04 January 2010

செல்லமாய்ச் செல்லம் என்றாங்கடா..

இந்தக் கொடுமைய எங்க சொல்றதுன்னு தெரியாம இங்க சொல்லிட்டுப் போறேன்..

இன்னிக்கி சாயந்திரம் தனியாளா :) வீட்டுல இருந்து வெளிய வந்தேன் - அபார்ட்மண்ட் ஆபிஸுக்கு போறதுக்காக. ஒரு பத்தடி எட்டி வச்சதும்.. அந்தக் கண் கொள்ளாக் காட்சி.. பகீர்ன்னுது.. திரும்பிப் போய்டலாமா இல்ல தெகிரியமா முன்னேறலாமான்னு ஒரு பத்து செகண்ட் யோசன பண்ணிட்டேன்.. அந்த கன நேரத்துல நம்மள நோக்கி.. நாலுகால் பாய்ச்சல்.. கூச்சல்..

ஆ.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ஸ்டாப் இட்.. வாட் இஸ் திஸ்... ஓ நோ.. (பீட்டரில்லீங்க, என்ன செய்ய, செல்லம் இந்தூர்க்காரராச்சே)

நகரக்கூட முடியாம ஃப்ரீஸ் ஆகி நின்னுட்டு.. கண்ணுல கண்ணீரெல்லாம் வந்து.. தட தடன்னு அடிச்சிகிட்டு (ஹார்ட்டு தாங்க).. ஓ நோ..

பாஞ்சு வந்த செல்லம் நம்ம கிட்ட வந்ததும் சுத்தி ஒரு ரவுண்ட் போனாரு.. கடிக்கலாமா வேணாமான்னு சின்ன டைலமா போல.. நல்லவேளையா வாயில பந்தைக் கொடுத்திருந்தாங்க அந்த தத்தெடுத்த புண்ணிவானுங்க.. இல்லாட்டி பந்துக்கு பதிலா எங்காலத்தான் கவ்விட்டு ஓடிருப்பாருன்னு நினைக்கறேன்..

திரும்பி ஓடினார்.. நேரா அவங்க கிட்ட.. அவங்க அவரை செல்லமா பிடிக்க முயற்சி (??!!) எல்லாம் பண்ணுனாங்க.. அவரா சிக்குவார்?

மறுபடியும் நம்மள நோக்கி... ரீப்பீட்டேய்..

Example

ஆ.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ஸ்டாப் இட்.. வாட் இஸ் திஸ்... ஓ நோ..

நகரக்கூட முடியாம ஃப்ரீஸ் ஆகி நின்னுட்டு.. கண்ணுல கண்ணீரெல்லாம் வந்து.. தட தடன்னு அடிச்சிட்டு (ஹார்ட்டு தாங்க).. ஓ நோ..

பாஞ்சு வந்த செல்லம் நம்ம கிட்ட வந்ததும் சுத்தி ஒரு ரவுண்ட் போனாரு.. கடிக்கலாமா வேணாமான்னு சின்ன டைலமா போல.. நல்லவேளையா வாயில பந்தைக் கொடுத்திருந்தாங்க அந்த தத்தெடுத்த புண்ணிவானுங்க.. இல்லாட்டி பந்துக்கு பதிலா எங்காலத்தான் கவ்விட்டு ஓடிருப்பாருன்னு நினைக்கறேன்..

திரும்பி ஓடினார்.. நேரா அவங்க கிட்ட.. அவங்க அவரை செல்லமா பிடிக்க முயற்சி (??!!) எல்லாம் பண்ணுனாங்க.. இந்தவாட்டி சிக்கிட்டார்..

என்னென்னமோ கேட்கனும்னு தோனுச்சு.. பதிலுக்கு அவங்க கைல இருந்த பிடிய விட்டுட்டாங்கன்னா???

கண்ணுல வழிஞ்சத தொடச்சிகிட்டு நடையக் கட்டுனேன் நானும்.. (அம்புட்டு நல்லவிங்கன்னு நெனச்சு ஏமாந்துறாதீங்க.. சொல்ல வேண்டிய இடத்துல சொல்லிடுவம்ல?)

