27 August 2010

இதுக்கு என்ன தான் முடிவு? 2

(இதுக்கு முன்னாடி ஒரு பாகம் இருக்கு.. லிங்க் எல்லாம் தர முடியாது :)) இதுக்கு முன்னாடி பதிவ நீங்களே போய் படிச்சுக்கோங்க :)) )

ஆச்சு.. இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருக்கு இன்னிக்கு.. சீக்கிரம் எல்லாத்தையும் செட்டில் பண்ணியாகனும்.. சகுந்தலா துடைத்தவாறே அடுத்து செய்ய வேண்டிய வேலைகளைக் கணக்கிட்டாள்..

மொதல்ல பாஸ்கரனுக்கு போனப் போடனும்.. அப்புறம், ஆஃபிசுக்கு போய் வரனும்... பேட்ஜ திருப்பித் தரனும்.. ஜான் அங்கிள முடிஞ்சா பாத்து பேசனும்.. கணக்கு நீளத் துவங்கியதைக் கண்டு அச்சமாயிருந்தது..  அவசர கதியில் சைக்கிளின் இதர உபகரணங்களையும் வெளியே எடுத்து வைத்தாள்.. அவைகளைக் கண்டதும் இன்னமும் துக்கம் பீறிட்டது.. 

சைக்கிள் வாங்கச் சென்ற போது தான் தெரிந்தது, இந்தியாவில் கிடைத்தது போல முழுமையானவை இங்கு கிடைப்பதில்லையென.. அங்கு சைக்கிள் பிரதான வாகனம் என்பதால், கூடவே வரும் பூட்டு, நேராய் நிறுத்தக் கூடிய ஸ்டேண்ட்,  பெரிய கேரியர்.. அப்புறம், மிக முக்கியமாக, உறுதியான ப்ரேக், பின்னால் பார்க்கக் கூடிய கண்ணாடி, பெல்.. என ஊர் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டு இருந்தன.. உயரமும் அப்படியே.. இங்கு அப்படியில்லை.. ரொம்ப நேரம் தேடி, கிட்டத்தட்ட அங்கு ஓட்டியதைப் போன்ற ஒன்றைக் கண்டார்கள்.. சீட்டுக்கு தனியாக குஷன், காய்கறி வாங்கி மாட்டி வர முன்னால் ஒரு கூடை, பின்னால் பை வைத்துச் செல்ல கேரியர், பம்ப், ஹெல்மெட், தனியே பூட்டு என கூட சுமார் ஏழெட்டு உபகரணங்களை தேர்ந்தெடுத்து வாங்கி வந்தார்கள்.. 

அதிலும், அந்தக் கூடையைக் கண்டதும், தாங்கமுடியாமல் முகம் சுருங்கியது.. சைக்கிளையாவது கடையில் இருந்து வரும் போது ஓட்டி வந்தாள்.. அந்தக் கூடை.. ம்ஹூம்.. 

இனி என்ன யோசிச்சு என்னாவப் போவுது... பாஸ்கரா.. உங்கையில தான் எல்லாம் இருக்கு.. 

வழக்கம் போல போனை எடுக்கவில்லை பாஸ்கரன்.. அவன் எடுத்திருந்தால் தான் அதிசயம்.. எரிச்சலுடன் அதை வீசிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கலாமென முடிவு செய்த போது, ”கால் ஃபர்ம் பேஸ்கர்ன்” என்று சத்தமிட்டது செல்பேசி..

“சகீஈஈஈஈஈஈஈஈ”

”ம்ம்.. பரவாயில்லயே.. இன்னிக்கு நீயே திருப்பி கூப்பிட்டுட்ட”

“சரி.. நான் லைப்ரரில இருக்கேன்..”

எப்பவும் சுருக்கமாக பேசித் தான் பழக்கம் அவனுக்கு.. அவன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவன் என்றுமே நேரடியாக பதிலளித்ததில்லை.. 

”சரி, இன்னும் இருபது நிமிஷத்துல அங்கயிருக்கேன்...”

செல்லை அணைத்து பையில் போட்டுவிட்டு, விரைவாகக் கிளம்பி, ஐந்து நிமிடங்களில் ரயிலடிக்கு வந்து சேர்ந்தாள்..  பாஸ்கரனைப் பாத்து என்ன, குரலைக் கேட்டே வெகு நாட்களாகிவிட்டன.. 

