17 January 2010

திறப்பு விழா... சிறப்பு விழா....

வெகு நாட்களாக திட்டமிட்டிருந்த விழா.. இன்று தான் அமையப்பெற்றது..

இந்த ப்ளாக்கின் திறப்புவிழாவை சிறப்புவிழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்பது எமது ஆசை.. அதற்காக பல ஏற்பாடுகளை செய்திருந்தோம்.. நகரமெங்கும் கட் அவுட்கள்.. தோரணங்கள்.. சிறப்பு அழைப்பாளராக விவிஐபி திரு. கண்ணப்பன் அவர்களை அழைப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.. தனது கடுமையான நேரமின்மைக்கிடையிலும், ரிப்பன் வெட்ட சிறிது நேரம் ஒதுக்கித் தந்திருந்த அவருக்கு முதலில் எமது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. ரசிகப் பெருமக்களுக்கு - திரு. கண்ணப்பனைப் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பிலை.. இவருக்கும் முன்னாள் மந்திரி கண்ணப்பனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... இவர் கண்ணம்மாவின்  கணவன், சாரி, கணவர் கண்ணப்பன்..

சரி.. இனி நிகழ்ச்சிக்கு வருவோம்.. சுவையான சில காட்சிகள்..

சரியாக இந்தவூர் நேரப்படி இரவு எட்டு மணிக்கு ரிப்பன் வெட்ட நினைத்திருந்தோம்.. ஏழே முக்காலுக்கே வந்தமர்ந்து கணினியை ஆன் செய்து தன் நேரப்பற்றை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார்..

அவர் முதலில் விசிட் செய்தது.. எனது முதல் பதிவான ”செல்லமாய்ச் செல்லம் என்றாங்கடா”.... பக்கத்தை வெகு வேகமாக ஸ்க்ரோல் செய்துவிட்டு உளமார பாராட்டினார்.. அவருடைய வார்த்தைகளை அப்படியே இங்கு தந்துள்ளேன்..

”அந்தளவுக்கு (எந்தளவுக்கு???!!!) மோசமில்ல.. ஓகே வாத்தான் இருக்கு..”

ஜோக்கடிப்பதாக நினைத்துக் கொண்டு அவர் சொன்னது........ “என்ன இருந்தாலும் என்ன மாதிரி எழுத முடியாதுல்ல”

எமது எழுத்தார்வத்தை திறமையை கண்டு வியந்தார்..  ”நேரமில்ல நேரமில்லன்னு மத்த வேலையெல்லாம் அப்படியே கிடக்க எப்படி இங்க மட்டும் இந்தளவுக்கு எழுத முடியுது?”

ப்ளாக்கின் அடுத்தடுத்தடுத்தடுத்தடுத்த பதிவுகளைப் படித்து வியப்பின் உச்சிக்கே போனார்.. எம்மிடம் சிறு பேட்டியும் கண்டார்.... “எப்படி இப்படி திடீர்னு உங்களுக்குள்ள ஒரு எழுத்தாளர் உதயமானார்?” “அவரை எப்படி அடையாளம் கண்டுகொண்டீர்கள்?” எனக்கு மகிழ்ச்சியில் பதில் சொல்ல நா எழவில்லை...

எம்முடைய ரசிகப்பெருமக்களைப் பற்றி வினவினார்.. நேரப் பற்றாக்குறை காரணமாக பொதுவான சிறிய அறிமுகம் மட்டும் தரப்பட்டது..

அவருடைய பாராட்டுகளிலேயே நான் மணிமகுடமாகக் கருதும் வாக்கியம்... “நீங்கள் புதிய எழுத்தாளர் என்பதை படித்தவுடன் புரிந்து கொள்ளலாம்.. சற்று அல்ல நிறையவே அமெச்சூரிஷாக இருக்கிறது..”

அவ்வளவு நேர நெருக்கடிக்கிடையிலும், எமக்கு ஒரு சிறிய அறிவுரையை வழங்க அவர் தவறவில்லை....  “நேரம் பொன் போன்றது.. காலம் கண் போன்றது..”

அடுத்ததாக, பலத்த கரவொலிக்கிடையே... அவரது பொற்கரங்களால் ரிப்பன் வெட்டப்பட்டது..




