04 August 2010

புளியங்கொட்டையும் கொஞ்சம் பூர்வீக நினைவுகளும்...
மஹி புளியங்கொட்டைய கண்ணுல காமிச்சாலும் காமிச்சாங்க.. பய புள்ளைக ஆளாளுக்கு அவங்கவங்க பூர்வீக நெனப்பு கிளம்பிடுச்சு.. மஹிக்கு அதயப் பாத்ததும் அவங்க ஊர் புளியமரங்கள், நிழல், புளியம்பூ, புளியங்கா.. இப்படி பலப்பல விஷயங்கள் ஞாபகம் வந்து, இப்போ அதெல்லாம் அழியப் போவுதேன்னு மனசுல கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க.. இமாவுக்கும்  அவங்க வீட்டு புளியமரம், கூடவே அத சாப்பிட்டு வளர்ந்த ஆமைகள், முயல்கள் அப்படின்னு பழைய நினைவுகள் வந்தாச்சு.. எனக்கு எங்கவூருல விளையாண்ட  தாயக்கரம் நெனவுக்கு வந்துச்சு.. ஜெய்லானிக்கு நான் தாயக்கரம்ன்னு சொன்னவுடனே அவங்க ஊர்ல விளையாண்ட பல்லாங்குழி ஞாபகம் வந்திருக்கு.. ஆனா ஒரு கேட்ச் - தாயக்கரத்த பல்லாங்குழின்னு நினைச்சுட்டாங்க.. அதனால, இந்த தமிழ் கூறும் பதிவுலகத்துக்கு தாயக்கரம்ன்னா என்னன்னு வெளக்க வேண்டியது எங்கடமையாயிப் போச்சு.. மேல படம் இருக்கு பாருங்க - அதான்.. அனேகம் பேருக்கு தெரிஞ்சதாத் தான் இருக்கும்... இப்ப டச்சு விட்டுப்போனதால, லேசா மறந்து போன மாதிரி இருக்கு.. இப்படி எழுதி வச்சா பின்னாடி என்னைக்காவது விளையாடனும்ன்னு தோனுச்சுன்னா பாத்துக்கலாம்.. அதுக்காகவும் தான் எழுதறேன்..

ஊருல எங்க தாத்தா வீட்டுக்கு ஒட்டுன மாதிரியே அவரோட தம்பி வீடு இருக்கும் (சின்னத்தாத்தா).. அவங்க மூலமா எனக்கு கொஞ்சம் சித்திங்க, மாமா.. கூடவே, எங்க வீட்டு கும்பல் - எங்கம்மா, அத்த, பாட்டி.. இப்படி எல்லாருமாச் சேந்து லீவு நாள், பண்டிக காலங்கள்ல விடிய விடிய ஆடுவாங்க.. நேரம் போறதே தெரியாது.. அப்புறமா சித்திங்க ஒருத்தொருத்தரா கண்ணாலங்கட்டிப் போயிட்டாங்க.. மிஞ்சியிருந்த ரெண்டு வீட்டு பெருசுங்ககளுக்கு இதுதான் முக்கிய பொழுதுபோக்காகிப் போச்சு.. கிட்டத்தட்ட தெனமும் விளையாடிட்டு இருப்பாங்க.. இப்போ அந்த கும்பல்ல மிச்சம் இருக்கறது எங்க பாட்டி மட்டுந்தான் :(( மத்த பெரியவங்க எல்லாரும் ஒருத்தொருத்தரா போயி சேர்ந்துட்டாங்க.. மேல போயும் விளையாடிகிட்டுத் தான் இருப்பாங்கன்னு நெனக்கறன்.. :)) நாங்களும் அப்பப்ப கலந்துக்குவோம்.. மத்த நேரம் வேடிக்க பாப்போம்.. 

