14 January 2010

சில அப்பாவி கேள்விகளும், அசட்டை பதில்களும்..

கண்ணம்மா, நாதிரா, ராக்கண்ணன் மூவரும் ஒரு டின்னரில் சந்தித்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.. ராக்கண்ணன் அமெரிக்கர்.. கண்ணம்மா இந்தியர்... நாதிரா.......


இதற்கு முந்தைய கேள்விகள்...


ராக்: ”இந்தியால எந்த இடத்துல இருந்து வரீங்க”

நாதிரா: ”நான் இந்தியரில்லை..”

ராக்: (சற்று குழப்பத்துடன்....) ”ஆனா...... பாக்கறதுக்கு.......”

நாதிரா: ”என் பெற்றோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்...”

ராக் இருவரையும் மாறி மாறி பார்க்கிறார்.... முகத்தின் இடது பக்கத்தில் ஐந்து ஆச்சர்யக்குறிகளும், வலது பக்கத்தில் ஐந்து கேள்விக்குறிகளும் தென்படுகின்றன..

(இந்தூர்க்காரங்களுக்கு இதே பொழப்பாப் போச்சு...).......... கண்ஸ், நாதிரா இருவரும் ஒருவரையொருவர் பார்த்து பெருமூச்சு + புன்னகைத்துக் கொள்கின்றனர்...

நாதிரா: ”அதெல்லாம் அரசியலுங்க.. விடுங்க...”

ராக்: ”ஆமா, பாகிஸ்தானுக்கு பாகிஸ்தான் ன்ற பேரு எப்படி வந்தது ன்னு தெரியுமா?”

நாதிரா: (ஏனுங்க, நானும் உங்கள மாதிரி அமெரிக்கால பொறந்து வளர்ந்த பொண்ணுதானுங்க.. என்கிட்ட போயி.. இம்பூட்டு கஷ்டமா கேள்வி கேட்கிறீயளே..) ”ம்ம்.. பாகின்னா தூய்மைன்னு நினைக்கறேன்.. ஸ்தான் ன்னா இடம்.. ”

ராக்: ”இல்லயே.. நான் வேற மாதிரியில்ல கேள்விப்பட்டேன்.. பி ஃபார் பஞ்சாப்.. ஏ ஃபார்.........ம்ம் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குதே..”

நாதிரா: (இதுக்கு மேல என்கிட்ட ஏதாச்சும் கேட்டீங்க.. அழுதுருவேன்)... தலையையாட்டி உதட்டை பிதுக்குகிறார்...

கண்ஸ்: (ஆஆஆ.. எனக்கு பஞ்சாப் எங்க இருக்குன்னு ஞாபகம் வந்துடுச்சு....) ”நீங்க சொல்லறது சரியா இருக்கலாம்.. பஞ்சாப் பாகிஸ்தானுக்கும் இந்தியாக்கும் பார்டர்ல தான் இருக்கு..”

நாதிரா: (எனக்கும்... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..) ”ஆமாமா.. அங்க தான் இருக்கு..”

ராக்: (நல்ல அறிவாளிப் புள்ளைங்க கூடத் தான் பேசிட்டிருக்கேன்.. அடுத்த கேள்விய வீசுவோம்..) (கண்ஸ் பக்கம் திரும்பி...) ”இந்த சதி பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?”

கண்ஸ்: (எந்தச் சதியப் பத்தி கேக்கறாரு? நாமதான் மூச்சுக்கு முன்னூறு சதி பண்ணறோமே... ) ”சதியா?”

ராக்: ”அதாங்க..... இந்தப் பொண்ணுங்க.... தீயில.......”

கண்ஸ்: (அடேங்கப்பாஆஆஆஆ... எனக்கு பதில் தெரிஞ்ச மாதிரி ஒரு கேள்வியக் கூட கேட்க மாட்டீங்களா???...) ”அதாவதுங்க.. அந்தக் காலத்துல... மறுபடியும்... நான் பொறக்கறதுக்கு முன்னால.. ஒவ்வொரு ராஜ்ஜியமும் தங்களுக்குள்ளாற சண்ட போட்டுப் போட்டு... தோத்துப் போன நாட்டுப் பொண்ணுங்க எதிரிங்க கிட்ட இருந்து தங்கள காப்பாத்திக்க தேர்ந்தெடுத்த வழி.. காலப்போக்குல அப்படி இப்படி மாறிப்போச்சு... இப்பல்லாம் இல்ல....”

