29 August 2010

இதுக்கு என்ன தான் முடிவு? 4

(புதுசா படிக்கறவங்க யாராச்சும் இருந்தா இதுக்கு முன்னாடி மூணு பதிவுகள பாத்துட்டு வந்துடுங்களேன்.. ப்ளீஸ்..)

ஸ்டேஷன் வந்ததும் இறங்கி சகுந்தலா லைப்ரரி நோக்கி நடக்கலானாள்.. ஆச்சு.. இன்னும் அஞ்சு நிமிஷம்.. அதற்குள் ஒரு கால் செய்து வெளியே வரச் சொல்லலாம் என்று போன் செய்தாள்.. வழக்கம் போல, பாஸ் எடுக்கவில்லை..

பாஸ்கரன் அமெரிக்கா போகப் போகிறான் என்றதுமே அலுவலகத்தில் பேச்சு கிளம்பிற்று.. ”இவனெல்லாம் எப்படி அங்க போயி வேல பண்ணப் போறான்... ” அதற்கேற்றவாறே, ஆரம்பத்தில் இங்கு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டன.. என்றாலும், வந்தான், படித்தான், வேலை வாங்கினான்.. சில வருடங்களில் இந்தியா திரும்பப் போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறான்.. கண்டிப்பாக, வேலை விஷயத்தில் தன்னைத் திருத்திக்கொண்டிருப்பான் என்று தான் சகுந்தலாவுக்குத் தோன்றியது..

ஆனாலும், முற்றிலுமாக அவனால் மாறிவிட முடியவில்லை.. இருவருக்கும் பொதுவான அலுவலக நண்பரொருவர் வீட்டுக்கு இவர்கள் சென்றிருந்த போது, அவர்கள் சொன்ன ஒரு சம்பவம், டிபிக்கல்லி பாஸ்கரனிஷ் ஆக இருந்தது... வெள்ளி இரவு அவர்களுக்கு போன் செய்து சொல்லியிருக்கிறான், அங்கு வார விடுமுறையைக் கழிக்க வருவதாக.. மூன்று மணி நேர ட்ரைவ்.. கிட்டத்தட்ட நள்ளிரவு ஒரு மணி வாக்கில் அவர்கள் வீட்டையடைந்து, கொஞ்சம் நேரம் பேசிவிட்டு, தூங்கச் செல்லும் போது தான் நினைவு வந்திருக்கிறது, சனியன்று காலையும் வேலைக்குச் செல்ல வேண்டுமென.. பிறகென்ன, மறுபடியும் மூன்று மணி நேர ட்ரைவ்.. காலையில் ஆஃபிஸ்...

சகுந்தலா அந்த ஊருக்கு வந்த புதிதில் அவனைத் தயங்கித் தயங்கி தான் தொடர்பு கொண்டாள்.. குடியேற வீடு பார்த்து வைத்திருந்தாலும், ஒரு நாள் முன்னயே வந்து விட்டதால், அவர்களைத் தனது வீட்டில் தங்கிக்கொள்ளச் சொல்லியிருந்தான்.. அவனைப் பற்றிய விவரனையைக் கேட்டிருந்த இவளது கணவனுக்கு அவ்வளவாக விருப்பமில்லையென்றாலும், பாஸ் வீட்டிலேயே தங்குவதென முடிவானது.. ஆனால், சந்தித்த ஓரீரு நாட்களிலேயே அவனை இவனுக்கும் பிடித்துப் போனது.. பாஸ் தன் மனம் போன போக்கில் வாழவிரும்பும் மனிதனென்றாலும், நல்லவனாகத் தோன்றுகிறானென்றான்..

சகுந்தலாவுக்கு என்னமோ அவனது வீட்டில் வித்தியாசமாகப் பட்டது.. ஆங்காங்கு கொஞ்சமாக அழகுபடுத்தப்பட்டிருந்தது. பூச்சாடியெல்லாம் வைத்திருக்கிறவன் அல்ல பாஸ்கரன்.. சமையலறையில் கையால் எழுதப்பட்டிருந்த வட இந்திய சமையல் குறிப்புகள் இருந்தன.. ஆச்சர்யம் மேலிட சகுந்தலா துருவ, அப்போது தான் லிண்டாவின் பெயர் அறிமுகமானது..