இதுக்கு பெருசா எதுவும் தேவையில்ல.. வாசல்ல, சாக்பீஸால இந்த மாதிரி கட்டம் வரைஞ்சுக்கோனும்.. புளிய சுத்தம் பண்ணுறப்ப, புளியங்கொட்டைகள தனியா எடுத்து வச்சிடுவாங்க.. அதுகள ஒரு பக்கமா மட்டும் நல்லாத் தரையில தேச்சு வெள்ளையாக்கிடனும்.. மொத்தம் ஆறு புளியங்கொட்டைங்க தேவைப்படும்.. எல்லாத்தையும் கையில வாரி எடுத்து ஒரு குலுக்கு குலுக்கி, கையத் திருப்பி, மெதுவா விசிர்ற மாதிரி வீசோனும்.. ரெண்டு பேர் மட்டும் ஆடலாம்.. இல்ல ரெண்டு ரெண்டு பேரா குழு சேர்ந்து நாலு பேர் ஆட்டமும் ஆடலாம்.. கூட்டாளிங்க ரெண்டு பேரும் எதுத்தெதுத்தாப்ல உக்காந்துக்கனும்.. தாயக்கட்ட இருந்தா, அதயும் உருட்டி விட்டு விளையாடலாம்.. ஆனாலும் புளியாங்கொட்டைங்க தான் எங்க சாய்ஸ்...

விளையாட்டுக் கட்டத்தப் பத்திச் சொல்லிடறேன்..  ஒவ்வொருத்தருக்கும் நாலு காயின்ஸ் அல்லது காய்கள் (குட்டியா சிவப்பு மற்றும் பச்சக் கலர்ல இருக்குது பாருங்க)... அவங்கவங்க உட்காந்திருக்கற பக்கம் இருக்கற பெரிய rectangle கட்டம் அவங்களோட வீடு மாதிரி.. அங்கயிருந்து தான் ஆட்டம் ஆரம்பிக்கும்.. க்ராஸ் போட்ட எடங்களயும், ப்ளூ ஷேட் பண்ணுன எடங்களயும் மலை அப்படிம்போம்.. ஏரோ போட்டிருக்கற திசைல காய்கள நகர்த்தோனும்.. 

இனி விதிமுறைகளப் பாப்போம்.. புளியங்கொட்டைகள விசிறும் போது ஒன்னே ஒன்னு மட்டும் வெள்ளையா விழுந்ததுன்னா, அதுக்கு தாயம்ன்னு பேரு.. (மேல ப்ரவுன் அண்ட் வைட் ஆ தெரியுது பாருங்க)..  தாயம் விழுந்தாத் தான் ஒவ்வொரு காயா கீழ இறக்க முடியும்.. ஒவ்வொரு வெள்ளைக்கும் ஒவ்வொரு பாயிண்ட்ஸ்.. எல்லாமே வெள்ளைன்னா ஆறு.. எல்லாமே ப்ரவுன்னா விழுந்தா பன்னெண்டு.. இதுல, தாயம், அஞ்சு, ஆறு, பன்னெண்டு - இதெல்லாம் ஸ்பெஷல் ஸ்கோர்ஸ்.. அதாவது, இப்பிடி விழுந்தா இன்னொரு சான்ஸ் நாமே விசிறலாம்.. இல்லாட்டி, ஒரு வாட்டியோட அடுத்தாளுக்கு பாஸாயிடும்.. எவ்வளவு ஸ்கோர் கிடைக்குதோ, அவ்வளவு சின்னக் கட்டங்களுக்கு காய்கள நகர்த்தலாம்.. 

காய்கள ஒன்னொன்னா கீழ எறக்கி, அப்படியே நாலு கட்டத்தயும் சுத்தி வந்து,  மறுபடியும் ஆரம்பிச்ச எடத்துக்கே கொண்டு வந்து, வெளிய எடுக்கனும்.. யாரு நாலு காய்களையும் இப்படி முதல்ல வெளிய எடுக்கறாங்களோ, அவங்க தான் ஜெயிச்சவங்க.. 

