29 August 2010

முடிஞ்சாச்சு.. 5

(இதுக்கு முன்னாடி பதிவுகள்ல முன்னாடி பாகங்கள் இருக்கு.. புதுசா படிக்கறவங்க அங்கயிருந்து வந்தா நல்லது..)

சகுந்தலா தனது சைக்கிளை தெரிந்தவர்கள் யாருக்காவது கொடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்த போது, ஜான் அங்கிள்க்கு அடுத்ததாக நினைவுக்கு வந்தவன் பாஸ்கரன்.. கூடவே, லிண்டாவும் இருப்பதால், பெண்களுக்கான சைக்கிள் என்ற குறையிருக்காது.. இதை மனதில் கொண்டு தான் பாஸ்கரனை முன்பே கேட்டிருந்தாள்..இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆர்வத்தோடு சரியென்றவன், பின்னர் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, போன் சரியாக எடுக்காமல் இருந்தான்.. சரியென்று லிண்டாவுக்கு மெயில் அனுப்பிப் பார்த்தால், அவளும் பதிலளிக்கவில்லை.. சகுந்தலாவுக்கு இது மனதை நெருடிக்கொண்டிருந்தது.. கிளம்பும் நாளுக்கு முந்தின நாள் மறுபடியும் போன் செய்த போது, பாஸ்கரன் சகுந்தலாவை சந்திக்க விரும்புவதாகச் சொன்னான்.. அதற்காகத் தான் லைப்ரரி வந்திருந்தாள் சகுந்தலா..

படித்துக் கொண்டிருந்த பாஸின் முன்னால் சகுந்தலா ப்ரசன்னமானதும், சகீஈஈஈஈ என்று அவன் விளித்து புன்னகைக்க, இருவரும் வெளியே வந்தார்கள்..

“எங்கயாச்சும் உக்காந்து கொஞ்ச நேரம் பேசலாம்.. எங்க போலாம் சகி?”

”பக்கத்துல தான் ஸ்டார்பக்ஸ் இருக்கு.. இந்த நேரத்துக்கு அவ்வளவா கூட்டம் இருக்காது... நடக்கற தூரம் தான்.. “

ஸ்டார்பக்ஸில் அவனுக்கு ஒரு ஐஸ் டீயும், இவளுக்கு ஒரு ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தியும் வாங்கிவிட்டு, அருகிலிருந்த சோஃபாக்களில் அமர்ந்தார்கள்.. இவர்கள் நினைத்தது போலவே கூட்டம் குறைவாகயிருந்தது...

”நீயும் ஒன்னும் சொல்ல மாட்டேங்கற.. அவளும் ஒன்னும் பதில் போடமாட்டேங்கறா.. நாளைக்கு நான் கிளம்பனும்.. சைக்கிள என்ன பண்ண?”

“அவ இன்னும் கொஞ்சம் நாள்ல கலிஃபோர்னியா கிளம்பப் போறா”

”சரி, அதுக்கென்ன இப்ப.. அவங்கப்பாம்மா அங்க தான இருக்காங்க.. போயிட்டு வரட்டும்.. எனக்கு பதில் சொல்றதுக்கு என்ன?”

”இல்ல.. நிரந்தரமா போகப் போறா..” இறுக்கமான முகத்துடன் பதிலளித்தான் பாஸ்கரன்..

”ம்ம்....”  இது போன்ற சமயங்களில், எதிரில் இருப்பவர் தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள மவுனம் காப்பதே நல்லதாயிருக்கிறது.. மீண்டும் தொடர விருப்பமிருந்தால், அவர்களே சொல்வார்கள்.. இல்லையென்றால், சற்று நேரம் கழித்து, பேச்சை வேறு திசைக்கு மாற்றலாம்.. சகுந்தலா காத்திருந்தாள்..

”கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்றா..” சில நொடிகள் டீயை உறிஞ்சிய பின் பேச ஆரம்பித்தான் பாஸ்கரன்...

”பண்ணிக்கோங்க.. ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு தான?”

”ம்ம்.. பிடிச்சிருக்கு.. ஆனா, எனக்கு கல்யாணத்துல விருப்பமில்ல.. ”

”ஏன்..”

”தெரியல.. பொறுப்புகள், எதிர்பார்ப்புகள் அதிகமாகிடும்ன்னு தோனுது.. ”

”ஹும்.. ” பெருமூச்செறிந்தாள் சகி.. ”ஒன்னு வேனும்னா இன்னொன்ன இழக்கத் தான் வேனும்.. இதுக்கு பயந்தா எப்படி? உலகத்துல இத்தன பேரு பண்ணிக்கலையா?”