லிண்டாவை இவள் சந்தித்தபோது, இன்னமும் ஆச்சர்யப்பட்டுப் போனாள். சகுந்தலா தமிழ் என்றவுடன், ரஜினி பிடிக்குமென்றாள் லிண்டா.. முத்துவைத் தொடர்ந்து இப்போது சிவாஜி பார்த்தேனென்றாள்.. சகுந்தலாவால் நம்பவே முடியவில்லை.. வீட்டிலிருந்த சிவாஜி டிவிடியைக் கண்டபிறகு தான் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.. செட்டினாடு சிக்கன் சமையல் குறிப்பை மெயில் செய்தாள்.. கோயிலுக்கு சுரிதார் அணிந்து வந்தாள்.. நல்லதாய் ஏதாவது தமிழ்ப்படம் சொல்லு என்றாள்.. குறிப்பாக, வன்முறையற்ற, நகைச்சுவை அல்லது காதல் அல்லது குடும்பப் படம் வேண்டுமென்றாள்.. சப்டைட்டிலுடன் பார்த்திடுவேன் என்றாள்.. ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்து சகுந்தலா சொன்ன படம், மொழி ..

லிண்டாவும் நல்ல உயரம்.. வெள்ளையரென்று சொல்லிட முடியாத கொஞ்சமாக பிங்க் டிண்ட்டுடனான நிறத்தில் தோல்.. அவளது சுருட்டைமுடி, வம்சத்தில் எங்கோ கறுப்பினக் கலப்பு நடந்திருக்கவேண்டுமெனச் சொல்லியது.. ஹிஸ்பானிக் என்றும் சொல்ல முடியவில்லை.. ஒரு மாதிரி, வெள்ளையருக்கும், பாகிஸ்தானிக்கும் இடையில் இருந்தாற் போலத் தோன்றியது.. சகுந்தலா அவளிடமே கேட்டுவிட்டாள்.. லிண்டாவும் சிரித்து்க்கொண்டே சொன்னாள், என்னை நிறைய பேர் ஈரானியப் பெண் என்று தான் நினைப்பார்கள்.. உண்மையில், ப்யூட்டரிக்கன் (அமெரிக்கா அருகிலுள்ள தீவு ப்யூட்டரிகோ)..

சுருக்கமாகச் சொன்னால், லிண்டா க்யூட்டாக இருந்தாள்.. மொத்தத்தில், பாஸ்கரனோடு வைத்துப் பார்க்கையில், படு காண்ட்ராஸ்டாகத் தோன்றினாள்.. அவளது இந்திய ஆர்வம், அதிலும் தென்னிந்திய ஆர்வம், காதல் வயப்பட்டிருப்பாளோ என்று எண்ணவைத்தது.. ஆப்ரிக்க நாடுகளில் கொஞ்ச காலம் சேவைக்காகச் சுற்றி ஒன்றிரெண்டு ஆண்டுகள் முன்பு தான் நாடு திரும்பியிருந்தாள்..

அதற்கப்புறம், ஒன்றிரெண்டு முறை சந்தித்திருக்கிறார்கள்.. போன் செய்தால் ஒன்று, பாஸ்கரன் எடுக்க மாட்டான், அல்லது லிண்டாவுடன் வெளியே வந்திருக்கிறேன் என்பான்.. சகுந்தலாவும் அவர்களைத் தொந்திரவு செய்ய மனமில்லாமல் போன் செய்வதை குறைத்து விட்டாள்..

இதோ, இன்று மீண்டும் பாஸைப் பார்க்கப் போகிறாள்.. மணி பிற்பகல் நான்கை நெருங்கி விட்டிருந்தது.. லைப்ரரி வந்ததும், மறுபடியும் போன் செய்து எரிச்சலடைய விரும்பாமல், நேராக உள்ளே சென்றாள்.. நல்லவேளையாக, நுழைந்ததும் தென்பட்டான் பாஸ்.. லேப்டாப்பில் ஏதோ படித்துக்கொண்டிருந்தான்.. தலை ஒழுங்காக க்ராப் செய்யப்பட்டு சீவப்பட்டிருந்தது.. முழுக்கைச் சட்டை.. பாண்ட்... டை.. அப்படியான கோலத்தில் அவனைப் பார்க்க பாஸ்கரனைப் பார்ப்பது போலவே இல்லை சகுந்தலாவுக்கு..

