26 August 2010

இதுக்கு என்ன தான் முடிவு?

தன்னுடைய சைக்கிளை பார்த்தபடி நின்றிருந்தாள் சகுந்தலா..

”ச்சே என்ன பொண்ணு நீ.. இப்பிடி வெல கொடுத்து வாங்கி வந்த சைக்கிள ஆறு மாசமா வெளிய எடுக்காமயே போட்டு வச்சிருந்திருக்கியே.. ” அவளின் மீதான கோபத்தை மனம் வெளிப்படுத்தியது..

பால்கனி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது அந்த புழுதி படிந்த சைக்கிள்.. நீல நிறத்துடையது..  குறுக்கே தண்டியற்ற பெண்களுக்கான வகை.. கையை வைத்து இழுத்துப் பார்த்தாள்.. ஒரு இஞ்ச் அளவுக்கு புழுதி வந்தது.. தன் பெயரை எழுதிப் பார்த்தாள்.. ”ம்க்கூம்.. இதுக்கொன்னும் குறைச்சலேயில்ல...” மறுபடியும் மனம் ஒரு பக்கம் கிண்டலடித்தது.. சைக்கிளின் கழுத்தில் தொங்கிய விலைச்சீட்டைக் கண்டதும் ரொம்பவே அவமானமாக இருந்தது.. ”வாங்கி ஆறு மாசத்தில் ஒரு நாள் கூட வெளியே எடுக்காம..” மறுபடியும் மனம் அவளைத் திட்டுவதாக எண்ணி தன்னைத் தானே திட்டிக் கொள்ளத் துவங்கியது..

அவள் சைக்கிள் வாங்கின கதையையே தனியாகச் சொல்லலாம்.. சைக்கிள் ஒன்றிருந்தால், தேவையான போது கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கிக்கொள்வேன் என்று கணவனை நச்சரித்துக் கொண்டிருந்த நேரம்.. அவன் தலையில் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னான்.. ”கண்டிப்பா இதயும் வீண் தான் பண்ணப் போற..”  அவன் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும்.. இனி எதுக்கெடுத்தாலும் இதையே, குறைந்தது ஆறு வருஷத்துக்காவது சொல்லிச் சொல்லி அவன் குத்திக் காட்டப் போவது உறுதி!

எப்படி இதெல்லாம் ஆரம்பித்தது? ம்ம்.. ஜான் அங்கிள் தான் எல்லாத்துக்கும் காரணம்.. அவர் தான் முதன் முதலில் ஆசை காட்டியிருந்தார்.. ”இப்பிடியே உன்னோட அப்பார்ட்மெண்ட் கேட் வழியா வெளிய வந்து, எதுத்தாப்புல இருக்கற ஸ்டேட் பார்க் வழியா சைக்கிள் பண்ணி போனீன்னா.. அஞ்சே நிமிஷத்துல வால்மார்ட் சூப்பர் மார்கெட் வந்துடும்.. நான் இப்பல்லாம் தெனமும் எக்சர்சைஸ் பண்ணற மாதிரி ஓட்டிட்டு போயிட்டு அன்னன்னிக்கு என்னென்ன தேவைப்படுதோ, அதெல்லாம் வாங்கி வரேன்.. ”

ஜான் அங்கிள் அவளுடைய அபார்ட்மெண்டின் இன்னொரு மூலையில் இருக்கும் சக வசிப்பாளர்.. ஜான் என்றதும் வெள்ளையரோ என்று நினைத்திட வேண்டாம்.. கேரளாக்காரர்.. கல்ஃபில் சில வருஷம், ஆஸ்திரேலியாவில் சில வருஷம், ஐரோப்பாவில் சில வருஷம், மற்றும் தென் அமெரிக்காவில் சில வருஷம் என வாழ்நாளைக் கழித்திருப்பவர்.. இன்னும் அண்டார்டிக்கா ஆஃப்ரிக்கா மட்டும் தான் மிச்சம் வச்சிருக்கீங்க என்று கிண்டலடித்திருக்கிறாள்.. தன்னுடைய சைக்கிளை தான் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்வதாகவும், தன்னுடனே பல வருடங்களாக பயணிக்கும் தோழனென்றும் அதனைப் பற்றிப் பேசி, நினைவுகளின் ஓர் ஓரத்தில் புதைந்து போய்க் கிடந்த அவளுடைய பால்ய கால சைக்கிள் நினைவுகளைக் கிளறி விட்டவர்..