இதுல சுவாரசியமான விஷயமே வெட்டு தான்.. உதாரணத்துக்கு - எதிராளி காய் எதுத்தாப்ல ரெண்டு சின்னக் கட்டங்கள் தள்ளி இருந்தா, நம்ம ஸ்கோர் ரெண்டு வந்துச்சுன்னா - வெட்டிடலாம்.. சாதுர்யமா காய்கள நகர்த்தி அவங்க கையில சிக்காத மாதிரி கொண்டு போகனும்.. வெட்டுனாலும் வெட்டாட்டம் அப்படின்னு இன்னொரு சான்ஸ் விசிறக் கிடைக்கும்.. வெட்டப்பட்ட காய்ங்க மறுபடியும் வீட்டுக்குத் திரும்பிடும்.. தாயம் இல்ல அஞ்சு போட்டு தான் மறுபடி இறக்க முடியும்...  ஒரு வாட்டியாவது எதிராளிய வெட்டுனாத்தான் முழுசும் சுத்தி வந்து வீடு உள்ளாற போயி காய வெளிய எடுக்கலாம்.. இல்லாட்டின்னா மறுபடியும் சுத்தி வரனும்.. 

இந்த மலைகள் கொஞ்சம் ஸ்பெஷல் ஏரியா.. அங்கயிருக்கும் போது, நாம எதிராளிய வெட்டலாம்.. ஆனா, அவங்க நம்மள வெட்ட முடியாது.. அதுனால, எப்ப சான்ஸ் கிடைச்சாலும், மலையில ஏறி உக்காந்துக்கோனும்.. 

கூட்டு சேர்ந்து ஆடும் போது, ரெண்டு பேருக்கும் சேர்த்து நாலு காய்ங்க இருக்கும்.. ரெண்டு பேரோட ஸ்கோர்ஸுமே காய் நகர்த்தறதுக்கு செல்லுபடியாகும்.. இப்படி நாலு பேரா சேர்ந்து விளையாடும் போது ஆட்டம் நல்ல பரபரப்பா இருக்கும்.. இத இப்படி நகர்த்து, அதய வெட்டு, இத மலையில கட்டு, இத வெளிய எடுன்னு ஒரே சத்தமா இருக்கும்.. நம்ம சித்திங்க மாமாங்க எல்லாரும் கொஞ்சம் கள்ள ஆளுங்க.. உஷாராயில்லைன்னா அப்படியே அந்தப்பக்கமா காய நகர்த்தி வச்சுட்டு ஒன்னுந் தெரியாத மாதிரி முகத்த வச்சுப்பாங்க.. அதனால அவங்க கைகள் மேல ஒரு கண்ணு எப்பவும் வச்சிருக்கோனும்.. 

ஹூம்.. இப்படி எல்லாருமாச் சேந்து விளையாடி பல வருஷங்களாயிப் போயாச்சு.. கல்லூரில படிக்க வெளியூரு போனப்ப, ஊரோட டச்சு விட ஆரம்பிச்சது.. இப்ப.. ம்ம்.. நிறையவே கம்மியாயிடுச்சு.. இப்போ போனாலும், அந்த பழைய ஆட்கள் யாரும் பக்கத்துல இல்ல.. எல்லாரும் வேற வேற ஊர்ல இருக்காங்க.. பெரியவங்களும் உயிரோட இல்ல.. என்னமோ போங்க.. Take life as it comes....

32 comments:

 1. இந்த வாட்டி வடய தவற விட மாட்டோம்ல.. ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. மேல இருக்கற தாயக்கரத்த பவர் பாயிண்ட் வச்சு வரைஞ்சிருக்கேன்.. பதிவு நல்லாயில்லன்னாலும், ஓவியம் நல்லாயிருக்கு அப்பிடின்னு சொல்லிட்டு போவனும்.. ஓக்கை? :)))

  ReplyDelete
 2. நானே கிட்டத்தட்ட கோயமுத்தூர் போனமாதிரி இருக்கு சந்தனா.தாயக்கரமும்,விளக்கமும் அருமை! :)

  ஒவ்வொரு கோடை விடுமுறைலயும் பெரீய்ய காலண்டர் பேப்பர் ஒண்ணை கிழிச்சு,அதன் பின்பக்கம் இந்த தாயக்கரத்தை வரைஞ்சுருவோம். ஒவ்வொரு வீட்டுலயும் தாயக்கட்டை இருக்கும்.
  வீட்டுக்குள்ள தாயம் விளையாடக்கூடாதுன்னு வேற சொல்லிப்போடுவாங்க..ஒரொரு திண்ணையா மாறிமாறி உட்காந்து விளையாடுவோம்.