(அடுத்த பாகத்தில் முடியும்..)

13 comments:



  1. இன்னிக்கும் நானேதான் பர்ஸ்ட்டா?:))))))

    ReplyDelete
  2. ம்ம்..இந்த பார்ட் படித்தாச்சு.அடுத்து எப்போ?

    ReplyDelete
  3. ரொம்ப இழுக்குறீங்களே? சீக்கிரம்... (சஸ்பென்ஸ் தாங்கமுடியல, அதான்..)

    ReplyDelete
  4. ப்யூட்ரிகன் பொண்ணுங்க எல்லாம் ப்யூட்டிஃபுல்லா இருப்பாங்களோ :-).
    அடுத்த பாகம் எப்போ? எப்போ? எப்போ? ஹிஹி வேறொன்னுமில்ல எக்கோதான் :-)

    ReplyDelete
  5. :)) மஹி, ஹூசைனம்மா, கவிசிவா.. இன்னிக்கு முடிச்சிடலாம்.. முடிச்சிட்டா எனக்கும் ரிலீஃபா இருக்கும்.. ஆனா எழுத ஆரம்பிச்சா இழுத்துட்டே போவுது.. :(

    ReplyDelete
  6. அட... சந்தூ! இன்னுமா இதுக்கு முடிவில்லை... சைக்கிள் என்ன ஆச்சு...

    ReplyDelete
  7. இலா.. இன்னும் கதையே ஆரம்பிக்கல.. முடிக்கலயான்னு இதென்ன கேள்வி?

    :))) சும்மா.. விளையாட்டுக்குச் சொன்னேன்.. இப்போத் தான் நேரம் கிடைச்சது.. முடிச்சிடறேன்..

    ReplyDelete
  8. //இன்னும் கதையே ஆரம்பிக்கல.. முடிக்கலயான்னு இதென்ன கேள்வி?//

    அதானே!

    ஹலோ என்னாது முடிக்கப்போறிங்களா? எங்க தலைவர் பாஸோட கிராஃப் இப்போதான் ஏற ஆரம்பிச்சுருக்கு அதுக்குள்ளாற முடிக்க சொன்னா எப்பிடி நான் ஒத்துகிடவே மாட்டேன் ...

    ReplyDelete
  9. அவ்வ்வ்வ்.. இப்பிடி பாஸ்க்கு ரசிகரெல்லாம் இருக்காங்களா? நன்றி வசந்த்.. அடுத்த பாகத்துல முடிச்சிட்டேன்..

    ReplyDelete
  10. //இப்பிடி பாஸ்க்கு ரசிகரெல்லாம் இருக்காங்களா? //

    நம்மள மாதிரியே ஒருத்தன பார்த்தா வர்ற ஈர்ப்புதான்...!

    முடிச்சுட்டீங்களா?

    ReplyDelete
  11. :)) அப்ப நீங்களும் அப்படித்தானா? போட்டாச்சு.. போய்ப் பாருங்க.. :)

    ReplyDelete
  12. சந்தூ, சைக்கிளை சீக்கிரம் குடுத்திடுங்க. இல்லாவிட்டால் நானே புடுங்கி பாஸ்கரனிடம் கொடுத்து விடுவேன். கதை நல்லா போவுது.
    வெள்ளைப் பெண்களை விட இந்த வித்யாசமான கலரில் (Tan ) இருக்கும் பெண்கள் மிகவும் அழகா இருப்பார்கள்.

    ReplyDelete
  13. அட இத மிஸ் பண்ணிட்டேன் வானதி.. நன்றி.. பாஸ்கரனுக்கு சைக்கிள் ஓட்டற மூட் இல்ல.. :(( ஆமா.. அதுக்குத் தான் டான் ஆகணும்ன்னு இவங்கல்லாம் வெயில்ல கிடந்து காயறாங்க..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)