ஆசைப்பட்டு வாங்கிய, ஓட்டியிருக்காத சைக்கிள் என்பதால் அதை பாதி விலைக்கு விற்க மனமில்லை.. நட்டமாயிடுமே.. சரி, பிரியமானவர்கள் யாருக்காவது சும்மா கொடுத்துச் செல்லலாம் என்று நினைத்த போது, முதலில் அணுகியது ஜான் அங்கிளை.. ஆனால், அவர் புன்னகையுடன் மறுத்து விட்டார்.. லேடீஸ் மாடலாம்.. விலைச்சீட்டு இருந்தால் கொண்டு வா, திருப்பிவிடலாம் என்றார்.. வாங்கியது எல்லாம் அப்படியே பத்திரமாயிருக்க, விலைச்சீட்டு மட்டும் எங்கு போய்த் தொலைந்ததெனத் தெரியவில்லை.. 

அடுத்ததாக நினைவில் வந்தவன் பாஸ்கரன்.. பாஸ் எனச் செல்லமாக அனைவராலும் அழைக்கப்படுபவன்..

தொடரும்..

(இன்னும் ரெண்டு பார்ட் போவும் போல.. முடிஞ்சா இன்னிக்கே எழுதிடறேன்.. )

27 comments:

  1. இன்னிக்கு வட எனக்கே எனக்கு!!:)))))

    ReplyDelete
  2. ஐ.. நானே இப்பத் தான் பப்ளிஷ் பண்ணுனேன்.. அதுக்குள்ளாற :)) உங்களுக்கு எதுக்கு வட? நீங்க சுடற வட இத விட டேஸ்டாயிருக்குமே :)

    ReplyDelete
  3. 2 மினிட்ஸ்..முதல் பார்ட் படிச்சிட்டு இங்க வரேன்..இது இப்போதைக்கு ஒன்னியுமே புரீல!ஹிஹி

    ReplyDelete
  4. இருங்க படிச்சிட்டு வரேன் :-))

    ReplyDelete
  5. சந்தனா,கதை முடிஞ்சிருச்சா? இல்ல இன்னும் தொடருமா??:)

    நானிருக்கும் இடமும் கிட்டத்தட்ட இப்படித்தான்.பக்கத்துல இருக்க கடையே 1மைல்.இங்கேயும் சைக்கிள் டாபிக் வந்தது,ஆனா கதை அப்படியே உல்டா!உங்கண்ணாத்த 'சைக்கிள் வாங்கிக்க,வாங்கிக்க'ன்னு அடம் புடிச்சாரு(அவரு கவல அவருக்கு:)) நான்தான் வெவரமா வேண்டாம்னு சொல்லிட்டேன்.அதுக்கு ரீசன்லாம் உன் கதைலயே இருக்கு!:)))))

    ReplyDelete
  6. ஹாஹ்ஹா.. மஹி.. உங்க கத உல்டாவா.. அண்ணாத்த வெவரந்தான் :)) கத இருக்கு.. தொடரும் போட மறந்துட்டுனா.. இருங்க மாத்திடறேன்..

    ReplyDelete
  7. மெதுவா.. மெதுவா.. பாத்து பழகோனும் ஜெய்.. இல்லாட்டி சைக்கிளோட நீங்களும் விழுந்து வைப்பீங்க.. சரி, நான் தொடரப் போறேன்..

    ReplyDelete
  8. எனக்குப் பிரச்சினையே இல்லை சந்து. ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது(என்னா பெருமை). நான் சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டு ஆர்வக்கோளாறுல வேகமா ஓட்டி வைக்கோல் போரில் மோதி கீழ விழுந்து ஒருமாசம் பெட்டுல கிடந்து...அதெல்லாம் வரலாறு :)

    ReplyDelete
  9. :)) ம்ம்.. ஓக்கை.. ஓக்கை. அதனாலென்ன, கார் ஓட்டிட்டாப் போவுது.. கீழ விழாம ஓட்ட முடியுமா கவி? அடி பலமா பட்டுடுச்சோ? வைக்கோல் போருல மோதினது பெரிய அடியா? :))

