27 August 2010

இதுக்கு என்ன தான் முடிவு? 3

(இதுக்கு முன்னாடி ரெண்டு பாகம் இருக்கு.. லிங்க் எல்லாம் தர முடியாது :)) இதுக்கு முன்னாடி பதிவுகள நீங்களே போய் படிச்சுக்கோங்க :)) )


மெட்ரோ ரயிலில் ஏறி அமர்ந்ததும், மீண்டும் நினைவுகள் எழுந்து ஆடத் துவங்கின.. அடிக்கடி நினைப்பதில்லை... ஆனாலும், சமயம் கிடைக்கும் போது அதுகள் ஆட்டம் போடத் தயங்குவதில்லை..


பாஸ்கரன்.. இவளை விட இரண்டு வயது பெரியவன்.. அறிமுகமானது அலுவலகத்தில்.. சேர்ந்த முதல் நாளன்று, இவளுக்கும் இவளது தோழிக்கும் யாரோவொருவர் அலுவலகத்தைச் சுற்றிக் காமித்துக் கொண்டிருக்க, அப்போது திடீரென எதிரில் உதயமானான்.. அவளது தோழியைப் பார்த்துக்கொண்டே சகுந்தலாவுக்கும் ஹாய் சொன்னான்.. தான் பாஸ்கரனென்றும், ஃப்ரம் வைசாக் என்றும் சொன்னான்.. அவனது தோற்றத்தைப் பார்த்து விட்டு, சகுந்தலா முதலில் நினைத்தது, வைசாக் என்பது அந்தமான் நிக்கோபாரில் இருக்கும் ஏதோ ஓர் ஊரென்று.. இத்தனைக்கும் அந்தமான் மக்களை இவள் பார்த்ததில்லை.. அப்புறம் வெகு நாட்களுக்குப் பின்னர் தான் தெரிய வந்தது, விசாகப்பட்டினத்துக்குப் சுருக்கப்பேர் தான் வைசாக் என்று.. 


பார்ப்பதற்கு சராசரி தென்னிந்தியனை விட சுமாரான தோற்றம்.. கருமை நிறம்.. உயரம்.. கண்ணாடி.. இவற்றையெல்லாம் தாண்டி, கண்ணைப் பறித்ததென்னவோ அவனது நீண்ட தலைமுடி தான்.. அன்று விரித்து விட்டிருந்தான்..  அவ்வப்போது அது குடுமியாகவும் உருவெடுக்கும்.. அவனது இன்னுமொரு தனித்தன்மை, அவனது தாடி ஸ்டைல்.. அதை இரண்டு மூன்று நாட்களுக்கொரு முறை, வேறு வேறு வடிவங்களுக்கு மாற்றிக்கொண்டேயிருப்பான்.. அலுவலகத்தில் ரொம்பவே பிரசித்தம்.. அப்புறம், அவனது புல்லட்.. யமஹாவும் ஹீரோ ஹோண்டாவும் வலம் வந்த அந்த வளாகத்தில், அவனது புல்லட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தது.. கவன ஈர்ப்புக்காகவே அவன் அத்தனையும் செய்து கொண்டிருந்தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.. 


அவனது தோற்றம் தான் ஒரு விதமாயிருந்தது என்றால், அவனது வேலைத்திறன் அதைவிட.. எல்லோரும் மாலை வேளையிலும், பல நாட்கள் இரவு நேரத்திலும் வந்தமர்ந்து முடித்துச் செல்லும் வேலையை, அவன் காலை நேரத்தில் ஏழு மணி சுமாருக்கு வந்து, ஒன்பது மணிக்குள் முடித்திடுவான்.. மேனேஜரிடம் ஒன்பதிலிருந்து பத்து வரைக்கும் நடக்கும் டிஸ்கஷன்.. அத்தோடு சரி.. பத்து மணிக்கப்புறம் ஆளை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.. தனது குறிக்கோள் “மினிமம் வர்க்” என்பான்.. மினிமம் வர்க் போட்டாலும் மேக்சிமம் ரிசல்ட் எடுத்துடறீங்க என்றால், மினிமம் வர்க்கோடு மேக்சிமம் ரிசல்ட்டுக்கு ஆசைப்படக்கூடாது, ”மினிமம் வர்க் அண்ட் ஆப்டிமம் ரிசல்ட்” என்று தன்னடக்கத்துடன் பதில் வரும்.. 


