எதயும் எழுத மூட் இல்லை.. படிக்கவும்.. ஏன், எதற்குமே இப்போ மூட் இல்லை.. இந்தத் தலைப்பும் எனக்கு நானே அறிவுருத்திக்கொள்வது..
ஓரிடத்தில் இருந்து இன்னொரு ஊருக்கு மாறுகிறேன்.. மீண்டும் அங்கு என்றாவது செல்வேனோ தெரியவில்லை.. சொல்லாதீங்கோ என்று சொல்லியிருந்தும் மிஸ் யூ சொல்லி கலங்க வைத்தாயிற்று..
நதியானது எத்தனையோ இடங்களை, வனங்களை, மனிதர்களை பார்த்திருந்தாலும் , தான் போகும் வழியெங்கும் ஈரத்தை மிச்சம் விட்டுச் சென்றாலும், தன் இலக்கு நோக்கி ஓடிக் கொண்டே தான் இருக்கிறது.. நானோ இப்போதைக்கு கலங்கிய குட்டை போல நேற்றைய தேதியிலேயே தேங்கி நிற்கிறேன்..
எல்லாம் கொஞ்சம் நாட்களுக்குத் தான்.. சரியாகிக்கொண்டிருக்கிறேன்.. இன்னும் ஓரீரு நாட்களில் சரியாகிவிடுவேன் என்று தோன்றுகிறது..
இதுவும் கடந்து போகும் சந்தனா! சில நாட்களில் சரியாகிவிடும்.cheer up!:)
ReplyDeleteபுது இடம்,புது மனிதர்கள்,புது நட்பு அனைத்தும் நன்றாக அமைய வாழ்த்துக்கள்!
நம்ம குழந்தையா பொறந்தப்போ இவ்வளவு மனிதர்களையும்,இடங்களையும் பழகிவிட்டா பிறந்தோம்?? ஹேய் சந்தூ டேக் இட் ஈஸி ...
ReplyDeleteடேக் கேர்!
this Poem also talk somthing about your feeling u have time pls read it..! cheers
http://tamilamudam.blogspot.com/2010/08/blog-post_09.html
நான் சொல்ல வந்ததை வார்த்தை பிசகாம மகி சொல்லிட்டாங்க.
ReplyDeleteஇன்னும் எத்தனை மாற்றங்கள் இருக்கு பார்க்க. இதுக்கே இப்படியா சந்தனா. எல்லாம் விரைவில் சரியாகும். கவலைப் படாதீங்க.
எங்கிருந்தாலும் வாழ்க! வாழ்க ! வாழ்க ! சந்தூ! மெயில் அனுப்பினேன் அது தான் பதில் இல்லையா.. நல்லபடியா இருங்க எங்க போனாலும்...பிரிவுகள் வரும் அப்போ தான் சில இடங்களின் அருமையும் புரியும் especially NY :))
ReplyDeleteசந்தூ ஏன் இந்த கலக்கம்? எவ்வளவோ கடந்து வந்துட்டோம் இதுவும் அப்படியே கடந்து போகும். cheer up girl :)))
ReplyDeleteநன்றி மஹி.. இப்போ எவ்வளவோ பரவாயில்லை..
ReplyDeleteவசந்த்... நன்றி.. ஆமாம்... கவிதையில நான் சொல்ல நினைத்ததயே விரிவாகச் சொல்லியிருக்காங்க.. நதி போல நாமும் இருந்தால் நல்லாயிருக்கும்..
இமா.. நன்றி.. ம்ம்.. கவலை இல்லை.. ஒரு மாதிரி, நோஸ்டால்ஜியா தொடர்ந்து கொண்டே இருந்தது.. அதான்..
இலா.. இப்போ இங்கிட்டு தான் இருக்கேன்.. NY க்கு திரும்பி வந்ததால வந்த சோகம் தான் :)) மெயில் பாத்தேன்.. அப்போ மூட் ரொம்பவே அவுட்.. சீக்கிரம் பதிலளிச்சிடறேன்.. நன்றி.
கவி.. ரொம்ப நன்றி.. இப்போ சரியாயிட்டு இருக்கேன்...
எங்க ஊர்ல இருந்து ரொம்ப தூரம் போறீங்களா?
ReplyDeleteஎன்னப்பா, ஊர் மாறுறதுக்கா இவ்வளவு விசனம்? எனக்கு கொஞ்ச நேரம் ஒண்ணும் புரியலை. பின்னூஸ் பாத்தப்புறம்தான் புரிஞ்சுது.
