16 February 2010

கன்னடனும் தமிழனும்..

இங்கு ஒரு கன்னட தோழி இருக்கிறார்.. இவருக்கு சில தமிழ் நண்பர்கள்.. நன்றாகவே மிளகாய் அரைத்து அனுப்புவார்கள்.. எம்மைச் சந்திக்கும் போதெல்லாம் அம்மிளகாய்களைப் பற்றிய தெளிவு பெறுவார்..

அவ்வாறு கேட்கப்பட்ட சில கேள்விகளும், அவைகட்கு  தீவிர தமிழ் ஆராய்ச்சிக்குப் பின்னர் கண்ஸால் கண்டறியப்பட்டு சொல்லப்பட்ட பதில்களும்..

தோழி: ஆப்புன்னா என்னா?

கண்ஸ்:  ஆப்பா? ம்ம் இரு.. யோசிக்கனும்.. (கிட்டத்தட்ட ஒரு நிமிடம் யோசித்தார்..) ஆங்கிலத்தில் wedge.. மரம் பிளக்க உபயோகிக்கும் ஒரு கருவி..  கூர்மையான சற்று நீளமான முனை கொண்டது..  மேல்பக்கம் அகலமாக, சுத்தியலைப் பாய்ச்ச ஏதுவாக இருக்கும்.. அடி மேல் அடி கொடுத்து சிறிது சிறிதாக உள்ளே செலுத்தப்படும்..




ஆப்பசைத்த குரங்கைப் போன்று மாட்டிக்கொண்டதாக பழமொழியும் உண்டு..



ஆனால் சொல்வழக்கப்படி, ஏமாற்ற உணர்வை கொஞ்சம் நகைச்சுவை கலந்து சொல்ல உபயோகப்படுத்தப்படுகிறது..  


தோழி: வட போச்சே?

கண்ஸ்:  வடை கிடைக்காமல் போய்விட்டது! அதாவது, அதை வேறொருவர் எடுத்துக்கொண்டுவிட்டார்..



சொல்வழக்கம்.. இருக்கையொன்றைப் பிடிக்க வேகமாக ஓடி வந்து  பார்த்தால்.. அங்கு ஏற்கனவே ஒருவர் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருப்பார்..  அப்போது ஏற்படும் உணர்வை வெளிப்படுத்தச் சொல்வது..

தோழி: காவேரிய அனுப்புன்னா?????

கண்ஸ்: ஆஹா.. இத எந்த மொழியில எப்படி விளக்கினாலும் உனக்குப் புரியப் போறதில்ல :))) விட்டுடுவோம்..


இதெல்லாம் பரவாயில்லை..

இன்னொரு நாள் இந்த பாட்டை ஓட விட்டு கேட்கச் சொல்லியிருக்கிறார்கள்.. இதைக் கேட்டால் சொர்க்கத்திலிருப்பது போல உணர்வைத் தருமாம்..

பாடல்..

தோழி: பாடலின் முதல் மூன்று வார்த்தைகளுக்கு அர்த்தமென்ன?

கண்ஸ்: முதல் வார்த்தைக்கு அர்த்தம் (??!!) நீளமான தொங்கட்டானுடன் கூடிய தோடு..




இரண்டாவது மற்றும் மூன்றாவது வார்த்தைகள்.. என்னால் ஆகாத காரியம்... பதிவுலகத் தமிழறிஞர்கள் யாரையாவது கேட்டுச் சொல்கிறேன்..

யாருக்காவது அர்த்தம் தெரிந்தால் அந்தப் பேதைப் பெண்ணுக்கு உதவுங்களேன்!! ப்ளீஸ்...

(இப்போதைக்கு இது மட்டுந்தான்.. இன்னும் எதுக்காவது அர்த்தம் துழாவினால் சொல்கிறேன்.. )

13 comments:

  1. ஹி..ஹி..டோல்டப்பி என்றால் தாளம் போடும் டப்பி.. (டோல் = தாளம்) :))))))))))))
    மா என்றால் புஜ்ஜி-செல்லம்-டியர் -டார்லிங் மாறி கேர்ள் பிரெண்டை கூப்படர மேட்டரு! ;)

    இன்னா எல்போர்டு..இன்னமும் பச்சப்புள்ளயாவே இருந்தா எப்பூடி? ஜீனோ மாதிரி:) ஆள் வளரலைன்னாலும் அறிவு வளரனும்!!:D :D அப்பத்தான் இப்பூடி கில்மா மேட்டரெல்லாம் டவுட்டு கிளியர் பண்ண முடியும்..அக்காங்!!