”இல்ல.. எனக்கான விருப்பங்கள் வேற.. எனக்கு அவள பிடிச்சிருக்கு.. அவளோட தோழமை பிடிச்சிருக்கு.. எனக்காக ரொம்ப கேர் பண்ணிக்கறா.. எல்லாம் சரி தான்.. ஆனா..”

”ம்ம்.. சொல்லு..”

”நான் எதிர்பார்க்கறது ஒரு நல்ல தோழிய.. இப்ப இருக்கற மாதிரியே நான் நானாவும், அவ அவளாவும் இருக்கனும்.. தனித் தனி வீடுகள்ல.. விரும்பும் போது சந்திச்சுக்கலாம்.. ஒருத்தருக்கொருத்தர் உதவி பண்ணிக்கலாம்.. கேர் பண்ணிக்கலாம்..”

”அத ஒன்னாயிருந்தும் செய்யலாமே?”

”இல்ல.. எனக்குன்னு நண்பர்கள் இருக்காங்க.. அவங்க வந்தா தங்கறதுக்கு வீடு வேனும்... அவங்களோடவும் நான் நேரத்தக் கழிக்கனும்.. ஒன்னாயிருந்தா சரி வரும்ன்னு தோனல.. ”

சகுந்தலாவுக்கு புரிந்தது.. அந்தப் பெண்ணை அவன் விரும்பினாலும், தன் வீட்டை, தன் வாழ்க்கையின் பாதியை அவள் ஆக்கிரமிக்கப் போவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

”உன் விருப்பம் புரியுது பாஸ்.. சரி, இந்த நண்பர்களே நாளைக்கு கல்யாணம் பண்ணிட்டுப் போயிடறாங்கன்னு வச்சுக்குவோம்.. அப்புறம் உனக்குன்னு யார் இருப்பா?”

”ம்ம்.. சரி தான்.. ”

”எல்லாப் பொண்ணுங்களுக்கும் ஏற்படற இன்செக்யூர் ஃபீலிங் அவளுக்கும் இருக்கு போல.. அதனாலத் தான் கல்யாணத்துக்கு கேக்கறா.. ”

”நான் அவளுக்கு கமிட் ஆகறேன்னு உறுதி கொடுத்துட்டேன்.. அப்புறம் என்ன பயம்?”

சிரித்தாள் சகுந்தலா.. ”உன் வார்த்தைக்கு என்ன உத்ரவாதம்? நாளைக்கே நீ மனசு மாறிட்டா?”

”இந்த நம்பிக்க கூட இல்லாம எப்படி? நான் நல்லவந்தான்..”

”நீ நல்லவனாவே இருந்துக்கோ.. சூழ்நிலை காரணமா மாற நேரிடலாம் இல்லையா? உங்கூட வேலை செய்யற, உன்னோட ஃபீல்ட்ல இருக்கற பொண்ண இன்னும் சில வருஷங்கள் கழிச்சுப் பிடிச்சுப் போகலாம் இல்லையா?”

:”அந்த மாதிரி அவளுக்கும் கூட ஆகலாம்.. ஆனா நான் அப்படி நினைக்கலையே?”

”சரி, இதுக்கு என்ன தான் முடிவு அப்போ?”

”அவ கலிஃபோர்னியாவுக்கு கிளம்பறா.. அடுத்த வாரம்.. ”

”சரி, போகட்டும் விடு.. ”

”எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு.. எனக்குன்னு யாரும் இல்லாத மாதிரி இருக்கு”..

”அவ எப்படி ஃபீல் பண்றா?”

”அவளுக்கும் கஷ்டமாயிருக்கு.. அதையெல்லாம் என் மேல கோபமாக் காட்டிட்டு இருக்கா...”

அந்தத் தோழியை முழுமையாய் ஏற்கவோ இழக்கவோ அவனது மனம் விரும்பவில்லை..

”உன்னுடைய விருப்பம் இதுதான்னு சொல்லிட்டுப் பழக வேண்டியது தானே? ”

”அவளுக்கும் தெரியும்.. ஆரம்பத்துல சரின்னு சொன்னவ, இப்ப ரொம்ப அட்டாச் ஆயிட்டா.. ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும், குழந்த பெத்துக்கனும்.. இப்படியிருக்கு அவளோட ஆசைகள்..”