ம்ம்.. பள்ளி காலச் சைக்கிள்.. அவளுடைய மிக உற்ற தோழனாக ஒரு காலத்தில இருந்த சைக்கிள்.. அதுவும் நீல நிறத்துடையது.. ”போதும் நிறுத்து.. வெளியே வா.. நீ மூழ்க ஆரம்பிச்சா மீள மாட்ட... இப்ப ஆகற வேலையப் பாரு..” மறுபடியும் அவளைத் திட்டி நிகழ்காலத்துக்கு தன்னைத் தானே இழுத்து வந்தது அவள் மனம்.. ”நீ எப்போ தான் என்னைத் திட்டாமல் இருப்ப..” அதனிடம் சண்டையிட்டவாறே தன் சைக்கிளைத் துடைக்கலானாள்..

தொடரும்..

(சைக்கிளயே வச்சு எழுதப்பட்ட கதை இல்ல.. அடுத்த பாகத்துல மிச்ச ஆட்கள் வருவாங்க.. :)) அப்புறம், கதைல வர்றது ரெண்டு சக்கரச் சைக்கிள் :)) )

19 comments:

 1. :) வடைய சாப்பிட்டு வரேன்

  ReplyDelete
 2. //சைக்கிள் ஒன்றிருந்தால், தேவையான போது கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கிக்கொள்வேன் என்று கணவனை நச்சரித்துக் கொண்டிருந்த நேரம்..// நான் கூட ஏதோ குட்டி பாப்பா சைக்கிள் படம் போட்டிருக்கே அதேன் அதில் வால்மார்ட் போக வெட்க பட்டு கொண்டு போக வில்லையோ என்று :)))

  ReplyDelete
 3. சந்தனா //இனி எதுக்கெடுத்தாலும் இதையே, குறைந்தது ஆறு வருஷத்துக்காவது சொல்லிச் சொல்லி அவன் குத்திக் காட்டப் போவது உறுதி!

  எப்படி இதெல்லாம் ஆரம்பித்தது? ம்ம்.. ஜான் அங்கிள் தான் எல்லாத்துக்கும் காரணம்.. அவர் தான் முதன் முதலில் ஆசை காட்டியிருந்தார்..// இது எப்பூடி ஒரு கல்லில் ரண்டு மாங்கா அடிக்கிறீங்க,

  ஒன்று சைக்கிள் வாங்க சொன்னவரு, ஒன்னு சைக்கிள் வாங்கி கொடுத்தவரு இருவருக்கும் செம்ம ஆப்பு. சே இது மாதிரி ஆண்கள் மேல் பழி போடுவதே வேலையாப் போச்சூஊஊ:)))

  ReplyDelete
 4. //ஜான் அங்கிள் அவளுடைய அபார்ட்மெண்டின் இன்னொரு மூலையில் இருக்கும் சக வசிப்பாளர்.. ஜான் என்றதும் வெள்ளையரோ என்று நினைத்திட வேண்டாம்.. கேரளாக்காரர்.. கல்ஃபில் சில வருஷம், ஆஸ்திரேலியாவில் சில வருஷம், ஐரோப்பாவில் சில வருஷம், மற்றும் தென் அமெரிக்காவில் சில வருஷம் என வாழ்நாளைக் கழித்திருப்பவர்.. இன்னும் அண்டார்டிக்கா ஆஃப்ரிக்கா மட்டும் தான் மிச்சம் வச்சிருக்கீங்க//

  சந்தனா ஜான் அங்கிள் இல்லைனா என்ன? அதென் ஜீனோ அங்கிள் ஆப்பூரிக்காவுல ஹைஷ் அங்கிள் அண்டார்டிகாவுல இருக்கோமுல்லா... சத்தமா சொல்லிடாதீங்கோ பக்கத்திலிருக்கும் நியூ ஆன்ரி பேச்சு துணைக்கு வந்திர போறாக:)))

  ReplyDelete
 5. இதுவும் சைக்கிள வைச்சு எழுத பட்ட பின்னூட்டம் அல்ல அதன் கேப்புல எல்லோரையை இழுத்து புட்டோமில்ல்:)))))

  ReplyDelete
 6. லதாவுக்கு இமெயில் ஐடி எதும் கிடையாதாம் :))))

  ReplyDelete
 7. நானும் ஒரு சைக்கிள் வாங்கி வச்சிட்டு சும்மா உக்காந்திருக்கேன். விண்டர் வேற வரப்போவுது. நல்லகாலம் எங்க ஊர்ல தூசி படியறது இல்லை.

  ReplyDelete
 8. ஹைஷ் அண்ணா ரொம்ப ஃப்ரீ போல இருக்கு. வடையெல்லாம் சாப்பிட்டு தெம்பா எல்லாரையும் கலய்ய்ச்சுக்கிட்டு இருக்கீங்க.

