19 August 2010

என்றோ தோன்றியவை...

பெருமாயி..

சுட்டெரிக்கும் வெயிலில்
கடற்கரையின் சுடுமணலில்
படுத்துக்கிடந்தவர்களைக் கண்டு
முதன்முதலாகத்
தன்னிறங் குறித்து
பெருமிதம் கொண்டாள்
முத்தழகு...

வலையவிரயம்..

இல்லாத நாட்களில்
இல்லையேயென்று
தவித்தேங்கிய மனம்
கேட்டது கிடைத்ததும்,
வேறெங்கும் நகரயியலாமல்
வலையில் சிக்கிய தேனீயாய்
இன்று...


நுணலும்..


நீயும் உன் வாயால் கெடுவாய்
யாரோ சொல்லிக்
கேட்டறிந்திருந்தது
சட்டென நினைவு வர,
விழித்துக்கொண்டது..
இனி நுணலும்
இடம் பொருள் ஏவலறிந்து
தன் வாய் திறக்கும்..

கூச்சம் மற..

இன்னிக்கும் கத்திரிக்கா குழம்பா
போன வாரம் தானேம்மா செஞ்ச
என்றோ வெறுப்பை
உமிழ்ந்திருந்த வாய்,
இன்று உமிழ்நீரைக் குழப்பி
கூசாமல் மென்றுதின்றது
மூன்று வேளையும்
அதே சோற்றை..
பசி வந்தால் ருசியும் பறக்கும்..

62 comments:

 1. இன்னிக்கு முதல்ல வரவங்களுக்கு மஹியோட லெமன் சேவை.. சுடச்சுட பிழிந்துவிடப்படும்.. ச்சே.. பரிமாறப்படும்.. டும்.. டும்.. டும்..

  ReplyDelete
 2. //இன்னிக்கு முதல்ல வரவங்களுக்கு மஹியோட லெமன் சேவை.. சுடச்சுட பிழிந்துவிடப்படும்.. ச்சே.. பரிமாறப்படும்.. டும்.. டும்.. டும்..//

  ஹை.. ஒரு குண்டா லெமன் சேவையும் எனக்கே எனக்கா.. நன்றிங்க எல்போர்டு.. நீங்க நீடூழி வாழ்க..

  ReplyDelete
 3. //முத்தழகு.//

  இது எப்ப ஃபெட்னாவுக்கு வந்தப்ப நடந்ததா?

  ReplyDelete
 4. //Labels: என்னன்னு லேபிள் பண்ண??//

  கவிதைகள் கொடுத்துதவிய முகிலனுக்கு நன்றி - இப்பிடி வேணும்னா போடுங்களேன்?

  ReplyDelete
 5. இதுக்குத்தான் உங்க ப்ளாகுக்கு வரவே பிடிக்கலை. ஜனநாயக்கடமை ஆத்த வழியில்லாம இருக்குது.. :(((

  ReplyDelete
 6. இது அழுகுணி ஆட்டம். நீங்களே பதிவு போட்டுட்டு நீங்களே மீ த ஃபர்ஸ்ட் சொன்னா ஒத்துக்க மாட்டேன்.

  நல்லாருக்கு சந்து... அது சரி அந்த நுணல் யாருங்க நாமதானே ?!

  ReplyDelete
 7. பெருமாயி.. - ;)

  வலையவிரயம்.. - உண்மைதான். ;)

  நுணலும்.. - கிட்டத்தட்டத் தினமும் எனக்கு நானே சொல்லிக் கொள்வது. ;)

  கூச்சம் மற.. - 'அண்ணி' உடையார் இப்படி ஏனோ!! ;))

  //நன்றிங்க எல்போர்டு.. நீங்க நீடூழி வாழ்க.. // ஹூம். சேவை நல்லாத்தான் இருக்கு. ;)

  //Mahi said...

  :) // ம். பார்த்து, பத்திரம் சந்தூ. இந்தம்மா சிரிப்பு நல்லால்ல.