பெண் மனம்.. சகுந்தலாவுக்குப் புரிந்தது.. என்ன தான் வளர்ப்பு முறை, நடை, உடை, பேச்சு, லட்சியங்கள் வேறுபட்டாலும், இங்குக்கும் அங்குக்கும் பெண் மனசு ஒன்றைத் தான் விரும்புகிறது..

”நியாயமான ஆசைகள் தான்.. ” என்றாள் மெல்லிய குரலில், தனது ஸ்மூத்தியைப் பார்த்தவாறே...

சகுந்தலாவுக்கு அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில், முடிவுகளில் தலையிட விருப்பமில்லை.. லிண்டாவும் அதை விரும்ப மாட்டாள்.. பாஸ்கரனுக்காக இவ்வளவு நேரம் பேசிப்பார்த்தாயிற்று.. அவர்களே யோசித்து அவர்களுக்காக முடிவெடுக்கட்டும்..

சூழலை இலகுவாக மாற்ற வேண்டி,

”எனக்கென்னமோ, நம்ம சினிமால வர்ற மாதிரி, அவ ஏர்போர்ட் வரைக்கும் போவா.. நீ வெளிய கண்ணத் தொடச்சிட்டு நிப்ப.. ப்ளேன் கெளம்புனதும், அவ வந்து உன்னோட தோளத் தொட்டு திரும்பிப் பாக்க வைப்பான்னு தோனுது”

மேலோட்டமாக புன்னகைத்தவாறே எழுந்தான் பாஸ்கரன்..

“என் கதையையே சொல்லி போரடிச்சுட்டேன்.. வா... சைக்கிளப் பாக்கலாம்”

இருவருமாக அவனது  காரில் அமர்ந்து வீடு சென்று சைக்கிளைப் பார்த்தபின்..... “என்னை விட வேற யார்கிட்டயாவது இருந்தா நல்லா உபயோகப்படுத்துவாங்கன்னு தோனுது” என்றான் கூலாக..

எதிர்பார்த்த பதில் தான்... சகுந்தலாவுக்கு பெரிய ஆச்சரியமில்லை...

“இத ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே சொல்லியிருந்தா என்ன குறைஞ்சா போயிருப்ப?” சகுந்தலா முறைக்க, அவன் குற்றச்சாட்டிலிருந்து நழுவி, “நாளைக்கு வழியனுப்ப வரட்டுமா?” என்றான்..

“கிழிஞ்சது போ.. உன்ன எதிர்பார்த்து உக்காந்திருந்தா, நான் இன்னும் ரெண்டு வாரத்துக்கு இங்கயே கிடக்க வேண்டியது தான்..”  சிரிக்காமல் சொன்ன சகுந்தலாவைப் பார்த்து சிரித்தவாறே பை சொல்லி கிளம்பினான்..

அவனை வழியனுப்பி வைத்துவிட்டு மேலே வந்து தனது இன்னொரு தோழியை அழைக்கலானாள்..

முடிந்தது..

21 comments:

  1. ஒன்னும் மட்டும் தெளிவா புரியுது.. சொல்ல வந்த விஷயத்த சுருங்கச் சொல்லக் கத்துக்கனும்.. எழுதறதே எல்லாரோடவும் பேசறதுக்குத் தான் அப்படின்றதால, எழுதினவுடனே போட்டுடறேன்.. கதைய விட கதையடிக்கறதல தான் கவனம் :))
    இனிமே, எழுதிட்டு, ஒழுங்கா எடிட் பண்ணி, ஷார்ட் அண்ட் ஸ்வீட் கதையா கொடுக்கனும்ன்னு விளங்குது :) உங்க பொறுமைய சோதிச்சதுக்கு மன்னிச்சிடுங்க.. அடுத்த வாட்டி, சரி செஞ்சுடலாம்..

    இலாவுக்காக - சைக்கிள் இப்போ கடைசியா சொன்ன தோழிகிட்ட இருக்கு :)))

    ReplyDelete
  2. இன்னமும் கதை புரியாதவங்களுக்காக.. கல்யாணத்தில் விருப்பமில்லாத காதலன், இப்போ அதை விரும்பற காதலி.. இது தான் சப்ஜெக்ட்.. ஒருத்தொருத்தரப் பத்தி ஒரு பகுதி எழுதினதுக்கு காரணம், அவங்களப் புரிஞ்சுகிட்டாத் தான் அவங்களோட விருப்பங்களுக்கான நியாயங்களும் புரிய வரும்.. இதுல சகுந்தலாவும் சைக்கிளும் இடைச்செருகல்..