    ReplyDelete
  10. வைக்கோல் போருல மோதினதுல நான் பல்டி அடிச்சுல்ல கீழ விழுந்தேன் :(. அடி ரொம்ப பலம். அன்னிக்கு சைக்கிளை தொட்டதுதான் அதுக்கப்புறம் சைக்கிள் என் ஜென்ம விரோதி. யாராவது டபுள்ஸ் கூட்டிட்டு போறேன்னு சொன்னாக்கூட பெரிய கும்பிடுதான் :)

    ReplyDelete
  11. டபுள்ஸ்க்கு கூடவா? :) நல்லாத்தான் பயந்து போயிருக்கீய.. சரி, ஆள் சைசுக்கு ஏத்த மாதிரி சின்னதா வாங்கிப் பழகலாம்.. இப்பவும் ஒன்னும் வயசாயிடல.. டூ வீலர் ஓட்டுவீங்களா?

    ReplyDelete
  12. சைக்கிள் அனுபவத்துக்கு அப்புறம் எல்லா வாகனங்களும் ட்ரைவர் உதவியுடன் தான் :). டூ வீலருக்கு டிரைவர் அப்பா அல்லது அண்ணா. காருக்கு ட்ரைவர் ரங்ஸ் அல்லது கம்பெனி ட்ரைவர் அல்லது வீட்டிலுள்ள ட்ரைவர் :)

    ReplyDelete
  13. கார் ஓட்டுவதற்கு ரங்ஸ் அனுமதியில்லை :( நம்ப மேல அம்பூட்டு நம்பிக்கை

    ReplyDelete
  14. :)) நல்லவேள நடக்கறதுக்கு ட்ரைவர் போடாம இருந்தீங்களே :)

    சைக்கிள்ல பல்டியடிச்சதுக்கே இப்பிடின்னா... கார்ல பல்டியடிச்சவங்களயெல்லாம் என்னன்னு சொல்றது?

    ஏதாவது வாகனம் பழகிக்கோங்க கவி.. சுதந்திரமா உணர்வீங்க..

    ReplyDelete
  15. சரி, அடுத்த பார்ட் எயுதப் போறேன்.. இல்லன்னா ரீச்சர் வந்து மெரட்டுவாங்க..

    ReplyDelete
  16. //சரி, ஆள் சைசுக்கு ஏத்த மாதிரி சின்னதா வாங்கிப் பழகலாம்.. //

    என் உயரம் 5'7" :)

    ReplyDelete
  17. இங்கே தனியே வெளியில் போய் வருவது பாதுகாப்பு இல்லை சந்து. அதனால் கார் ஓட்டத் தெரிந்தாலும் ரங்ஸ் அல்லது ட்ரைவர் உதவி இல்லாமல் போக முடியாது :(

    ReplyDelete
  18. சந்தூ! உங்க புண்ணியத்தில இப்ப தான் சைக்கிளை சுத்தி இருக்க இடம் ( கராஜ்) அதை கூட்டி பெருக்கி இருக்கேன்.. இனி நாளைக்கு சைக்கிளை தொடைச்சிடுவேன்... இப்படி நீங்களும் பார்ட் பார்ட்டா போட்டா என் சைக்கிளுக்கும் விடிவு வந்திடும்... அது பாடும் "நான்காண்டு காலம் நான் வான் பார்த்ததில்லை.. தார்ர் பார்த்ததில்லை.. இன்றல்லவோ புது வேகமோ" ந்னு...

    வித்திடிங்களா??

    ReplyDelete
  19. கெதியாத் தொடருங்கோ சந்தூஸ், இல்லாட்டி இதிலயும் L போர்ட்டா என்று சந்தேகம் வரப் பாக்குது.
    ~~~~~~~~~~~~

    //வாங்கிக்க,வாங்கிக்க'ன்னு அடம் புடிச்சாரு(அவரு கவல அவருக்கு:)) நான்தான் வெவரமா வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்கு ரீசன்லாம் //
    ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!!! ;)
    உங்க ஊர்ல சைக்கிள்ல வச்சு ஓட்டிப் போக நாய்க்குட்டி... அது என்னாது!! மோக்லியா!! ஜிம்மியா!! சீனுவா!! இல்ல... வாலில்லாத... ஹும் பேர் மறந்து போச்சே!! யாரும் இல்..லை. ;)) அதானே ரீசன்!! எப்புடீ!! ;))))
    ~~~~~~~~~~

    கவீ... ஒரேயடியா டாடாய்ஸ்ஸா!!!! ;)))))))) டிஷ்யூ அனுப்பட்டா!! ;)

    ReplyDelete
  20. யுரேகா!! சீனு! சீனு!! சீனுவேஏ...தான். ;))

    ReplyDelete
  21. டாடாய்ஸ பயங்கரமா ரீவைண்ட் பண்ணி... கண்டு புடிச்சுட்டேன்ன்ன். ;) வால் போனவர் 'ஜிண்டு'.