  ReplyDelete
 8. //எட்டிப் பாத்துட்டு ஓடிப் போனவங்க..// இங்கயேதான் இருக்கோம் எல்ஸ். நீங்கதான் ஒரு காபி, டீ எதுவுமே கொடுக்க மாட்டேங்கறீங்க.
  சேவை கூட இல்லாம போச்சு. ;( கடைசி வெறும் கத்திரிக்கா குழம்பாவது தரலாம்ல. ;))

  ReplyDelete
 9. என்னது சேவையா..?? அங்க பிடிச்ச ஓட்டம் நா இன்னும் நிக்கல ..ஹி..ஹி.. வேண்டாம் நீங்களே சாப்பிட்டு ஒரு வழியாகுங்க ..

  ReplyDelete
 10. ஒவ்வொரு ஹைக்கூவும் சூப்பர்.. நிறைய போடுங்க இது மாதிரி :-))

  ReplyDelete
 11. மிக்க மிக்க நன்றி சந்து!!!, எதுக்கோ? அந்த ஊசிப்போன வடையை, நீங்களே... சாப்பிட்டு.... இந்த அன்பான, பண்பான, நல்லிதயம்கொண்ட, அயகான, அறுசுவையும் மிக்க வலையுலக மக்களை(இதுக்குள்ளதான் நானும் அடக்கம்:), சொல்லாட்டில் புரியாது ஆருக்கும்:)), ஆபத்தான “டய....றியா” விலிருந்து காப்பாற்றிவிட்டமைக்கு:). நீங்க நலமோ சந்து?:)).

  சரி அது போகட்டும், முறைக்க வாணாம்.....

  conti.....

  ReplyDelete
 12. கவிதைகள் அருமை சந்து.

  “அங்கு” நடக்கவிருக்கும் கவிதைப் போட்டியில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  பெருமாயி, வலயவிரயம்.... இரண்டும் எனக்கு மிகவும் பிடித்திருக்கு, தலைப்புத்தான் பெரிதாக அழகாக இல்லை.

  வாழ்த்துக்கள் சந்து, தொடர்ந்து எழுதுங்கோ.


  ///நல்லாருக்கு சந்து... அது சரி அந்த நுணல் யாருங்க நாமதானே ?!
  /// இதிலென்ன சந்தேகம் கவி:)), ஆனால் சிறு மாற்றம்...”நாமதானே” அல்ல:)) “நான்தானே” அப்பூடிக் கேய்க்கவேணும்..... உஸ் அப்பா மீ எஸ்ஸ்..

  ReplyDelete
 13. பூஸ் அப்போ 'அங்கிட்டும்' விசிட் அடிச்சுக்கிட்டுதான் இருக்கோ!

  ReplyDelete
 14. //பூஸ் அப்போ 'அங்கிட்டும்' விசிட் அடிச்சுக்கிட்டுதான் இருக்கோ! //

  அப்ப மரத்துக்கு மேல இல்லையா..?

  ReplyDelete
 15. //athira said...

  கவிதைகள் அருமை சந்து.

  “அங்கு” நடக்கவிருக்கும் கவிதைப் போட்டியில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.//

  நான் பேச நினைப்பதெல்லாம் பூஸ் பேச வேண்... ம்ஹூம். பேசுகிறார். ;)

  இண்டைக்குத்தான் கடைசி நாளாம் சந்தனா. இதில நீங்கள் எல் போர்ட் இல்லை, கலக்கீருவீங்கள். இந்த முறை மிஸ் ஆகினாலும் அடுத்த முறையிலிருந்து விடாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பூஸ் சார்பிலும் என் சார்பிலும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 16. kavisiva said...
  பூஸ் அப்போ 'அங்கிட்டும்' விசிட் அடிச்சுக்கிட்டுதான் இருக்கோ!
  /// ஆஹா.... இப்பூடி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பார்த்துத்தான்.... அதை எழுதினேன்:), பதுங்கியிருந்து அட்ராக் பண்ணுறாங்கப்பா...,
  ஒரு பேபி பூஸால தனிய நின்று எத்தனை பிரச்சனையைத்தான் சோல்..(இது வேற சோல்) பண்ணமுடியும்?:)).

  கவி... பலபேர் மனதில நினைச்சிட்டுப் போயிருப்பினம், நீங்க என்னைப்போலவே நேரடியாகக் கேட்டீங்க பாருங்கோ.. ஐ லைக் இட்.