(கண்ஸ் மண்டைக்குள் ஆயிரம் நரம்புகள் பரபரப்பாக முடிச்சிடுகின்றன... அடுத்ததா காந்தியப் பத்திக் கேப்பாரோ...... ஸ்லம் டாக் மில்லியனர் பத்தி கேப்பாரோ?? அவரு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நாமலே அமெரிக்கன் ஹிஸ்டரி பத்தி கேட்க ஆரம்பிச்சிருவோமா? அப்பவாச்சும் புரிஞ்சுக்கறாரான்னு பாப்போம்.... கேள்வி கேக்கறது ஈஸி.... பதில் சொல்றது கஷ்டம்னு....)

ராக்: ”அப்புறம்.. இந்த கேள்விய நானும் ரொம்ப நாளா யார் கிட்டயாவது கேட்டு தெரிஞ்சுக்கனும்னு நினைக்கறேன்.. ”

கண்ஸ்: (அநியாயத்துக்கு இப்புடி புதிர் போடுறாரே...) ”என்ன தெரிஞ்சுக்கனும்ன்னு சொல்லுங்க.. உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்லத்தான நாங்க இருக்கோம்.. ”

ராக்: ”இந்த க்ரிக்கெட் ல விக்கெட் விக்கெட் னு சொல்றாங்களே.. அப்டின்னா என்னங்க?”

கண்ஸ்: ”(சாமீஈஈஈஈஈஈஈஈஈஈ... நீ தான் காப்பாத்தனும்....) அதுவந்துங்க................................................”

அனேகமாக நாதிராவும் பலமாக சாமியை வேண்டியிருக்க வேண்டும்..  வெய்ட்ரஸ் வந்து சேர்ந்தார்..

“இந்தாங்க நீங்க கேட்ட பிஸா”






