போ இந்த மாதிரி ஐடியா உதவி எல்லாம் செய்யறார்..

    ReplyDelete
  24. வான்ஸ்.. நானென்ன கதையா சொல்லியிருக்கேன்?? உண்மை.. அதுல விறுவிறுப்பு, திருப்பமெல்லாம் வேனும்னா, இன்னும் கொஞ்சம் நாளாகோனும்... நாலு பேராவது வம்புச் சண்டைக்கு வரோனும்..

    அதூஊஊஊ அவருக்கு இன்று நித்திரை வரல்லையாம்.. அதான்.. வம்பிழுத்துப் பாக்கிறார்..

    ReplyDelete
  25. ஓக்கை.. ஓக்கை.. புரியுது.. இமா.. ஹைஷ்க்கும் சேர்த்து இன்னொரு டிஸ்யூ பாக்கெட் அனுப்பிவிடுங்கோ.. லேப்டாப்பை நல்லா துடைச்சுட்டு படிச்சுக்கட்டும்.. :)) பூஸ் கதவைக் திறந்து அப்பிடியே தள்ளி விட்டாலும் விட்டுடும் :))

    நன்றி ஹைஷ்...

    ReplyDelete
  26. //ஜெய்..லானி, நானும் தேம்ஸும் இருக்கும்வரை ஆரும் அழப்பூடாது. கண்ணைத்துடையுங்க..... வாங்க வாங்க தேம்ஸ் கதவு எப்பவுமே திறந்துதான் இருக்கும்... வந்தோரை வாஆஆஆஆஆஅழ:) வைக்கும்.... நம்பி வாங்கோ.//

    அதாங்க பயமா இருக்கு . எனக்கு நீச்சல் தெரியாதே..!! கடைசில தாக்கு பிடிக்க முடியாம நீங்க நீந்தி போயிட்டா அப்புறம் என் கதி..அவ்வ்வ்வ்

    ReplyDelete
  27. //பேரறிஞர் ஜெய்லானி கையால் விருது வழங்கப்படும் என்பதை அறிவித்துக் கொ”ல்”கிறோம்.. :))) //


    இமாமாமீஈஈஈஈ நல்லா வடிவா பாருங்க .அப்ப மேல சொன்ன அன்பானவங்க , ஈரமனசு உள்ளாவங்க .தப்பு இல்லாம தமிழ் எழுதுறவங்க எங்கட செல்ல இமா டீச்சர் ..... அப்ப இதெல்லாம் பொய்ய்ய்ய்ய்ய் தெரிஞ்சுதா (....யப்பா கோத்து விட்டாச்சு ))

    ReplyDelete
  28. //வர வரத் தானா.. அது ஆரம்பம் முதல்லே அப்பிடித் தான் கவி.. ஜூஸ் பாட்டில்ல டயேரியா குளிசை கலந்து கொடுத்ததெல்லாம் ஞாபகம் இருக்கோ?//

    அப்ப கவி ஊருக்கு போனதால தப்பிச்சாங்க ..இங்கிருந்தால் ஒரு வழிதான் அதான் தெரியல.

    ReplyDelete
  29. ////வர வரத் தானா.. அது ஆரம்பம் முதல்லே அப்பிடித் தான் கவி.. ஜூஸ் பாட்டில்ல டயேரியா குளிசை கலந்து கொடுத்ததெல்லாம் ஞாபகம் இருக்கோ?//

    அப்ப கவி ஊருக்கு போனதால தப்பிச்சாங்க ..இங்கிருந்தால் ஒரு வழிதான் அதான் தெரியல.//

    ஓஹ் இதெல்லாம் வேற நடந்துச்சா! அதான் பூஸ் மரத்து மேல ஏறி ஒளிஞ்சுக்குதோ!

    ReplyDelete
  30. கோபம் இல்ல.. ஆனா, ஏதாச்சும் ரொம்பவே தப்பா சொல்லியிருந்தாங்கன்னா எரிச்சல் ஏற்பட்டிருக்கு.. என்ன வேனும்னாலும் எழுதறாங்களேன்னு.. பொறாமை ஏதும் இல்ல.. ஆனா, நிறைய பேரோட பதிவுகள ரசிச்சதுண்டு, எப்பிடி இப்பிடியெல்லாம் யோசிக்கறாங்க, எழுதறாங்கன்னு வியந்தது உண்டு.///

    நேர்மையா சொல்லியிருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  31. நல்ல பதிவு. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இது போன்ற மேலும் பல பதிவுகளை படிக்க,

    http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

    ReplyDelete
  32. பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாளிகளிடமும் ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும்
    வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
    உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)