    முடிவு?? தெரியல.. உங்க முடிவுக்கே விட்டுடறேன்..

    ReplyDelete
  3. உரையாடல் நல்லா இருந்திச்சு..

    முடிவுன்னு எதுனாலும் சொல்லியிருக்கீங்களா? டவுட்டு.

    //என்னை விட வேற யார்கிட்டயாவது இருந்தா நல்லா உபயோகப்படுத்துவாங்கன்னு தோனுது//

    இது சைக்கிளுக்கு மட்டும் சொன்னதா இல்லை பாஸோட லைஃபுக்கும் சேர்த்தா?

    ReplyDelete
  4. நன்றி வசந்த்.. இல்ல.. முடிவச் சொல்லல.. ரெண்டாவது பின்னூட்டத்தப் பாருங்க..

    அது சைக்கிளுக்கு மட்டும் சொன்னது தான்..

    முடிவு, உங்க அனுமானம் மற்றும் விருப்பம்..

    ReplyDelete
  5. முடிவு... அனுமானிக்க முடியவில்லை. விரும்பவும் இல்லை.
    அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். ;)

    ReplyDelete
  6. கத முடிஞ்ச மாதிரியே ஃபீலிங் வரலை!! அப்புறம் ரெண்டு பேரும் என்ன ஆனாங்கன்னு ஒரு க்யூரியாஸிட்டி!! (உங்க சைக்கிளைப் பத்தி யாரு கவலைப்பட்டாங்க...)

    :-)))

    ReplyDelete
  7. முடிஞ்சிடுச்சா?! இப்போ சைக்கிள் குளிச்சு சுத்த பத்தமா இருக்கா?!

    அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்கட்டும். எங்கிருந்தாலும் எப்படியிருந்தாலும் வாழ்க வாழ்க வாழ்க :)

    ReplyDelete
  8. வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்
    ஆழக் கடலும் சோலையாகும்
    ஆசையிருந்தால் நீந்திவா

    (வாழ)

    பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
    காட்சி கிடைத்தால் கவலை தீரும்
    கவலை தீர்ந்தால் வாழலாம்

    (வாழ)

    கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
    கையில் கிடைத்தால் வாழலாம்
    கருத்தில் வளரும் காதல் எண்ணம்
    கனிந்து வந்தால் வாழலாம்
    கன்னி இளமை என்னை அணைத்தால்
    தன்னை மறந்தே வாழலாம்

    (வாழ)

    ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
    ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
    துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
    துடித்து நிற்கும் இளமை சாட்சி
    இருவராக ஆனபோதும்
    ஒருவராக வாழலாம்

    ReplyDelete
  9. என்னது இது கதையில நாங்கதான் சந்தேகம் கேப்போம் , இப்ப கமெண்டிலும் வந்துட்டீங்களே..அவ்வ்வ்வ்

    ReplyDelete
  10. சந்தூஸ்! நல்ல கதை.. உங்க கதை புண்ணியத்தில என் சைக்கிளை தொடச்சி வச்சேன்... குட்டி உதவியாளருக்கு வனிலா ஐஸ்கிரீம் சன்மானம் கொடுத்து...

    இந்த பாஸ் மாதிரியான ஆக்களை என்ன சொல்ல.. அவங்களோட பிரச்சனையே அடுத்தவங்க மெச்சற மாதிரி/ அட்மையர் பண்ணற மாதிரி வாழனும்ம்ம்னு நினைப்பாங்க போல... எனக்கு தெரிஞ்ச ஒருவர் உறவினர் அதி புத்திசாலி ... இப்படி குழம்பி போய் இருந்தார் கடைசில கல்யாணம் செய்துகிட்டாங்க.. இறக்கை யில் ஹெ போட்ட அக்காவும் குழலூதுபவரும்....உடனே ரெட்டை குழந்தையும் வந்தது...

    ReplyDelete
  11. நன்றி இமா.. அவங்க தான் தீர்மானிப்பாங்க.. பயப்படாதீங்க :))

    ReplyDelete
  12. முடிவு இல்லாததால அப்படித் தோனும் போல.. சொல்லியிருக்கற மாதிரியே ஒரு ஏர்போர்ட் சீன் வச்சிருந்தா சூப்பரா முடிஞ்சிருக்கும் :))

    உண்மையில பிரிஞ்சிடுவாங்கன்னு தான் நினைக்கறேன் :((

    கர்ர்ர்ர்ர்.. சைக்கிளால தான் கதையே..