ReplyDeleteபுது ஃப்ரண்ட்ஸ் கிடைச்சதும் சரியாகிடும். (ஆனா, நீங்க எத்தன ஊர் மாறினாலும், நெட் ஃப்ரண்ட்ஸ் மாறமாட்டொமே!!) :-)))
சந்து இடமாற்றமோ? கவலைதான், ஆனால் ஒரு நாட்டுக்குள்தானே, அதனால் எப்பவும் போய்ப் பார்க்கலாம்தானே. எப்பவும் ஒரே வட்டத்துள் இருப்பதைவிட, வித்தியாசமானோரைச் சந்திக்கும்போதுதான் நிறைய அனுபவம் கிடைக்கும், பழசின் அருமையும்/நல்லது கெட்டதும் புரியும்
ReplyDelete///பிரிவுகள் வரும் அப்போ தான் சில இடங்களின் அருமையும் புரியும் /// மனிதர்களதும்தான்.
என் பட்டிமன்றத்தலைப்புத்தான் நினைவுக்கு வருது சந்தனா... ஆபிரிக்காவில இருந்து இடம்பெயர்ந்தமையாலேயே நாம் இன்று முன்னேறியிருக்கிறோம், அதனால் இடமாற்றங்கள் நல்லதென நினைத்து மகிழ்ச்சியாக இருங்கோ.
“நாள் செய்வதுபோல் நல்லோர் செய்யார்”, 2 நாளில் எல்லாம் பழகிவிடும்.
அன்பு சகோதரி இளவரசி சொல்லும் :
ReplyDeleteபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்
அனுபவங்கள் தானே வாழ்கையே:)
வாழ்க வளமுடன்
பி.கு: இதற்கு முன் ஒரு பின்னுட்டம் போட்டேன் ஏனோ வரவில்லை --கோபமோ அல்லது அதிக வருத்தமோ??? நான் கூகிளை சொன்னேன்:)
இருக்கும் போது அதன் அருமை புரிவதில்லை.
ReplyDeleteபுரியும் போது அது அருகில் இருப்பதில்லை
மாறாதது மாற்றம் ஒன்றே..
இதுவும் கடந்து போகும்
//பி.கு: இதற்கு முன் ஒரு பின்னுட்டம் போட்டேன் ஏனோ வரவில்லை --கோபமோ அல்லது அதிக வருத்தமோ??? நான் கூகிளை சொன்னேன்:)//
ReplyDeleteசில சமயம் கூகிளும் காக்கா மாதிரி ஆகிடுது..நானும் கூகிளைதான் சொன்னேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteபழக்க தோஷம். மன்னிக்கவும்.
ReplyDeleteக.கா.போ ;)
சந்தூ, கவலை வேண்டாம். எல்லாம் நல்லபடியாக முடியும். நேரம் கிடைக்கும் போது மீண்டும் வாங்கோ.
ReplyDelete//பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)//
ReplyDeleteநீங்களே சொல்லிட்டு நீங்களே கடைப்பிடிக்க ஏன் இந்த தயக்கம்:)
எல்லோருக்கும் நன்றி.. இப்போ ஓக்கே.. இனி எல்லாப்பக்கமும் மெதுவாக எட்டிப் பார்க்கிறேன்..
ReplyDeleteநன்றி முகிலன்.. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல :))))))))
ஹூசைனம்மா.. நன்றி.. ஊர் மட்டுமில்ல, வானிலை, அலுவலகம், வேலை, கொலீக்ஸ் - இப்படி எல்லாமே மாறுது.. அந்த விசனம் தான்..
அதிரா.. நன்றி.. எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சாலும், அது நடக்கற வரைக்கும் மனசு கேக்கறதில்ல.. பழசுக்கும் புதுசுக்கும் ஒப்புமை பாத்துகிட்டே இருக்கு.. பழமொழி உண்மை தான்.. போகப் போக சரியாகிட வேண்டும்..
ஹைஷ் அண்ட் ஜெய்லானி - ரெண்டு பேரும் ஒன்னையே சொல்லியிருந்தாலும், உண்மை தான்.. அதுவரை பிரியமில்லாவிட்டாலும், பிரியும் போது பிரியம் ஏற்பட்டு விடுகிறது :))
ஹைஷ் - பின்னூட்டம் கண்ணில் படவில்லை.. ஜெய்லானி சொன்னது போல நடந்திருக்குமோ? :))
இதயும் கடந்து போகனும் - நன்றி ஜெய்லானி..
இமா.. க. கா. போயிட்டேன்.. சரியா? :)
வான்ஸ்.. வந்துகிட்டே இருக்கேன்.. மிக்க நன்றி..
இப்பத்தான் கவனிக்கிறேன். மேல எங்க ஊரு ஃபோட்டோவைப் போட்டதுக்கு தனியா 50 டாலர் அனுப்பி வையுங்க.
ReplyDeleteஅறிவுருத்திக்கொள்வது = அறிவுறுத்துதல்
ReplyDelete//ஓரீரு நாட்களி//
ஓரிரு? ஓரீறு??