  புளியங்கொட்டைல இப்படி ப்ரவுன் &ஒயிட் பண்ணி விளையாடறது "சம்பா"ன்னு சொல்லுவோம்.அதுக்கு கட்டம் வேறமாதிரி..ரூல்ஸ் எல்லாம் மறந்தே போச்:(

  அப்புறம் புளித்தட்டினப்புறம் புளியங்கொட்டைகளை உப்புக்காரனுக்கு போட்டு உப்பு வாங்கிடுவாங்க.அம்மாகிட்ட கெஞ்சி,கூத்தாடி கொஞ்சத்தை எடுத்துவைப்போம்.அதுல விளையாடறது 'ஒட்டி'..அதய அடுத்த கமெண்ட்டுல போடறேன்.:)

  ReplyDelete
 3. ஹ்ம்ம்..எங்க விட்டேன்? :)

  ஒட்டி...இது கல்லுலயும் விளையாடலாம்,புளியங்கொட்டைலயும் விளையாடலாம். ஒரே சைஸ் கல்லுகளா (நிறைய) சேர்த்து விளையாடணும்.கல்லுல விளையாடறது ஈஸி..புளியங்கொட்டை சைஸுக்கு இந்த விளையாட்டு கொஞ்சம் கஷ்டம். குட்டி-குட்டியா இருக்க கொட்டைகளை எல்லாம் சேர்த்து ஒண்ணா பரப்பிடணும்.5 கல் விளையாடும்போது விளையாடற ஒண்ணான் மாதிரி ஒரொரு கொட்டையாவும் எடுக்கலாம்(அதுக்குப்பேரு கொத்தறது!:)) இல்லை,மொத்தமா கொட்டைகளையும் எடுக்கலாம்(வழிக்கறது:)). அப்படி எடுக்கையில் அக்கம்பக்கமிருக்க புளியங்கொட்டைகள் அலுங்காம எடுக்கோணும்.

  நாலு கொட்டை சேர்ந்தது ஒரு "ஒட்டி"..பத்து ஒட்டி சேர்ந்தா அதுக்குப் பேர் "குதிரை"..இந்த மாதிரி எத்தனை குதிர சேர்க்கறமோ அந்தளவுக்கு நம்ம பணக்காரர்&வின்னர்.யாரு எல்லா பணத்தையும்:) இழந்து ஒட்டாண்டியா நிக்கறாங்களோ அவங்க "போண்டி"!!ம்ம்..அந்தக்காலத்துக்கே போனமாதிரி இருக்குது.தேங்க்ஸ் சந்தனா!

  யாராவது வந்து என்னை அடிபின்னறதுக்குள்ள எஸ்கேப்பூஊஊ..இன்னும் 'கை காய்ச்சறது'ன்னு ஒண்ணு இருக்கு.இந்த ரெண்டு கமெண்டுக்கும் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பாத்துட்டு அப்புறமா அதய சொல்லலாமா,வேணாமான்னு யோசிக்கறேன்.:)))))))

  ReplyDelete
 4. அட அட என்னமா விளக்கி இருக்கீங்க , சூப்பர்..... ஆனா இந்த மரமண்டைக்கு கொஞ்சமாதான் புரியுது.. நா விளையாடியதில்லை ஆனா இந்த கட்டம் போட்டு ஊருல பெரிசுங்க விளையாடும் ..

  ReplyDelete
 5. நமக்கு பல்லாங்குழி அப்புறம் செஸ் ரெண்டும்ன்னா ஊர் உலகத்தையே மறந்துடுவேன்.