    தண்ணி, உங்க பின்னாடி ஒளிஞ்சுக்கறேன், அண்ணி அடிக்க வராங்க. ;)

    பாத்தீங்களா சந்து, உங்க புண்ணியத்துல.. லேபிளோட வச்சு இருந்த 'சைக்கிள' நானும் தூசு தட்டிட்டேன். ;)

    ReplyDelete
  22. சந்தூ, மற்ற பாகம் போடுங்கோ.
    ஊரில் இருக்கும் போது சைக்கிள் ஓடினேன். இங்கு வாங்க ஆசை. ஆனா இந்த ஹெல்மெட் தான் நினைச்சா கடுப்பா வரும்.
    மகி, அண்ணாத்தைக்கு சைக்கிள் வாங்கி குடுங்கோ. உங்களுக்கு கார்!!! எப்பூடி நம்ம ஐடியா????

    ReplyDelete
  23. /அண்ணாத்தைக்கு சைக்கிள் வாங்கி குடுங்கோ. உங்களுக்கு கார்!!! எப்பூடி நம்ம ஐடியா???? /ஐடியா சூப்பர்தான் வானதி! அவரு பைக்(இந்த ஊரு பைக் இல்லீங்கோ,நம்ம ஊரு மோட்டார் பைக்) வாங்கிட்டு காரை எனக்குத் தரப்போறாராம்!என்ன கொடும பாருங்க!!

    /யுரேகா!! சீனு! சீனு!! சீனுவேஏ...தான். ;)) /தப்பு இமா! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அது என் கசின் வீட்டுக்கு கொடுத்த ஜிம்மீஈஈஈ! ஒரு ப்ரெண்டு:)))))))) வீட்டுக்கு போயிட்டு கொண்டுபோனமே,அதானே சொல்ல வரீங்க?;)

    ReplyDelete
  24. அதே. ;(
    புஸ்ஸ்ஸ்ஸ்.....
    காத்துப் போச்சு சைக்கிளுக்கு. ;))

    ReplyDelete
  25. //ஒரு ப்ரெண்டு:)))))))) வீட்டுக்கு போயிட்டு //
    ஆ!!!! இப்புடியா கதை!!!!

    ReplyDelete
  26. படிச்சேன்..! அடுத்த பார்ட்டும் எழுதியாச்சு போல..

    ReplyDelete
  27. நன்றி கவி...

    இலா.. நான்காண்டு காலம் ரொம்பவே அதிகம்.. சிரிப்பா வருது உங்க பாட்டக் கேட்டு.. விற்கல.. தொடர்ந்து படிங்க... நாளைக்கு வெளிய எடுத்திருவீங்க தானே..

    இமா.. நன்றி.. இதிலும் எல் தான்.. என்ன சந்தேகம் உங்களுக்கு? :)) எப்பிடியோ இத எழுதினதால மூணு சைக்கிள்களுக்கு வீட்டு ஜெயில்ல இருந்து விடுதல கிடைக்கப் போவுதுன்னு நினைக்கயில புல்லரிக்குது இமா.. எழுத்துக்களால சமூகத்துல மாற்றம் கொண்டு வரனும்ன்னு சொல்றாங்களே.. அது இது தானா? சாதிச்சுட்டியே எல் போட்டு :))))))))))))

    ஃப்ரெண்டுக்கு பக்கத்துல வர்ற ஸ்மைலிகள கவனியுங்க இமா.. ஒரு கேட்ச் இருக்கு அதுல :))

    நன்றி வான்ஸ்.. இன்னிக்கு முடிச்சிடறேன்.. கண்டிப்பா வாங்குங்க.. நல்ல விஷயமது.. வேடிக்க பாத்துட்டே சீரான வேகத்துல சைக்கிள்ல பயணிக்கறது நல்ல அனுபவம்..

    நன்றி வசந்த்.. அங்க பதில் போட்டிருக்கேன்..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)