    ReplyDelete
  2. ஹி..ஹி..டோல்டப்பி என்றால் தாளம் போடும் டப்பி.. (டோல் = தாளம்) :)))))))))))))
    மா என்றால் புஜ்ஜி-செல்லம்-டியர் -டார்லிங் மாறி கேர்ள் பிரெண்டை கூப்படர மேட்டரு!;)

    இன்னா எல்போர்டு..இன்னமும் பச்சப்புள்ளயாவே இருந்தா எப்பூடி? ஜீனோ மாதிரி:) ஆள் வளரலைன்னாலும் அறிவு வளரனும்!! :D:D அப்பத்தான் இப்பூடி கில்மா மேட்டரெல்லாம் டவுட்டு கிளியர் பண்ண முடியும்..அக்காங்!!

    ReplyDelete
  3. ஆத்தீ, ப்ரொஃபைல் படத்தப் பாத்து பயந்தே போயிட்டேன். உங்க பிளாக் பேரையும் மாத்துனா நல்லது. இன்னும் கட்டுமானப் பணி முடியல போலன்னு நினக்க வக்கிது!!

    இதுப்போல நிறைய அழ(ழு)குத் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன; அதெல்லாம் புரியணுன்னா நெறய தமிழ்ப்படம், சீரியல்கள் & பதிவுகள் பார்க்க/ படிக்கச் சொல்லுங்க தோழியை!!

    ReplyDelete
  4. லாலாக்கு டோல் டப்பி மா....

    ஹரிஹரனையோ இல்லை மிர்ச்சி சிவாவையோ கேட்கச் சொல்லுங்கள்...

    ஆமா கண்ஸ்னா யாரு?

    ReplyDelete
  5. ha ha ha.. very funny... suuper kannamaa....

    ReplyDelete
  6. வாங்க தமிழறிஞரே.. உங்களப் போல ஒருத்தரத் தான் எதிர்பார்த்திருந்தன்.. நம்ப நன்றிங்கோ.. கண்டிப்பா சொல்லிடறமுங்கோ ஜீனோ.. அறிவுக்கார பயபுள்ளயா இருக்கீங்க..

    எப்புடி எப்புடியெல்லாம் மொழிபெயர்க்கறாங்கப்பா!!!

    ReplyDelete
  7. அண்ணாமலையான் எங்க ஓடறீங்க? நில்லுங் நில்லுங்..

    ReplyDelete
  8. பயந்துட்டீங்களா ஹூசைனம்மா.. அப்படி ஒரு எஃபக்ட் வரனும்ங்கறதுக்காகத் தான் அப்பிடி ஒரு படத்தப் போட்டதே :)) ஒரே சந்தோஷமா இருக்கு போங்க :))

    பேர மாத்தறதுக்கு யோசிச்சிட்டு இருக்கேன்.. நல்ல தமிழ்ப்பேர் கிடைச்சதும் மாத்திடறேன்..

    தமிழ்ப்படம் பாக்கச் சொல்லியிருக்கேன்.. பாப்போம்..

    ReplyDelete
  9. வாங்க முகிலன்.. ஹரிஹரன் சிவா - இவங்களையெல்லாம் எப்பவாச்சும் சந்திச்சா கண்டிப்பா கேட்டுப் பாக்கறேன்.. :))

    கண்ஸ் - பல்வேறு நிஜப் பாத்திரங்களைச் சித்தரிக்கும் ஒரு கற்பனைப் பெயர்..

    ReplyDelete
  10. நன்றி இலா.. அந்தப் பொண்ணு பாக்க க்யூட்டா குட்டிப் பொண்ணாட்டம் இருக்கும்.. அது இப்படி அப்பாவித்தனமா சந்தேகங் கேக்கறப்பெல்லாம் எங்களுக்கும் சிரிப்பு பொத்துகிட்டு வரும்.. ஹா ஹா..

    ReplyDelete
  11. எல் போர்ட்... தோழியின் கேள்வியும்... கண்ஸின் பதிலும் சூப்பர்.. இதைவிட அழகான கேள்வியும் பதிலும் எந்த பூவிலும் கிடைக்காது... வக்கேசன் முடிஞ்சுபோச்சுப்போல இல்ல?

    ReplyDelete
  12. இல்ல அதிரா.. இன்னிக்கு சிக் லீவ்.. நேத்து ஆஃப்.. சின்ன இடைவேளை மாதிரி கிடைச்சது.. அதான்.. நாளைக்கு மறுவடியும் கிளம்பனும்..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)