இங்க மட்டுமில்லீங்க.. ஊர்லயும் செல்லங்கள் இருக்கற வீட்டுக்கு போனா(விருந்தாளியாத் தான்) இந்தக் கொடும நடக்கும். செல்லங்கள் வளர்ப்போரே.. உங்களுக்கு வேனும்னா இதுகள் செல்லங்களா இருக்கலாம்.. எங்களுக்கெல்லாம் டெரரிஸ்ட்ஸ்.. இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கலாமே?

செல்லமாய்ச் செல்லம் என்றாங்கடா..
டாகி என்றே சொன்னாங்கடா..
பாய்ந்தோடிவந்து என்னை அழ வைத்தாய் கண்ணா..

14 comments:

  1. உங்களை ஒருவர் அழவைத்தார் என்பதற்காக எல்லோரும் டெரரிஸ்ட்ஸ் என்று சொல்வது சரியில்லை சந்தனா. ;(
    பப்பி... எங்கே இருக்கிறீங்க?

    ReplyDelete
  2. நீங்க தான் இமா முதல் பார்வையாளர் மற்றும் ஃபாலோயர்.. ஹி ஹி.. ரொம்ப நன்றி வருகைக்கு..

    சாரி இமா.. உங்கள வருத்தப்படுத்திட்டேனோ?
    இமா.. இமா.. எனக்கு வரும் ஃபீலிங்க் தான் அது.. அவர்களையேதும் தவறாக சொல்லவில்லை.. :)என்னை நோக்கி பாய்ந்து வந்தவரும் அன்பாகத் தான் வந்திருப்பார் (அவரோட ஸ்டைல்ல :)).. ஆனாலும், எனக்குள் ஏற்படும் பய உணர்வினைத் தான் சொன்னேன்..

    பப்பியோட ப்ரொக்ராம்ல குரைப்பது மட்டும் தான் இருக்கிறதாம், கடிப்பது எப்படின்னு யாரும் எழுதிவைக்கவில்லையாம் :)மறந்துட்டாங்களாம் :)

    ReplyDelete
  3. வவ்..வவ்...வவ்வ்வ்வவ்வ்வ்...வந்துட்டமுல்ல?
    ஜீனோவின் சகோ:) எப்படி இருந்தார்/ங்க எல்போர்டு? கருப்பா,வெளுப்பா,மாநிறமா? எத்தனை பல்லு?:)

    ஓடறவங்களைக் கண்டால் துரத்தரவங்களுக்கு கொண்டாட்டமாம்..நம்மூரு ஆளுன்னா கூட பயப்படலாம்..உங்கூரு செல்லங்கள் நிஜமாவே செல்லங்கள்தான்..ஆருக்கும் கடிக்கவே தெரியாது! ஹி,ஹி,ஹி!

    நீங்களும் தெகிரியமா செல்லத்துக்கு ஒரு ஷேக் ஹான்ட் குடுத்திருந்தா எல்லாம் சரியாகிருக்கும்..அத்த விட்டுட்டு என்னதிது சின்னப்புள்ளத்தனமா //ஆ.. ப்ளீஸ்.. .... .. ஓ நோ..// ஷேம்..ஷேம்..பப்பி ஷேம்! :D

    இருந்தாலும் உங்கள் உணர்வுகள் எங்களுக்குப் புரியுது..ஆனால் எங்கள் உணர்வுகள் உங்களுக்குப் புரிகிறதா??

    ReplyDelete
  4. வருக வருக ஜீனாயாரே :))பெருமகிழ்ச்சி தங்களைக் கண்டதும் :)

    உங்க சகோ ப்ரவுன் அண்ட் வைட் ஜீனோ.. நான் ஓடவெல்லாம் இல்ல.. என்ன செய்யன்னு தெரியாம நின்னுட்டேன்.. அம்புட்டு தெகிரியம் இருந்தா ஷேக் கொடுத்திருப்போமே? இப்புடி கிண்டல் அடிச்சுப்போட்டீங்களே? பப்பி எல்லாம் இல்ல.. நல்ல பெரியவர்..

    உங்க உணர்வுகள புரிஞ்சுக்க நானும் செல்லம் வளர்க்கனும்.. :) மூட் இல்லயே அதுக்கு :)

    ReplyDelete
  5. எருமை"யார்" -க்கு மட்டும் இம்மாம் மரியாத..ஜீனோக்கு "பப்பி ரீல் சுத்துது!"--ஆ??