  ReplyDelete
 6. படம் சூப்பரா போட்டிருக்கீங்க ஏன் இத்தனை கஷ்டம் பேசாம கையால வரஞ்சு ஸ்கேன் பண்ணி போடலாமே எல் போர்ட்

  ReplyDelete
 7. மஹி... எங்க சின்னத் தாத்தா வீட்டு வாசல்ல சாக்பீஸால வரைஞ்சு விளையாடுவாங்க.. எல்லாருமே.. நல்லாயிருக்கும்.. எனக்கும் அஞ்சாங்கல்லு நெனப்பு வந்துருச்சு :)) சம்பா - கேள்விப்பட்டதில்ல..

  அப்புறம், எனக்கும் அஞ்சாங்கல்லு நெனப்பு வந்துருச்சு.. :) இந்த ஒட்டி மாதிரி நிறைய கற்கள பரப்பி விளையாண்டோம்ன்னு நெனப்பு இருக்கு.. ஆனா, ரூல்ஸ் சரியா தெரியல.. இந்த வாட்டி, பீச் போயிருந்தப்ப, அங்க கெடந்த கூழாங்கற்களப் பொறுக்கி, வெளயாண்டு பாத்தேன்.. எந்தம்பி நக்கலா சிரிச்சான் :)) நன்றி.. முடிஞ்சா, தனி பதிவாவே போடுங்க.. படங்களோட, விதி முறைகளோட.. எழுதி வச்சாத் தான் நம்ம புள்ளைங்களுக்கு ஆவும்.. இல்லாட்டி, கம்ப்யூட்டரே கதின்னு இருக்க வேண்டியது தான்..

  ReplyDelete
 8. நல்லா எழுதியிருக்கீங்க..!

  வாழ்க்கை ஒருத்தி வந்தா ஆரம்பம்

  எதிரிகள் நிரம்பிய உலகம்

  எதிராளியை வெட்டினால்தான் வாழ்க்கை நடத்த முடியும்

  நிலையில்லாத இருப்பிடம்

  65ல முடியுற வயசு

  இறுதியில் எதுவுமே எடுத்து போக முடியாது

  லைஃப் இஸ் பியூட்டிஃபுல் இந்த தாய விளையாட்டு மாதிரியே

  கடைசியில் கிடைப்பது ஒண்ணும் இல்லை ஆனந்தத்தை தவிர நேரம் கழிந்தது தான் மிச்சம்

  பிலாசபி :))))

  ReplyDelete
 9. நன்றிங் ஜெய்லானி.. எங்கூருல பெருசுங்க, சிறுசுங்க எல்லாரும் விளையாடும்.. கொஞ்சம் பேரு காசு கட்டி விளையாடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. எங்க வீட்டுல அதுக்கு தடா.. சூது மாதிரி ஆகிப் போயிரும்ன்னு..

  ReplyDelete
 10. ஜெய்.. எனக்கும் பல்லாங்குழி பிடிக்கும்.. நக்கி வழிக்கறதுன்னு சொல்லுவோம் :))))))))))

  சின்ன விண்ணப்பம்.. பல்லாங்குழி - படங்களோட, விதிமுறைகளோட, தெளிவான விளக்கத்தோட, முடிஞ்சா எழுதி தொடருங்களேன்.. எனக்கு பாதி மறந்துடுச்சு :((

  செஸ்.. ஒருக்கா தம்பி கிட்ட தோத்துப் போனதுல அவன் போட்ட ஆட்டத்துல வெறுத்துப் போயி விட்டாச்சு :)) அதுக்கு நெறய யோசிக்கனும்.. ரொம்ப கவனம் தேவைப்படற விளையாட்டுன்றதாலயே எனக்கு கொஞ்சம் பிடிப்பு கம்மியாயிடுச்சு.. அதுவும் படிப்பு மாதிரி ஆயிடும் :((

  ReplyDelete
 11. அய்ய.. ரொம்ப ஈசியா முடிஞ்சிடுச்சு பவர் பாயிண்ட்ல.. நீட்டாவும் வந்திருக்கு..