  கடவுள் சத்தியமாக நான் போய்ப் பார்ப்பதில்லை என்பாட்டில், போகக்கூடாதென்றில்லை, எனக்கு பதிவுகள் போடும் புளொக்குகளுக்கு போயே ஆகவேண்டியிருப்பதால், அதுக்குமேல நேரம் கிடைப்பதில்லை. அதிலயும் நம்புவீங்களோ தெரியாது, நான் பதிவு போடும் தளங்களுக்கு மட்டுமே போய் வருவது என் வழக்கம், நான் பதிவுபோடாத தளங்களுக்குப் போய் படிப்பதேயில்லை.

  ஆனால் “அங்கு” இருந்துதான் எல்லா உறவும் எனக்கு இங்கு கிடைத்திருக்கு.. எக்‌ஷெப்ட்... சந்தேக சங்கத் தலைவரைத் தவிர:). அதனால் “அங்கு” ஏதும் வித்தியாசமாக நடந்தால் அதை விரும்புபவர்கள் எனக்கு தெரிவிக்கிறார்கள்(என்னில் எவ்வளவு அக்கறை என நினைத்து புல்லரிக்கிறது உண்மையில்), அப்படியானபோது மட்டும் போய்ப் பார்த்து வருவேன்.

  இதுகூட, இங்கே, மேலே பதிவுகள் போட்டிருப்பவரில் ஒருவர் தெரிவித்தமையாலேயே நான் கண்டுகொண்டேன்.

  சந்து வட:) சத்தியமா வாணாம்... ஒரு இஞ்சி ரீ பிளீஸ்ஸ்ஸ்... இப்பூடி வேர்க்குதே..:)).

  ReplyDelete
 17. ஜெய்லானி said...
  //பூஸ் அப்போ 'அங்கிட்டும்' விசிட் அடிச்சுக்கிட்டுதான் இருக்கோ! //

  அப்ப மரத்துக்கு மேல இல்லையா..?
  /// ஜெய்... “அப்ப மரம்” இல்லை:), முருங்கை மரத்திலதான்:) எப்பவும் பூஸ் இருக்கும்.... ஆனால் கண் மட்டும் 16 மைல் தூரம் பார்க்கும்:).

  எங்களுக்கு படிப்பித்த ஒரு மாஸ்டர்(நகைச்சுவையாளர்)....அவரை ஞாபகப் படுத்திவிட்டது உங்கள் பதிவு.

  வகுப்பிலே ஒரு பிள்ளை, அவ சரியான அமைதி, கேள்விகேட்டால், சத்தம் வராமல் தலையைக் குனிந்துகொண்டே பதில் சொல்லுவா, அப்போ ஒருநாள் அந்த மாஸ்டர் சொன்னார்.... “கிணத்திலே குளிக்கும்போது, துலாக்கொடியை(முந்தினகாலத்தில் பாவித்தது தண்ணி அள்ள) பிடித்துக்கொண்டு துள்ளுற துள்ளிலே, 3 வது வீட்டு முற்றத்தில நிற்கிற அண்ணனைத் தெரியும், இங்க வாயே திறக்கிறாயில்லையேயம்மா” :))) என்று.

  ReplyDelete
 18. நான் பேச நினைப்பதெல்லாம் பூஸ் பேச வேண்... ம்ஹூம். பேசுகிறார். ;)
  /// ஊஹூம்.... என் கொப்பிறைட் வாக்கியத்தை, என்னைக் கேளாமல் எடுத்தமைக்காக, இமாவை உடனடியாக வரும்படி, பிரித்தானிய நீதிமன்றத்திலிருக்கும், மேன்மை, அறிவு, நல்ல குணம்(இன்னும் என்னென்ன நல்லவை இருக்கோ அதையும் லிஸ்ட்டிலே சேர்த்துக்கொள்ளவும்:))பொருந்திய நீதிபதி(யோசிக்காதையுங்கோ, அது நானேதான்) உத்தரவிடுகிறார்....

  ReplyDelete
 19. மூன்று தரம் கூப்பிட்டால்தான் வந்து கூண்டில நிற்பன்.

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. சந்தூ, கவிதை சூப்பர். அறுசுவைக்கு அனுப்புங்கோ.
  அடடா! லேபிள் போடுவதில் பிரச்சினையா????" வாணியின் கிறுக்கல்கள் " என்று போடுங்கோ. நான் மறுப்பு சொல்லவே மாட்டேன்.