அலுவலகத்தில் சேரும் எவருக்கும் பாஸ்கரனுடனான முதல் சந்திப்பு நன்கு நினைவில் இருக்கும்.. ஆறு மாதம் கழித்துச் சேர்ந்த கலாவதியின் முதல் சந்திப்புக் கதை இன்னும் ப்ரசித்தம். வேலை ஆரம்பிப்பதற்கு முந்தின நாள் மாலை, நண்பரொருவருடன் அங்கு வந்திருக்கிறாள்.. யாரோவொருவர் தன் வேலை காரணமாக பாஸ்கரனைத் தேடி வர, அவரது நேரம், அவனிடமே கேட்டுத் தொலைத்திருக்கிறார்.. ”பாஸ்கரனா.. அவன் இங்கயில்லயே” என்று அவனே சொல்லியனுப்பி வைத்திருக்கிறான்.. பின்னர் அவர் வேறு யாரிடமோ விசாரித்து திரும்பி வருவதற்குள் ஆள் எஸ்கேப்.. அப்போது பார்த்து உள்ளே நுழைந்த கலாவதியிடம் அந்த நபர் பொருமித் தள்ளிவிட்டுப் போயிருக்கிறார்!!


ஒரு மல்டி டிபார்ட்மெண்ட் மீட்டிங் பற்றி சுத்தமாக மறந்து போய் தூங்கிக்கொண்டிருக்க, அன்று காலை மீட்டிங் ஆரம்பித்ததும் யாரோ நல்லவர் அவனது ரூமுக்குச் சென்று அவனை எழுப்பிவிட, அன்று பாகி பாண்ட்டுடனும், கலைந்த தலையுடனும், விலக்காத பற்களுடனும் அவன் செய்த திடீர் ப்ரவேசமும் ப்ரசண்டேஷனும் அலுவகத்தில் இன்னமும் பேசப்படுபவை.. அவனது கொலிக்ஸ் கொஞ்சம் பேர் அவனை வெறுத்தார்கள்.. அவனது வேலையையும் அவர்களே செய்ய வேண்டியிருந்ததால்.. சகுந்தலாவும் நொந்து தான் போனாள், அவனுடன் ஒரு மாதம் வேலை செய்த போது.. ஒரு நாளில் அதிக பட்சம் மூன்றே மணி நேரம் வேலை செய்துவிட்டு ஆள் எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்க, அதற்கப்புறம் நாள் முழுதும் வேலை ஒரு புறம், அவனைத் தேடி வந்து ஏசிவிட்டுச் செல்பவர்கள் ஒருபுறம் என்று திணறித் தான் போனாள்.. ஆனால், அவள் செய்த உதவிகளுக்காக அவன் நன்றி சொன்னதும் ஆறிப் போனது மனது.. பின் சில நாட்களில் அவனே தேடி வந்தும் உதவியிருக்கிறான்.. 


அதென்னமோ மேனேஜருக்கு பாஸ்கரனைப் பிடிக்கும்.. அலுவலகத்தின் கவனயீர்ப்பு விஷயமாகத் திகழ்ந்து கொண்டிருந்ததாலோ என்னவோ.. அதுவும் அவனது தாடி ஸ்டைலை கவனித்து கமெண்ட் சொல்லுவார்.. அவன் குட்டிச் சுவரை நோக்கி மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்ததற்கு அவரும் ஒரு காரணம்.. 


இந்தக் கதையெல்லாம் அமெரிக்கா வருவதற்கு முன்பு.. 




(தொடரும்)

10 comments:

  1. குட்டு நைட்டு மக்கள்ஸ்.. இதுக்கு மேல.. முடீயல்ல.. மீதி நாளைக்கு..