  நான் இப்பிடிப் பண்ணுனேன்.. ஒரு ரெக்டாங்கிள், அதுல சில கோடுகள் - இதய ஒன்னா க்ரூப் பண்ணி, அதயே காப்பி பேஸ்ட் பண்ணி, திருப்பி திருப்பிப் போட்டு - இணைச்சாச்சு.. அப்புறம், இதயே பிக்சரா சேமிச்சு நேரடியாவே கணினியில இருந்து இறக்கியாச்சு.. மொத்தமே பத்து பதினஞ்சு நிமிஷம் தான் ஆச்சு..

  ReplyDelete
 12. ஆஹா. கலக்கிட்டீங்க வசந்த்.. நல்ல பொருத்தமா அமைஞ்சிருக்கு உங்க பிலாசஃபி :) ம்ம்.. ஆனா எதிராளிய வெட்டத் தேவையில்ல வாழ்க்கையில.. முடிஞ்சவரைக்கும் தாண்டிப் போயிடலாம்.

  //கடைசியில் கிடைப்பது ஒண்ணும் இல்லை ஆனந்தத்தை தவிர நேரம் கழிந்தது தான் மிச்சம்//

  உண்மை தான்.. வெற்றியோ தோல்வியோ விளையாட்ட அனுபவிச்சு விளையாடோனும்.. அது தான் ஆனந்தம்..

  ReplyDelete
 13. ஆ... சந்து, இதென்ன லூடோ மாதிரி இருக்கே.. சின்ன வயதில அதுதான் அதிகம் விழையாடியிருக்கிறேன், திரும்பப் படித்தால்தான் புரியுமென நினைக்கிறேன்.

  படிச்சிட்டு வாறேன்:).

  ReplyDelete
 14. ஓவியம் நல்லா இருக்கு. பதிவும் நல்லா இருக்கு. பின்னூட்டங்களும் நல்லா இருக்கு. வாழ்க சந்தூஸ். ;)

  மஹீ... நல்லால்ல. க்ர்ர்.. இதைப் பின்னால்ல ஒரு காலம் எங்க போய்த் தேடுறது என்று மறந்து போய்டும் இமாவுக்கு. இப்புடி நல்ல விஷயம்லாம் உங்க ஸ்பேஸ்ல போஸ்டிங்கா போடணும். தொடர்ர்ர்ர் பதிவாப் போடலாமே. (அப்பதான் ஸ்மைலி போடுவேன் சொல்லிட்டேன்.)

  எனக்கும் பல்லாங்குழி ரூல்ஸ் ப்ளீஸ். மறந்து போச். (ஆனால் போடுறவங்க யாரா இருந்தாலும் டீடெய்லா போஸ்டிங்கா போட வேணும். இப்பவே நன்றி.)

  ReplyDelete
 15. //ஜெய்லானி said...

  அட அட என்னமா விளக்கி இருக்கீங்க , சூப்பர்..... ஆனா இந்த மரமண்டைக்கு கொஞ்சமாதான் புரியுது.. //

  கிக் கிக்

  ReplyDelete
 16. படிச்சுப்போட்டு வந்து புரியலன்னு உண்மைய விளம்பிட்டு போகனும்.. ஓக்கை அதிரா???

  ReplyDelete
 17. ஆ.. இமா அதுக்காக இப்படியா பாராட்டறது.. பாருங்க தும்மிட்டு இருக்கேன்.. இதுக்கும் டிஷ்யூ ப்ளீஸ்.. :))

  பல்லாங்குழிக்கு ஜெய்லானிய கேட்டிருக்கேன் இமா.. பார்க்கலாம்.. ஏற்கனவே சமையல் போட்டியத் தொடரனும்ன்னு மண்டைய பிச்சிட்டு இருக்கறதா கேள்வி.. :))

  ReplyDelete
 18. நாங்க இதே மாதிரி விளையாடுவோம். ஆனா வேற மாதிரி கட்டம்.