  ReplyDelete
 22. //"வாணியின் கிறுக்கல்கள்"// ;))

  ReplyDelete
 23. ////"வாணியின் கிறுக்கல்கள்"// ;)) //

  ஏன் ”எல் போர்டின் தடுமாற்றங்கள்” அப்படி கூட போடலாமே :-))

  ReplyDelete
 24. // //இன்னிக்கு முதல்ல வரவங்களுக்கு மஹியோட லெமன் சேவை.. சுடச்சுட பிழிந்துவிடப்படும்.. ச்சே.. பரிமாறப்படும்.. டும்.. டும்.. டும்..//

  ஹை.. ஒரு குண்டா லெமன் சேவையும் எனக்கே எனக்கா.. நன்றிங்க எல்போர்டு.. நீங்க நீடூழி வாழ்க..//

  சந்தவய ரொம்ப மிஸ் பண்ணுறீங்களா எல்போர்டு? ம்ம்...

  ReplyDelete
 25. நன்றி முகிலன்.. ஃபெட்னாவா? அப்பிடின்னா என்ன? எங்க கிடைக்கும்? முத்தழகுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்னுமே புரியலயே.. :)))

  //கவிதைகள் கொடுத்துதவிய முகிலனுக்கு நன்றி// நன்றி :)

  ம்ம்ம்.. நீங்க வந்து படிச்சு பின்னூட்டம் போட்டதே ஜனநாயகக் கடமைய நிறைவேத்துன மாதிரி தான்.. நீங்க கேக்குற கடமைக்கு இன்னும் கொஞ்சம் நாளாவட்டும்.. பார்க்கலாம்..

  ReplyDelete
 26. கவி.. அதூஊஊஊ ரொம்ப பசியாயிருந்ததா.. அப்போப் பாத்து மஹியோட ரெசிப்பி பாத்தனா? அதே நினப்பா இருந்தது.. அதேன்..

  நுணல்.. சரியாப் புரிஞ்சிகிட்டீங்க.. எனக்கு கொஞ்சம் உதறலாத் தான் இருந்தது - எங்க வழக்கம் போல இதுவும் புரியாம போயிடுமோன்னு :) நமக்காகத்தான் எழுதினது.. என்ன, அப்பப்போ மறந்துடறோம்.. :))

  ReplyDelete
 27. //:)//

  அதாரு இப்பிடியொரு கமெண்ட் போட்டுட்டு ஓடிப்போனது? இனிமே பின்னூட்டத்துல கண்டிப்பா ஒரு ஃபாண்ட் ஆவது இருக்கோனும்ன்னு கமெண்ட் பொட்டிய செட்டப் பண்ணிடப் போறேன் :)))

  ReplyDelete
 28. நன்றி இமா..

  வலையவிரயம் இப்போ அடிக்கடி நடக்குது :) அண்ணி உடையார் - ரைட்டு.. ஆனா அவங்க வெறும் ஏட்டு அண்ணியா இருக்காங்களே.. குறிப்பப் பாத்து நானில்ல பண்ண வேண்டியதாயிருக்கு?

  அப்பிடின்றீங்க? பயமாயிருக்கே இப்போ..

  ReplyDelete
 29. கத்திரிக்கா குழம்பு போன வாரம் பண்ணுனது இருக்கு இமா.. உடம்பு எப்பிடி இருக்கு? ஒரு செக்கப் பண்ணிட்டு வாங்க.. அப்புறம் தாறன்..

  ReplyDelete
 30. ஜெய்லானி.. அது ரொம்ப நல்லாயிருக்கும்.. வீட்டுல ஏதாவது நோம்பி நொடிக்கு பண்ணுவாங்க.. நிறைய வேல.. ஆனாலும் ருசிக்கு குறைச்சலில்ல.. ஒரே ஆளா பண்ணுறது ஈசி இல்ல..

  அப்பிடின்றீங்க? சும்மா சொல்லலயே? :-)) - இதயப் பாத்தாத் தான் பயமாயிருக்கு :) ஊக்கத்துக்கு ரொம்ப நன்றி..

  ReplyDelete
 31. கண்டபடிக்கு முறைச்சிட்டு இருக்கேன் அதிரா.. கர்ர்ர்ர்ர்..