ராக்கின் கவனம் பிஸா பக்கம் திரும்பியது.........  கண்ஸ் முதன் முறையாக முழுமையாக..... நிம்மதியாக.... கண் மூடித்..... திறந்துகொண்டார்....



~~~~~~~~~~~~~~~உரையாடல் அத்தோடு முடிவுற்றது~~~~~~~~~~~~~~~~~~


அடைப்புக்குறிக்குள்ளே இருக்கும் ரியாக்‌ஷன் முழுக்க கற்பனை.. மத்தபடிக்கு உரையாடல் அப்படியே நிஜம்...

16 comments:

  1. நாதிராஆஆஆஆஆஆ..................????????

    ReplyDelete
  2. நல்லாவே எழுதுறீக... இன்னும் லைசன்ஸ் குடுக்கலியா?

    ReplyDelete
  3. ஹ‌ ஹ ஹா!!! அருமை சந்தனா!!! இங்க இப்படியே கேள்வி கேட்டு காதை கொடயறவனுங்க ரொம்பவே சாஸ்தி... என்னையும் கணவரையும் பாத்து மெக்சிகனான்னு மொத கேள்வி .. அப்புறம் எதுக்குத்தான் அரேஞ்ட் மேரேஜ் பத்தி கேட்டு ... ஆர் யூ ஹேப்பின்னு ஒரு 10 கேள்வி... தெரியாம ஜிம்ல தாலி தெரிஞ்சா அப்புறம் "திஸ் இஸ் லைக் யுவர் வெட்டிங் ரிங்"ன்னு ஒரு கதை ... போன் இன்டர்வியூல பேசிட்டு நேர் முகம் போனா.. ஆ.. நீ எந்தூரு.. பேச்சில ஒன்னுமே தெரியலையேன்னு ஒரு கிழம் பீட்டர் விடும்... Nice work... cant wait for your next post:)

    ReplyDelete
  4. நன்றி வசந்த்.. அது அந்தப் பொண்ணோட புனைப் பெயருங்க.. நீங்க பயந்துட்டீங்களா? :)

    இல்ல.. இன்னும் கொஞ்சம் நாள் ஓட்டிப் பாப்போம்.. சரியா ஓட்டுனா தொடர்ந்து ஓட்டலாம்.. :))

    ReplyDelete
  5. இலா.. இந்த மாதிரி கேள்விகள எழுத ஆரம்பிச்சா எழுதிட்டே இருக்கலாம்.. :)ஆனா இதயெல்லாம் தெரிஞ்சுக்கனும்னு நினைக்கற அவங்க ஆர்வம் பிடிச்சிருக்கு.. பஸ் ல எங்கூட பேச ஆரம்பிச்ச ஒருத்தருக்கு நம்ம மேரேஜ் ஸ்டைல கேட்டு மயக்கம் வராத குறை தான் :))அப்புறம் கேப் ட்ரைவர்ஸ்.. அத அப்புறமா எழுதறேன்..

    நெக்ஸ்ட் போஸ்ட்டா? :)) என்ன எழுதறது? :))

    ReplyDelete
  6. எல்லாப் பதிவுகளும் நல்லா இருக்கு சந்தனா..தொடருங்க!

    லைசென்ஸ் வாங்கி பல நாளாச்சுன்னு கேள்விப்பட்டேன்..இன்னும் எல்போர்டாவே சுத்தினா எப்புடி? ஹெவி வெஹிகிள் லைசென்ஸ்-ஐ ஒளிச்சு வெச்சுட்டு எல்போர்டுன்னு சொன்னா நம்பிடுவோமா?? :) :D

    ReplyDelete
  7. வாங்க மஹீ.. நன்றி.. நானும் இப்பத்தான் அங்கிட்டு எட்டிப் பாத்தன் :)

    எல் போர்ட் ஆ இருக்கறதுலயும் ஒரு நல்லது இருக்கு.. எப்பவாச்சும் தப்பு பண்ணிட்டா போர்ட் மேல பழியப் போட்டுடலாம் :)

    ReplyDelete
  8. சந்தனா, நல்லா இருக்கு. தொடர்க உங்கள் பணி.( நாதிரா............ ஏதோ அதிராவை மனதில் கற்பனை பண்ணி எழுதியது போல இருக்கு)
    வானதி

    ReplyDelete
  9. வாங்க வானதி.. இதென்ன புதுக் கதை? :)) அதிரா பாத்தா டென்ஷன் ஆகிடப் போறாங்க :)) எங்க ஒளிஞ்சுட்டு இருக்கீங்க அதிரா?

    ReplyDelete
  10. படிச்சு முடிச்சும் நல்ல நிலைமைலதான் இருக்கேன். :)
    ரசிச்சேன் சந்தனா. :))

    (கடவுளே.. கடவுளே... எனக்கு இந்த தடவையும் 'பனிப்பெண்' படம் வந்துரணும்ம்ம்ம்..., :) )

    ReplyDelete
  11. //ரசிச்சேன் சந்தனா. :))//

    பிஸாவை தானே இமா சொல்றீங்க? :)))

    ReplyDelete
  12. கங்ராட்ஸ்.. படிச்சு முடிச்சும் நல்ல நிலமையில தான் இருக்கீங்க.. neengale mudivu panitingale

    ReplyDelete
  13. எல்லாம் ஒரு நம்பிக்கை தான்.. எழுதி முடிச்சே நான் நல்லாத் தான இருக்கேன்..

    ReplyDelete
  14. அட! பரவாயில்லையே. :)

    ReplyDelete
  15. இமா.. ரொம்பக் கஷ்டப்பட்டு பனிப்பெண்ணத் தூக்கிட்டு உங்க அழகான :)போட்டோ வர மாதிரி பண்ணிட்டேன்.. ஒரே லைன் ல வர வைக்கத் தான் தெரியல இன்னமும்..

    ReplyDelete
  16. அப்பாடா! :)
    தாங்க் யூ.. தாங்க் யூ... தாங்க் யூ. :)

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)