    ReplyDelete
  13. சைக்கிள நானே குளிப்பாட்டி விட்டுட்டு வந்துட்டேன் :)ம்ம்.. அவங்க தான் முடிவு பண்ணுவாங்க.. அதுல ஏற்பட்ட வருத்தத்த பகிர்ந்துக்கத் தான் கதை..

    ReplyDelete
  14. //ஆழக் கடலும் சோலையாகும்//

    மண வாழ்வப் பத்திச் சொல்லியிருக்காங்களா ஜெய்லானி? :)))

    //பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்//

    உண்மைதான்..

    //கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
    கையில் கிடைத்தால் வாழலாம்
    கருத்தில் வளரும் காதல் எண்ணம்
    கனிந்து வந்தால் வாழலாம்
    கன்னி இளமை என்னை அணைத்தால்
    தன்னை மறந்தே வாழலாம்.//

    பொருத்தமா இருக்கே.. சகுந்தலா இடத்துல உங்கள விட்டுருக்கோனும்.. பாடியே சேர்த்து வச்சிட்டு வந்திருப்பீங்க :))

    //இருவராக ஆனபோதும்
    ஒருவராக வாழலாம்//

    இதான் இடிக்குது :)) பாஸ்க்கு ரெண்டு பேராத் தான் வாழனுமாம் :))

    ReplyDelete
  15. இலா.. நன்றி.. பாஸ் அப்படிட்ட ஆளான்னு தெரியல.. ஆனா தனக்கான ஸ்பேஸ் குறையக்கூடாதுன்னு நினைக்கறார்.. நெஜக் கத இன்னும் காம்ப்ளிகேட்டட்.. பாஸோட அப்பா அம்மா எல்லாம் வரதால :)) உங்க கதைல சேர்ந்துட்டாங்க போலயே..

    ReplyDelete
  16. சந்தூ, கதை நல்லாயிருக்கு. இப்படி நிறையப் பேரை பார்த்திருக்கேன். ஊரில் இருந்தா இதெல்லாம் நடக்குமா? இங்கே வந்து எல்லோருமே மாறிட்டானுங்க.

    ReplyDelete
  17. கதை முடிந்தாச்சா? காலங்கள் மாறமாற பழக்கவழக்கங்களும் மாறிட்டே வருது. பாஸ்கர் இப்போ எப்படி இருக்காரு?:)

    ReplyDelete
  18. நன்றி வானதி.. உண்மை தான்.. ஊர்ல parental pressure ஜாஸ்தி.. அப்பா அம்மா இப்படி இருக்க விடமாட்டாங்க.. தனி நபர் விருப்பத்துக்கு இங்க அதிக முக்கியத்துவம் தராங்க.. அவங்கவங்க வாழ்க்கை..

    நன்றி மகி.. முடிஞ்சது.. கேட்டுச் சொல்றேன் :)

    ReplyDelete
  19. (இதுக்கு முன்னாடி பதிவுகள்ல முன்னாடி பாகங்கள் இருக்கு.. புதுசா படிக்கறவங்க அங்கயிருந்து வந்தா நல்லது..)///////??????? திஸ் இஸ் டூ ஹன்ட்ரட் மச்!! பகுதி 1,2.....இப்பூடி போட்டா குறஞ்சா போயிடுவீக?
    எங்கள மாறி ஆடிக்கொருக்கா,அமாசைக்கொருக்கா,
    க்ருஷ்ணஜயந்திக்கொருக்கா வாரவகள்லாம் எப்பூடி படிக்கறது? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  20. எங்கடா இன்னும் காணோமேன்னு பார்த்தேன்.. வருகைக்கு நன்றி ஜீனோ..

    கிருஷ்ண ஜெயந்திக்கு ஒருக்கா வர்றவங்களுக்கு இதுவே டூ ஹன்ட்ரட் மச்! அதையும் சொல்லாம விட்டிருக்கணும் :))

    ReplyDelete
  21. சைக்கிள் பிரச்சனையும் தீரல... பாஸ்கரன் பிரச்சனையும் தீரல... அவ்வ்வ்வ்.... சரி சரி... கதை சொன்னா படிக்கணும்...ஆராய்ச்சி செய்ய கூடாதுன்னு திட்டுறீங்க ரைட்ஆ? ஹா ஹா ஹா...

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)