  நன்றி.. அந்த லிங்க மஹி அனுப்பியிருந்தாங்க.. எனக்கு சட்டுன்னு எழுத வராது.. மெதுவாகத்தான் வரும்.. அடுத்த வாட்டி கண்டிப்பா பாக்கலாம்..

  (இமா - தகவலுக்காக உங்களுக்கு நன்றி.. )

  கூல் டவுன் அதீஸ்.. நம்பறோம்.. நம்பறோம்..

  ReplyDelete
 32. வான்ஸ்.. நன்றி.. கண்டிப்பா.. போட்டுட்டாப் போச்சு.. அறுசுவைக்கு அனுப்பும் அளவுக்கு எழுத முடியல. அடுத்த வாட்டிக்கு பார்க்கலாம்..

  ReplyDelete
 33. //எல் போர்டின் தடுமாற்றங்கள்// கொடுமைகள்ன்னு கூட போடலாம்.. :))

  ReplyDelete
 34. எல்லாமே சூப்பர் சந்தனா. அதுவும் அந்த ”வலையவிரயம்”.. !!

  ReplyDelete
 35. நன்றி ஹூசைனம்மா.. அது எல்லாருக்குமே பிடிச்சிருக்கறதப் பாத்தா.. ம்ம் :)) அஞ்சு நிமிஷம்ன்னு உக்காரவேண்டியது, அம்பது நிமிஷமாகியும் எந்திரிக்காம அப்பிடியே போயிடுது :)

  ReplyDelete
 36. பெருமாயி - முத்தழகு போனது அம்மூரா? வெளியூரா?

  வலைய விரயம் - நிஜம்தான் ஆஆஆஆஆனா கேட்டதெல்லாம் கிடைக்குதா என்ன?

  நுணல் - குட் டிசிசன்


  கூச்சம் மற - வேற வழியில்லயே!

  லேபிள் - மாத்தாதீங்கோ நல்லாவே இருக்கு...!

  ReplyDelete
 37. இமா,/பார்த்து, பத்திரம் சந்தூ. இந்தம்மா சிரிப்பு நல்லால்ல./கிர்ர்ர்ர்!
  Mahi said...

  :D :D :D :D
  August 22, 2010 2:24 PM
  இந்த சிரிப்பு நல்லாஇருக்கா??

  /அவங்க வெறும் ஏட்டு அண்ணியா இருக்காங்களே../கர்ர்ர்ர்ர்! நானிருக்க இடத்துல இருந்து டயக்னலி ஆப்போஸிட் இடத்துல இருந்துட்டு டயலாக்-ஆ??

  ஜெய் அண்ணா,/என்னது சேவையா..?? அங்க பிடிச்ச ஓட்டம் நா இன்னும் நிக்கல/கர்ர்ர்ர்!இந்த முறை மாரத்தான்ல உங்களுக்குதான் முதல் பரிசாம்,ஓடுங்க,ஓடுங்க!:)

  கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கு சந்தனா!

  ReplyDelete
 38. நன்றி வசந்த்.. முத்தழகு சும்மா கற்பனைக்கு.. நம்மூரு டார்க் ப்ரவுன் நிறத்துப் பொண்ண வச்சு எழுதினது.. வெளிநாடு தான்..

  கேட்டது கிடைத்ததுன்னா - நெட் கனெக்‌ஷன்.. இல்லாதப்ப இல்லையேன்னு இருக்கு.. வந்துருச்சுன்னா, அதய விட்டு வேறெதுலயும் பொழுது போக்கறதில்ல :)

  ReplyDelete
 39. அப்பாடி இப்போத் தான் போன மூச்சு திரும்பி வந்தது :)) (அப்போ இன்ன வரைக்கும்??? ஐ சி யூ ல வச்சிருந்தாங்க :)) ) நன்றி மஹி..

  ம்ம்.. ஒரு நா வசமா மாட்டாமயா போயிடுவீங்க? அன்னிக்கு கேப்பமில்ல.. கேக்கு, பன்னு, பிஸ்கோட்டி.. பேஸ்ட்ரி.. அப்புறம்.. சந்தவ.. அப்புறம்.. சரி, இப்போதைக்கு இது போதும்.. :))

  ReplyDelete
 40. சந்தனா சாவி கொடுத்தாஆ ஆடுற பொம்மாயியை தெரியும் இவக யாரு பெருமாயி???