    ReplyDelete
  2. சரி,ஓக்கை! நாளைக்கு வரேன்.:)

    ReplyDelete
  3. என்னிக்கு முடியும்?!

    ReplyDelete
  4. இப்ப பாஸ்கர் அமெரிக்காவுல இருக்காரா இல்லை டெல்லியிலயா?

    ReplyDelete
  5. கெதியா குட்மார்னிங் ஆக வாழ்த்துகிறேன் சந்தூஸ்.

    ReplyDelete
  6. இந்த பார்ட் தான் நல்லா எழுதியிருக்கீங்க..! ம்ம் பாஸ் என்ற பாஸ்கரன்ன்னு கூட தலைப்பு வச்சிருக்கலாம்! சினிமா டைட்டில்.!

    தூக்கத்துலதான் நல்லா எழுதுவீங்க போல!

    ReplyDelete
  7. ஒன்னுமே புரியல உலகத்திலே..!!
    என்னமோ நடக்குது..மர்மமா இருக்குது...


    சைக்கிளுக்கும் , ஆஃபீஸுக்கும் 1+1=0 பைனரி கணக்கு மாதிரி இருக்கே ...ஹி..ஹி..

    தொடருமாஆஆஆஆ அப்ப சரீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  8. நன்றி மஹி..

    இன்னிக்கு முடிச்சிடலாம்.. எழுத எழுத வந்துகிட்டே இருக்கு.. என்ன பண்றது? :) நன்றி கவி..

    ஏன் டெல்லி? வொய் நாட் மும்பை ஆர் ஹைத்ராபாத் ஆர் சென்னை அப்பிடின்னு தோனுச்சு :)) மெட்ரோ ரயில வச்சு கேட்டிருக்கீங்கன்னு நினைக்கறேன்.. சரியா? :)) அமெரிக்காவுல தான் :)) நன்றி முகிலன்..

    குட்மார்னிங் ஆயாச்சு இமா.. ஆனா குட்டு நைட்டுக்கு முன்னாடி தான் எழுதுவேன்.. வசந்த் என்னமோ சொல்லியிருக்கார் பாருங்க :))

    :)) அப்பிடியா? பாஸ்கரன் வந்ததும் இந்த பார்ட் உங்களுக்கு பிடிச்சிருச்சு போல வசந்த்.. ஃப்லோல வருது... இந்த பகுதிக்குன்னு ஏதும் தனியா யோசிக்கல... நேத்து சாயந்திரம், இரவுன்னு எழுதினது தான் 2 அண்ட் 3...

    ReplyDelete
  9. ஜெய்லானி.. உண்மை + கற்பனை = புனைவு அப்படின்ற கணக்கு சரியா வரும்.. சகுந்தலாவின் ஒரு நாள் பொழுதில், சைக்கிளைப் பிரிய வேண்டிய நேரத்தில் நடக்கும் மனவோட்டம், அது தொடர்பான மனிதர்கள், அவர்களுடனான நினைவுகள்ன்னு பயணிக்குது.. அதான் அப்படித் தெரியுது உஙகளுக்கு..

    சைக்கிள் - அத வச்சு அன்னிக்கு சகுந்தலாவோட நாளுக்குள்ள வர்ற பாஸ்கரன் - தொடர்ந்து அவரைப் பற்றிய நினைவுகள் - அதனைத் தொடர்ந்து அவங்களோட சந்திப்பு - பேச்சு - அது தொடர்பான மனிதர்கள்.. இப்பிடிப் போகுது.. முழுமையான கதையில்லை.. இந்த கோணத்துல படிச்சுப் பாருங்க..

    ReplyDelete
  10. ///ஜெய்லானி.. உண்மை + கற்பனை = புனைவு அப்படின்ற கணக்கு சரியா வரும்..//

    ஓஹ்..அப்படி போகுதா கதை...ஓக்கே..ஓக்கே...ஹி..ஹி..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)