    இது எந்த ஊரு நியாயங்கோ எல்போர்டு?? ஒருவேளை உங்க ப்ளாக் url -ல இருக்க ஊரோ? ;)

    ReplyDelete
  6. //வருக வருக ஜீனாயாரே :))//

    மறுவடியும் ஒருக்கா படிச்சுப் பாருங்க ஜீனோ :)

    எங்கூர்ல எல்லாருக்கும் ஒரே நியாயந்தான் :)

    ReplyDelete
  7. ஒரு நிமிடம் உங்களை நோக்கி ஓடி வருவதை நினைத்து பார்த்தா கபீருன்னுது..

    ReplyDelete
  8. ஜலீல்லா.. வாங்க வாங்க.. உங்களை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி.. ஆமா.. அந்த நேரம் என்ன செய்யனும், ஓடனுமா இல்ல நிக்கனுமா.. எதுவுமே தோனாம நின்னுட்டேன்.. நல்ல வேளைன்னு தான் சொல்லனும்..

    ReplyDelete
  9. அட நீங்க யாருப்பா பேர சொல்லுங்கள் எல் போர்டுன்னு பேர மாட்டிட்டீங்க.

    .

    ReplyDelete
  10. இப்படி கேட்டுடீங்களே ஜலீலா.. எனக்கு என் பேரச் சொல்ல பயம்.. ஆனா அறுசுவைல எல்லாருக்கும் என்னை சந்தனா னு தெரியும்..

    ReplyDelete
  11. ஆஹா இந்தக் கண்கொள்ளாக் காட்சிய பாக்க முடியலையே... கற்பனை பண்ணிப் பாத்தா, கழுத்துல பாம்பு சுத்துன ரஜினி (அண்ணாமலை) ஞாபகத்துக்கு வர்றார்.. ஹி ஹி ஹி..

    ReplyDelete
  12. ஆஹா.. என்ன இப்படி கம்பேர் பண்ணிட்டீங்க.. அது காமெடி.. இது சீரியஸ் :))

    ReplyDelete
  13. நீங்க எழுதிய முதல் பதிவு முதல் உள்ளே வந்து ஒரு அலசு அலசி துவைத்து காயப் போடனும்ன்னு வந்தா இந்த ஜனவரி மாதத்தில் உள்ள மொத்த இடுகையைப் பார்த்து படித்து வந்தால் எல்லாமே இன்ப அதிர்ச்சி.

    மற்றொரு வெட்டிப் பேச்சு சித்ரா போல வாழ்க்கையை எளிதாய் எடுத்துக் கொண்டு விஷமம் செய்வது புரியுது. எதார்த்தம் எளிமை இரண்டுக்கும் நடுவில் உள்ள கம்பியில் அட்டகாசமாக சமன் படுத்தும் வார்த்தைகள் பல இடங்களில் இருக்குது.

    மறுபடியும் அடுத்த மாத பதிவுகள் மீண்டும் தொடர்வேன்.

    ReplyDelete
  14. ஜோதிஜி.. வாங்கோ..

    //அலசி துவைத்து காயப் போடனும்//

    வீட்டுல இந்த மாதிரி நெறைய வேல தராங்க போல உங்களுக்கு? :))

    தவறுகள் தென்பட்டால் கண்டிப்பாகச் சுட்டிக் காட்டுங்கள்.. திருத்தங்களும் வரவேற்கப்படுகின்றன..

    //வாழ்க்கையை எளிதாய் எடுத்துக் கொண்டு//

    எளிதாக எடுத்திருப்பது போன்று இங்கே தோற்றமளிக்கிறேன்..

    //எதார்த்தம் எளிமை // இந்த வார்த்தைகளுக்கு நன்றி.. முதலில் கொஞ்சம் ஆங்கிலக் கலப்புடன் எழுதியிருக்கிறேன்.. இப்போது அதனைக் குறைத்துக் கொண்டுள்ளேன்.. ஆயினும், சொல்ல வருவதை தெளிவாகச் சொல்லும் கலை எனக்கு இன்னும் கை வரவில்லை..

    பிப்ரவரி மாதப் பதிவுகளில் தான் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் கூடிய ஒன்றிரண்டு பதிவுகள் எழுதியிருப்பேன்.. அதற்கப்புறம் எழுதியவை நிறைய விளையாட்டுத்தனமானவையே.. அதிகம் வாசிப்பதால் எழுதுவதற்கு நேரம் குறைவாகவே இருக்கிறது..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)