  ReplyDelete
 19. //ஓவியம் நல்லா இருக்கு. பதிவும் நல்லா இருக்கு. பின்னூட்டங்களும் நல்லா இருக்கு. வாழ்க சந்தூஸ். ;)//x100

  ReplyDelete
 20. நன்றி முகிலன்.. நீங்க ஆடு புலி ஆட்டத்தச் சொல்லலயே?

  ReplyDelete
 21. நன்றி ஹைஷ்.. இந்த வாட்டி வடையத் தவற விட்டுட்ட வருத்தத்துல இருக்கறதா கேள்விப்பட்டேன் :)))

  உங்க வீட்டு ஆன்ரி எப்போ தல காட்டப் போறாங்க? ஜூஸ் ரெடி பண்ணி ரொம்ப நாளாச்சு :)

  ReplyDelete
 22. வடைய எல்லாம் தவறவிடுவதில்லை:))) சமையல் போட்டிக்கே மகி பின்னால் மறைஞ்சு வருபவர், போன தடவ பதிவு போட்டவரே வடைய அவருக்கு தெரியாம நான் தூக்கிட்டு போனது கூட தெரியாம பதிவு போட்டவரைதான் கேக்கோனும்:)))

  போனதடைவை ஏமாந்து போனதாலே இந்த தடவை விட்டுக் கொடுத்து விட்டேன். அன்புடன் ஆனந்தபடட்டுமே என:)

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 23. போன தடவ பதிவு போட்டவரே வடைய அவருக்கு தெரியாம நான் தூக்கிட்டு போனது கூட தெரியாம பதிவு போட்டவரைதான் கேக்கோனும்:)))

  ஹாஹ்ஹா.. அதய இன்னும் நீங்க மறக்கலையா? சந்து பாலிசிப்படி நன்றல்லது அன்றே மறத்தல் நன்று.. அதேன்.. :)))

  இந்த வாட்டி எப்பிடியோ சமாளிச்சுப்போட்டீங்க :))

  ReplyDelete
 24. சந்தனா,
  ஓவியம், விளக்கம் எல்லாம் நல்லா இருக்கு. ஒரு முறை விளையாடினால் புரியும் என்று நினைக்கிறேன். சரியா???
  மலை என்கிறீங்க, வெட்டோணும் என்கிறீங்க எனக்கு ஒண்ணுமே விளங்கலை. இதிலை நீங்களும் மகியும் பின்னூட்டம் என்ற பெயரிலை பேசுவது சுத்தமா விளங்கவேயில்லை. பல்லாங்குழி ஓரளவு தெரியும். ஆனால் இது கேள்விப்பட்டதில்லை.

  //சமையல் போட்டிக்கே மகி பின்னால் மறைஞ்சு வருபவர்,//
  ஹாஹா...

  ReplyDelete
 25. சந்தூ சிறுவயது ஞாபகங்களைக் கிளறிட்டீங்களே! லீவ் விட்டாச்சுனா எப்பவும் இந்த மாதிரி விளையாட்டுக்கள்தானே! தாயம், பல்லாங்குளி(வேற வேற ரூல்ஸ் வச்சு பல வகைகளில் விளையாடுவோம். இப்ப மறந்து போச்சு), மஹி சொன்ன ஒட்டி(அதை நாங்க அட்டின்னு சொல்லுவோம்), உடைந்த வளையல் துண்டுகளை சேகரித்து ஒரு வட்டம் வரைந்து அதனுள் சிதற விட்டு ஆட்காட்டி விரலால் ஒரே மாதிரி டிசைன் உள்ள துண்டுகளை ஆட்காட்டி விரலால் சேர்த்து நகர்த்தி பிறா துண்டௌகளை அசைக்காமல் வட்டத்திற்கு வெளியே கொண்டுவருவது, தென்னங்குச்சியில் ஒரே அளவாக பத்து குச்சிகளும் நீளமாக இன்னொரு குச்சியும் வைத்து சிதறி விட்டு ஒவ்வொன்றாக அசையாம எடுப்பது(இப்போ ப்ளாஸ்டிக்கில் கிடைக்கிறது)... இப்படி பல விளையாட்டுக்கள். புளியங்கொட்டைகளை சேர்த்து வைத்து ஒத்தயா ரெட்டையான்னு விளயாடுவோம்.தாயம் கூட சதுரம 7*7 கட்டம் போட்டு ஒரு விளையாட்டு விளையாடுவோம் கேரம்போர்ட், செஸ் , சீட்டுவிளையாட்டுகள், செவன் ஸ்டோன்ஸ் இன்னும் சொல்லிட்டே போகலாம். இப்போ கிராமங்களில் கூட குழந்தைகள் இதை விளயாட மாட்டேங்கறாங்க. ம்ம்ம்ம் அது ஒரு கனாக்காலம்.