நிகழ்ச்சியின் நிறைவாக மதியம் சாப்பிட்டு மீந்து போன கீரைக் குழம்பும், இரவு புதிதாக செய்யப்பட்ட சப்பாத்தியும் பரிமாறப்பட்டது..

புகைப்படக்காரரின் கேமரா அவர் சற்று கண்ணயர்ந்த கணப்பொழுதில் குரங்கு ஒன்றால் கவர்ந்து செல்லப்பட்டதால் புகைப்படங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.. அதில் எமக்கு சற்று வருத்தந்தான்..

திடீரென்று ஏற்பாடான விழா.. அதனால் உங்கள் அனைவருக்கும் முன்பே சொல்லமுடியவில்லை.. கட் அவுட்கள், தோரணங்கள் என பரப்பரப்பான அலுவல்களுக்கிடையே, அழைப்பிதழ் அனுப்பவும் அவகாசமில்லை.. இருந்தாலும், பொருத்தருள்ந்து, இந்த விழா விருந்தைப் படித்துண்டு மகிழ்வீராக..........................

18 comments:

  1. அதெப்படிங்க கண்ணப்பன் கை இன்விசிபிளாத் தெரியுது!!

    ReplyDelete
  2. ஹேய்!! சொல்லவேயில்ல?? நான் நீங்க ஏன் பிளாக் எழுத்டக்கூடாதுன்னு கேக்கலாம்னு நினைச்சு உங்க ப்ரொஃபைல்ல ஐ.டி. இருக்கான்னு பாக்கலாம்னு வந்தா, இங்க ஒரு பிளாக்கே உக்காந்திருக்கு!! ஷாக் ஆயிட்டேன், சொல்ல வேணாமா? நல்லவேளை திறப்பு விழாவுக்கே வந்துட்டேன்.

    அதுசரி, ரிப்பன் வெட்டுறதுக்கு முன்னாடியே நிறைய பதிவு போட்டிருக்கிறீங்க போல?? ஓ, இது அஃபிஷியல் ரிப்பன் கட்டிங், இல்லியா?

    Anyway nice to see u here!! Congrats and carry on!! அப்புறம் கண்ணப்பர் (இப்பவும்) நலமா?

    ReplyDelete
  3. கங்ராட்ஸ்.. படிச்சு முடிச்சும் நல்ல நிலமையில தான் இருக்கேன்... உள்ளே ஒளிந்துக் கொண்டு இருக்கும் அந்த எழுத்தாளரை உசுப்பி வெளியே எடுத்து விடுங்கோ...

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  4. ஜூப்பர்.....

    எல் போர்ட் கழட்டியாச்சா? ஆத்தாடி சாக்கிரதையா இருக்கணும் இனி....

    வாழ்த்துக்கள்ங்க....

    ReplyDelete
  5. கண்ணம்மா தனக்கு பெயர் சூட்டிக்கொண்டதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை..ஆனால் தன் கணவருக்கு அவர் கண்ணப்பன் என்று பெயர் சூட்டியதை வன்மையாக:) கண்டிக்கிறோம்.

    கேமராவைக் கவர்ந்து சென்ற குரங்கிற்கு கோடி நன்றிகள்! இல்லைன்னா, இந்நேரம் கண்ணம்மாவைப் பார்த்தவர்களில் பல பேர் பயத்தில் குளிர் ஜூரம் கண்டு ஹாஸ்பிடல்-ல அட்மிட் ஆயிருப்பாங்க! ஹி,ஹி!!

    ReplyDelete
  6. இமா.. இன்விஸிபிளா இருக்கும் கை அதெப்படி தெரியும்?? :)))

    ReplyDelete
  7. ஆரது.. பெரியாளுங்க வந்திருக்காங்க... ஸேர் எடுத்துப் போடப்பு...

    வாங்க ஹூசைனம்மா.. நீங்களே உங்க ப்ளாக் கு வர கூட்டத்த கட்டுப்படுத்த முடியாம திணறிட்டு இருக்கீங்க :)) இதுல நான் வேற உங்களுக்கு சிரமம் கொடுக்க வேணானுதான்.. :)) நன்றி - வருகைக்கும் வாழ்த்துக்கும்..