  வலைய விவரம் ரொம்போ புடிச்சி இருக்கு சூப்பர்...

  ஆமாம நுணல் என்றால் என்ன?

  //நல்லாருக்கு சந்து... அது சரி அந்த நுணல் யாருங்க நாமதானே ?!//தாங்களா? அல்லது கவிதாவா? அல்லது இருவரும் சேர்ந்தா?

  கத்தரிக்கா குழம்பு புடிக்காது, கத்தரிக்கா பொரியல் புடிக்கும்...:)


  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 41. :)) only this much energy today... but i read everything

  ReplyDelete
 42. ஹைஷ்.. தற்பெருமையப் பத்தின கவிதை என்பதால பெருமாயின்னு வச்சேன்.. எங்க ஊர்ல ஒரு பாட்டி பேரு பெருமாயி.. அந்த நினைப்புல..

  அது விவரமில்ல :) விரயம் :)) எல்லாரும் நிறைய நேரம் வீணடிக்கிறோம் போல இருக்குதே வலையத்துல? :))

  இந்த நக்கலு தான வேண்டாங்கிறது? நுணல்ன்னா தவளை..

  சரி, அப்ப உங்களுக்கு மூணு வேளையும் அதயே போடச் சொல்லி ஆன்டிக்கு போனப் போடறேன்.

  ReplyDelete
 43. இட்ஸ் ஓக்கை இலா.. என்ன ஜிம்முல இருந்து வியர்க்க விறுவிறுக்க வந்த மாதிரி இருக்கு? :)) சரி, உங்களுக்கு மட்டும் - இந்தாங்க ஆரஞ் ஜூஸ்.. இளைப்பாறுங்க..

  ReplyDelete
 44. பெருமாயி பாட்டி இன்னும் இருக்காங்களா? எ.கொ.ச.இ இந்த வயசுல கூட பெருமாயி பாட்டிக்கு தற்பெருமையை பாருங்கோ :)

  சந்தனா வலையத்தில நேரத்தை விரையமா பண்ணீங்க நீங்கதான் விவரமான ஆளு ஆச்சே அதேன் ஆரம்பகாலத்திலே இமா, ஜீனோ, செபா அம்மா வையும் விட்டு வச்சிங்களா? (ஏதோ உளவு துறையில் பகுதி நேர வேலை பாக்குறமாதிரி இல்லை இல்லை முழு நேர வேலை பாக்குறமாதிரி :))) இதுவும் ஒரு மபொர பின்னுட்டம்தான். எங்க் இரண்டு நாளைக்கு தூங்காம கண்டுபிடிச்சிங்கனா “பல்லி மிட்டாய்” பரிசு கொடுக்க படும்:)

  ஆகா நுணல்னா தளவையா சே ... தவளையா அப்ப தணல்னா?

  அது சரி தவளைனா இந்த பித்தாளையில குண்டா, உருண்டையா இருக்குமே அதுவா? இப்ப அலுமினியம், பிளாஸ்டிக் ஸ்ஸ்ஸ் இப்பதான் நினைவூ வருது சினிமாவுல தண்ணி (இது வேற தண்ணி, அண்ணி சம்பந்த பட்ட தண்ணி இல்லை) கிடைக்கலைனு ரோட்டுல பெண்கள் கூட்டமா தவளை யோடு தகராறு பண்ணுவாங்களே அதுவா???

  ஐ இங்குதான் சொந்த சமையல் ஆச்சே:)))

  ReplyDelete
 45. அது தவலன்னு நினைக்கறேன்...

  பெருமாயியோட பேத்தி முத்தழகு.. குழப்பாதீங்க ஹைஷ் :)

  உங்கட ம பொ ர பத்து நாளு தூங்காம யோசிச்சாலும் புரியாது :) அதனால.. இப்போவே குட்டு நைட்டு :))

  என்னமோ பழமொழி சொல்லுவாங்க - சிங்கம் குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலன்னு சொல்லுமாம் :)) விவரந்தான் :)

  ReplyDelete
 46. This comment has been removed by the author.