  ReplyDelete
 26. வான்ஸ்.. எங்கட வீட்டுக்கு வாங்க.. விளையாடிப் பாக்கலாம்.. உங்க பக்கம் யாருக்குமே தெரியல இதப் பத்தி :) மலை அப்படின்றது அந்த குறிப்பிட்ட கட்டங்களுக்கான பேரு.. வெட்டறதுன்னா, எதிராளியோட காய நாம replace பண்ணிட்டு, அவங்களோடத மறுபடியும் ஆரம்பத்துல இருந்து நகர்த்த வைக்கறோம்.. அதனால, அவங்களுக்கு எல்லா காய்களையும் சுத்தி முடிக்க லேட்டாகும்..

  அதுக்குத் தான் மஹியையும் இந்த மாதிரி படம் போட்டு விளக்கச் சொல்லியிருக்கேன்.. பாக்கலாம்.. அப்போ புரியுதான்னு..

  ReplyDelete
 27. லீவு விட்டா முழு நேரமும்.. மத்த நாள்ல பள்ளிக்கூடம் விட்டொடனயே ஆரம்பிச்சிரும் கச்சேரி.. ஆமாம் கவி..

  செவன் ஸ்டோன்ஸ் நாங்க அஞ்சாங்கல்லுன்னு சொல்லுவோம்.. அதுக்கு வீடியோ போட்டு விளக்குனாத் தான் சரியா வரும் :)))))) அதுலயே பலப்பல லெவல்ஸ் இருக்கு :))

  வளையல் விளையாட்டு - தெரியல..

  தென்னங்குச்சி (ஈர்க்குச்சி) விளையாட்டு - நாங்களும் அதே அதே..


  நீங்களும் முடிஞ்சா ஏதோவொரு விளையாட்டப் பத்தி எழுதுங்க.. நொண்டி (பாண்டியாட்டம்) கூட ஓக்கே.

  எனக்கும் கடுமையான nostalgia.. அதான் இப்படி எல்லாருக்கும் பரப்பி விட்டுகிட்டு இருக்கேன்.. :)))

  ReplyDelete
 28. சந்தனா! சூப்பர்.. எனக்கும் ரூல்ஸ் புரியலை... பட் ஓகை.. எங்கயாவது மக்கள்S இருப்பாங்க...எப்படியும் ஒரு வருடத்துக்குள்ள படிச்சிக்கலாம்...
  எனக்கும் ஆடு புலி ஆட்டம்ன்னு ஒரு விளையாட்டு எங்க அப்பா சொல்லிக்கொடுத்தது நினைவிருக்கு.... யாருக்காவது தெரிந்தா சொல்லுங்க... அது முக்கோண வடிவில் கட்டம் வரைந்து விளையாடணும்...

  ReplyDelete
 29. அடடா வடை போச்சே..!!!

  ReplyDelete
 30. அடடா ஒரு பதிவு போச்சே..!!

  ReplyDelete
 31. எது??????????? எப்புடீ இருக்கு??????????????

  ReplyDelete
 32. http://www.traditionalgames.in/home/property-games/pallanguzhi-pallankuli

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)