  சந்து இப்படி வாங்கி ஒரு ஓரமா இருந்து தூசி படியறது சைக்கிள் மட்டுமா? என்னோட லிஸ்ட் ரொம்ம்ப பெரிசு :)

  ReplyDelete
 9. //சைக்கிள் ஒன்றிருந்தால், தேவையான போது கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கிக்கொள்வேன் என்று கணவனை நச்சரித்துக் கொண்டிருந்த நேரம்// இது அப்படியே ஏன் கதை :)) ஆனால் கணவன் எதற்கும் மசியவில்லை :(((

  ReplyDelete
 10. சுவாரசியமா இருக்கு; ஆனாலும் அந்த 3-சக்கர படம் போட்டது டூ மச்தான்!! நானும் ஏமாந்துட்டன்; அழகான படம்.

  ReplyDelete
 11. ஹைஷ் அண்ணே!! x 6 !!

  போங்க, போய் ஏதாச்சும் ம.பொ.ர போடுங்க, இங்க சைக்கிள் காப்ல ப்ளேன் ஓட்டிட்டு இருக்காம. ;)

  நீங்கள் அடிக்கிற கூத்தில எனக்குப் போட வந்த கமண்டும் மறந்து போச். ;)
  ~~~~~~
  ம். சந்தூஸ்.. இங்கயும் கனக்க 'சைக்கிள்' விலைச்சீட்டோட கிடக்கு. நினைவு படுத்தீட்டீங்கள், போறன் தூசு தட்ட.

  கெதியா அடுத்த பகுதி போட்டு வைங்க.

  ReplyDelete
 12. ஹய் எனக்கும் உங்களுக்கும் ஒரே ஒற்றுமை... அதே நீல கலர் சைக்கிள்!
  அது கூட மேச்சிங்கா ஹெல்மெட் வேற.. பக்கத்து வீட்டு குட்டி பையன் ஹெல்மெட்டை மட்டும் "மியூசியம்" கேம் விளையாட அப்பப்போ எடுத்துக்குவார்....

  ReplyDelete
 13. ம்ம்.. அப்ப நிறைய பேரு வீட்டுல சைக்கிள் சும்மா நிக்கும் போலயிருக்குதே!!

  நன்றி ஹைஷ், முகிலன், கவி, ஸ்வர்ணா, ஹூசைனம்மா, இலா, இமா.. இன்னும் எழுத வேண்டியிருக்கறதால இன்னிக்கு இம்புட்டு தான் பின்பின்னூட்டம் :)))))))

  ReplyDelete
 14. அட நாந்தான் கடைசியா..!! சைக்கிளை ஞாபகப்படுத்திட்டீங்க.. எனக்கும் கொசுவர்த்தி நினைவுகள் வருது...

  ReplyDelete
 15. //அட நாந்தான் கடைசியா..!!// இன்னும் ஒன்னுரெண்டு ஆக்களக் காணோம்.. :))

  ReplyDelete
 16. சந்தூ, வந்துட்டோம்மில்லை. கதை நல்லா இருக்கு. சைக்கிள் தான் என் மகள் ஒடுற சைக்கிள் போல இருக்கு.

  //இனி எதுக்கெடுத்தாலும் இதையே, குறைந்தது ஆறு வருஷத்துக்காவது சொல்லிச் சொல்லி அவன் குத்திக் காட்டப் போவது உறுதி!//
  ஆறு வருடங்களுக்கு ஒரு மனுஷன் இதே நினைப்பாகவே இருப்பானா??

  நல்ல வேளை எங்கட ச.ச. தலீவருக்கு சந்தேகம் வராமல் கொசு வத்தி சுருள் வந்தபடியால் நாங்கள் தப்பிச்சோம்.

  ReplyDelete
 17. இன்னாதிது பெரியவங்க ஓட்டற சைக்கிள் படம் போடாம குட்டிப்பசங்க சைக்கிள் படம் போட்டு வச்சிருக்கீங்கோ?


  கதை நல்லாருக்கு அடுத்த பார்ட்க்கு மூவிங்...

  ReplyDelete
 18. நன்றி வான்ஸ்.. இன்னும் கொஞ்சம் ஆக்களக் காணல.. இன்னொரு ஆள கன நாட்களாக் காணல :))அவரு மறக்காம மூன்றாவது பாகத்துல கேட்டு வச்சிருக்கார்.. நானும் விளக்கம் சொல்லியிருக்கேன்.. பார்க்கலாம்..

  நன்றி இமா..

  அது விளையாட்டுக்காகப் போட்டது வசந்த்.. ஜஸ்ட் ஃபார் ஃபன் :))

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)