    ReplyDelete
  8. நீங்க பயப்படவெல்லாம் வேணாம் வசந்த்.. லைசன்ஸ் எல்லாம் கிடைக்க ரொம்ப நாளாவும். தெம்பா தெகிரியமா வந்துட்டு போங்க :))என்ன.. கொஞ்சம் ஹெல்மெட் போட்டுட்டு வந்துட்டீங்கன்னா நல்லது.. :)

    ReplyDelete
  9. ஹைஷ்.. வாங்க.. வாங்க.. வருகைக்கு நன்றி.. அந்த எழுத்தாளர் தூங்கவே விரும்புகிறாராம்.. இருந்தாலும் அப்பப்போ கண் முழிச்சு அருள் நல்குவாராம் :))

    ReplyDelete
  10. என்ன பேர் வைக்கன்னு தெரியல மஹீ.. அதான்.. அம்மாக்கு அப்பா னு பால் மாத்தி வச்சுட்டன் :) குரங்கு உங்க கிச்சன் பக்கமாத் தான் வந்திட்டு இருக்காம்.. சாக்கிரதை :))

    ReplyDelete
  11. மர்மக்கதை எழுத்தாளர் சந்தனாவுக்கு வணக்கம்.

    சிறப்பு விழாவுக்கு, முன் சீட்டில் இடம்பிடிக்க வெளிக்கிட்டு, குரங்கார் பாய்ந்ததில், தப்பினேன் பிழைத்தேன் என ஓடியதுக்கு இன்றுதான் வந்திருக்கிறேன். இருப்பினும் எம்மோடு கு.ரங்குப்பிள்ளையையும் இன்வைட் பண்ணியது தப்புத்தான்%)%).

    //உள்ளே ஒளிந்துக் கொண்டு இருக்கும் அந்த எழுத்தாளரை உசுப்பி வெளியே எடுத்து விடுங்கோ...// நானும் ரிப்பீட்டு... உறங்கிக்கொண்டிருக்கும் மிருகத்தைத் தட்டி எழுப்புங்கோ பிளீஸ்...

    மீண்டும் வருகிறேன். வாழ்க! வளர்க!! வளர்க்க!!!

    ReplyDelete
  12. அதிரா.. %%% நான் எப்போ மர்மக்கதை எழுதினேன்?? :)))

    ReplyDelete
  13. //குரங்கு உங்க கிச்சன் பக்கமாத் தான் வந்திட்டு இருக்காம்.. சாக்கிரதை :)) // அட ஆமாம் சந்தனா..இன்னைக்கு மத்யானம் கரெக்ட்டா பதிமூணு மணிக்கு வந்து கதவைத் தட்டுச்சு..:)

    நான் சாக்கிரதையா ரெண்டு ஈஸி லட்டுக்கு கேமராவ ட்ரேட் -இன் பண்ணிகிட்டேன்..ரொம்ப சுமாரான கேமராவா இல்லாட்டாலும் ஏதோ ஓரளவுக்கு சுமாரான:) கேமராதேன்!! குரங்குக்கு எங்க வீட்டு அட்ரஸ் குடுத்ததுக்கு டாங்ஸூ!!

    ReplyDelete
  14. //எம்முடைய ரசிகப்பெருமக்களைப் பற்றி வினவினார்.. நேரப் பற்றாக்குறை காரணமாக பொதுவான சிறிய அறிமுகம் மட்டும் தரப்பட்டது..// திஸ் இஸ் வெரி பேட் படி!! அட்லீஸ்ட் இந்த ஜீனாயாரைப் பற்றியாவது ஓர் அரை மணி நேர சுருக்கமான அறிமுகம் தந்திருக்க வேண்டாமோ??

    எனிவே, திறப்பு விழாவுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  15. பாக்கத் தான போறோம்.. லட்டு எப்படி வந்ததுன்னு :)

    ReplyDelete
  16. ஜீனோ.. உங்கள பத்தி சொல்ல ஆரம்பிச்சா மணிக்கணக்குல ஆவும்ன்னு வெறும் போட்டோ மட்டும் காட்டி புரிய வச்சாச்சு :))

    ReplyDelete
  17. குரம்க்கு பேரு என்ன சந்தனாவா?

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)