  ReplyDelete
 47. //பெருமாயியோட பேத்தி முத்தழகு.. குழப்பாதீங்க ஹைஷ் :)//

  நான் போய் சந்தனாவை குழப்ப முடியுமா? நான்தேன் குழம்பி போய் இருக்கேன் :)))

  அப்ப பெருமாயி பாட்டியின் மகளின் பெயர் என்னவாயிருக்கும்? இல்லைலா பீச்சுல சுத்தற முத்தழகுவின் அம்மா யாரா இருக்கும்? என்று குழம்பி போய் இருக்க்கேன் கொஞ்சம் வெவரமா சொன்னாதானே கவிதை எல்லாம் புரியும்:)

  ReplyDelete
 48. //அது தவலன்னு நினைக்கறேன்...// ஓகோ தவல அடை என்று சுடுவாங்களே அதுவா! இப்பதானே புரியுது:)

  ReplyDelete
 49. //உங்கட ம பொ ர பத்து நாளு தூங்காம யோசிச்சாலும் புரியாது :) அதனால.. இப்போவே குட்டு நைட்டு :))//

  //சிங்கம் குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலன்னு சொல்லுமாம் :)) விவரந்தான் :)// நெசமாலும் குட்டு நைட்டு சொல்லிட்டு எப்படி இவ்ளோ எச்சரிக்கையா குப்புற படுக்கலை :))) நெசமாலுமே விவரமான ஆளுதான்:)

  ReplyDelete
 50. ஐ நான் தான் 50, 51 :))) சந்தனா எப்ப பார்டி தரபோறிங்க:)

  ReplyDelete
 51. நம்ப முடியல ஹைஷ்!!! அப்ப த(தா)டி!!!

  ReplyDelete
 52. :)) இந்த ஹைஷ் அங்கிள கொஞ்சம் ஊருக்கு கூப்பிட்டுப் போங்க லதா ஆன்ரி :) கேள்வி மேல கேள்வியா கேட்டு டார்ச்சர் பண்ணுறார்.. :))

  ReplyDelete
 53. சந்தனா கவலையே வேண்டாம் இந்த தோல் உரிச்ச சிங்கம்(என் பாஸ்தான்) அந்த வேலையை பாத்துகிட்டு இருக்கு கூடிய சீக்கிரம் இந்த இடத்தில் இருந்து மாற்றல் வந்து விடும்:)

  ReplyDelete
 54. அவருக்கும் ம பொ ர சொல்லினீங்களோ :)) இப்புடி தவல-தவள-தவழ ன்னு பேசிட்டேஏஏஏ இருந்தீங்களோ :)) மனுசனால வச்சு சமாளிக்க முடியல போலயே :)) ஹாஹ்ஹா.. சிரிச்சு முடியல..

  ReplyDelete
 55. //இப்புடி தவல-தவள-தவழ ன்னு பேசிட்டேஏஏஏ இருந்தீங்களோ//

  கசடதபற
  யரலவழள
  ஞஙனநமன

  அதனால ரொம்பவே புடிக்கும்:)

  ReplyDelete
 56. //யரலவழள//
  ஒவ்வொரு தடவையும் இங்கு படிக்கும் போது இப்படி மனதில் ஓடும். நீங்க போட்டு இருக்கீங்க ஹைஷ் அங்கிள். ;)

  ReplyDelete
 57. நன்றாக உள்ளன தங்கள் கவிதைகள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 58. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. இந்த ஹைஷ் அங்கிள காக்கா தூக்கிட்டுப் போக.. நூற எட்ட வச்சிடுவாரு போலயே :)

  நீங்க வேற இமா.. அவரு உங்களுக்கும் அங்கிளா? :)

  ReplyDelete
 59. நன்றிங்க எஸ்.கே.. ம்ம்.. நீங்க போட்ட வலைய விரயம் கேள்விகளப் பாத்து பக்குன்னு இருக்கு :) சீக்கிரமா மீளனும் :)

  ReplyDelete
 60. //நீங்க வேற இமா.. அவரு உங்களுக்கும் அங்கிளா? :)///

  இதென்ன பெரிய அதிசயம் அறுசுவை அட்மினை அண்ணா அண்ணான்னு வாய் நிறைய கூப்பிகிறவர். இங்கே அங்கிள்ன்னு தானே கூப்பிட்டார். me escape......

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)